ஓர் பரிபூரண மனிதனின் வளர்ச்சி Jeffersonville, Indiana, USA 62-1014M 1நன்றி சகோதரன் நெவில். கர்த்தர் உம்மை ஆசீர்வதிப்பாராக. இக்காலையில் மீண்டும் இக்கூடாரத்தில் இருப்பது அருமையானது. உங்கள் எல்லோருக்கும் என் மகிழ்ச்சியான காலை வந்தனம். கர்த்தருடைய பிரசன்னத்தில் நம் எல்லோருக்கும் இந்நாள் ஒரு மகத்தான நாளாயிருக்கும் என்று நான் நம்புகிறேன். இக்காலையில் நான் உங்களுக்குக் கற்பிக்கத்தக்கதாக ஒரு பாடத்தையுடையவனாயிருக்கின்றேன். இது ஒரு முக்கியமானதென்று நான் நினைப்பதினாலும், ஜனங்களை அதிக நேரம் நிற்க வைக்காமலும் இருப்பதற்காகவும் நான் நேரடியாக பாடத்திற்குச் செல்ல விருக்கிறேன். 2இன்றிரவு, ''என் வாழ்க்கையின் வழிகாட்டி'' என்ற தலைப்பில் ஒரு செய்தியை அளிக்க விரும்புகிறேன். அநேகர் இன்றிரவு வருவீர்கள் என்று நான் நம்புகிறேன். உங்களுக்கென்று ஒரு சபையிருக்குமானால், நீங்கள் அச்சபையில் இருக்கவே நாங்கள் விரும்புகிறோம். உங்களுடைய ஸ்தானம் எங்கேயோ, அங்கே உங்களுடைய விளக்கு எரிய வேண்டும். அது உங்களுடைய கடமையாயிருக்கிறது. இப்பொழுது, நாங்கள் ஒவ்வொரு முறை இங்கு கூடிவரும் போதெல்லாம் இன்னும் அதிக இடம் உண்டாயிருக்க வேண்டுமென விரும்பிக் கொண்டேயிருக்கிறோம். ஆனால் அதைக் குறித்து சில சங்கடங்கள் எங்களுக்கு உண்டாயிருக்கின்றது. தர்மகர்த்தா குழு அதைக் குறித்து எல்லாவிதத்திலும் ஆராய்ந்து விட்டார்கள்; பலவாறாகவும் முயற்சி எடுத்திருக்கிறார்கள். ஓ! அதைப்பற்றியதான எத்தகைய காரியங்களை நாங்கள் சந்தித்திருக்கிறோம். ஆனால் சாத்தான், எது சரியானதோ அதற்கு எதிர்த்து போராடுகிறவனாயிருக்கிறான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் எப்பொழுதுமே சரியாக... 3சகோ. அந்தோனி எங்கிருக்கிறார் என்பதைக் குறித்து நான் வியந்து கொண்டிருக்கிறேன். நான் பார்க்கவில்லை... உம்முடைய தகப்பனாரை நான் சந்தித்தேன். நீங்கள் இங்கு அமர்ந்திருப்பதாக சொல்லப்பட்டதினால் நான் சபையாரிடையில் உங்களை தேடினேன். நீங்களும், நியூயார்க்கிலிருந்து வந்த உங்கள் தகப்பனாரான சகோ.மில்லானாவும் எங்களோடு இருப்பதற்காக நாங்கள் மகிழ்ச்சியுறுகிறோம். கர்த்தருக்குச் சித்தமானால் அடுத்த வசந்தகால விடுப்பில், கடல் கடந்த ஊழியத்திற்கென்று நான் நியூயார்க்குக்கு வரலாம் என்று நம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்கள் ஒவ்வொருவரும் இங்கிருப்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறோம். நீங்கள் இங்கிருப்பது மிகவும் அருமையானதாயிருக்கிறது. நேற்றைய இரவு நமக்கு, அல்லது அது எனக்கே மகத்தானதாயிருந்தது, ''தேவாலயத்தில் ஏசாயா'' என்பதைக் குறித்து சிந்தித்தோம். ஆகவே நீங்கள்... இன்று காலை, ''ஜீவிக்கிற தேவனின் வாசஸ்தலத்தைக் கட்டுதல்; அல்லது ஜீவிக்கிற தேவன் வாசம் செய்ய 'பரிபூரண மனிதன் என்ற கூடாரத்தைக் கட்டுதல், ஜீவிக்கிற தேவன் வாசம்செய்கின்ற ஜீவனுள்ள கூடாரம்' என்ற பொருளின் பேரில் நான் பேச அல்லது போதிக்க விரும்புகிறேன்.'' 4இங்கு நல்ல பாடல்கள் பாடப்பட்டன என்று நானறிந்தேன். நான் இங்கு வந்து அதைக் கேட்க முடியாமல் போய்விட்டது. இன்றிரவு நான் இங்கிருக்க முயற்சிப்பேன். டென்னசியை சேர்ந்த சகோ. அன்கிரன் (Bro. Ungren) (அது தான் அவர் பெயர் என்று நான் நம்புகிறேன்) என்பவரைக் குறித்து என்னிடம் என் மனைவி கூறினாள். கடந்த இரவு அவர் இங்கிருந்தார். இக்காலையில் நான் அவரை பார்க்கவில்லை. ஆனால் அவர் இங்குதான் எங்கோ இருக்கிறார் என்று நினைக்கிறேன். “மகிமையினின்று இறங்கி வந்தவர்” அல்லது “நீர் எவ்வளவு மகத்துவமானவர்'' என்ற பாடலை இன்றிரவு அவர் பாடி நான் கேட்க விருப்பமாயுள்ளேன். சகோ. அன்கிரன் பாடுவதை கேட்க எத்தனை பேர் விரும்புகிறீர்கள்? (சபையார், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) ஓ! இனிமையாகப் பாடுவதை நான் விரும்புகிறேன். அவருடைய குரல் ஒரு கட்டையான குரல் என்று என் மனைவி மேடா என்னிடம் கூறினாள். அது நாம் யாவரும் அறிந்துள்ள சகோ. பாக்ஸ்டர் என்னும் நல்ல பாடகரை எனக்கு நினைவுபடுத்துவதாயுள்ளது. ''மகிமையினின்று இறங்கி வந்தவர்'' அல்லது ''நீர் எவ்வளவு மகத்துவமானவர்!'' இப்பொழுது சகோ. அன்கிரன் எங்கு அமர்ந்திருக்கிறார் என்று நான் கண்டுபிடித்து விட்டேன் என்று நம்புகிறேன். ''சகோதரனே, இன்றிரவு இங்கு பாடுவீர்களா? இன்றிரவு இங்கிருக்க முயற்சி செய்வீர்களா?'' நல்லது. நான் யாருக்கும் சங்கடம் கொடுக்க விரும்புவதில்லை. நாம் ஏழு முத்திரைகளைப் பற்றி பேசும்போது சகோதரன் வருவாரானால், (நீங்கள் பாருங்கள்?) அப்பொழுது ''நீர் எவ்வளவு மகத்துவமானவர்!'' ''மற்றும் மகிமையினின்று இறங்கி வந்தவர்'' என்கிற அவருடைய பாடலையும் நான் பதிவு செய்ய விரும்புகிறேன். 5ஓ! கர்த்தருடைய ஊழியம் செய்வது அற்புதமல்லவா? (சபையார் ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி) நான் ஒரு கிறிஸ்தவனாக இல்லையென்றால் என்ன செய்வேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு கிறிஸ்தவனாக இருப்பது மிகவும் நன்மையான காரியம்; நான் மேலும் கீழும் குதித்து உச்சக் குரலில் கூக்குரலிட வேண்டுமெனும் உணர்ச்சி எனக்குள் தோன்றுகிறது. கிறிஸ்துவிலே நங்கூரம் பாய்ச்சப்பட்ட கிறிஸ்தவனைக் குறித்து நினைத்துக் கொள்ளுங்கள். நான் எப்பொழுதும் ஒவ்வொரு முறையும் இம்மனிதரின் பெயரைத் தவறாகவே உச்சரிக்கிறேன். அது, “S.T.” அல்லது “T.S” (அல்லது அதைப் போன்ற ஒன்று) சம்னர் - சகோதரர் சம்னர் சகோ. சம்னருக்கும் அவருடைய அருமையான மனைவிக்கும் நான் நன்றி சொல்ல விரும்புகிறேன். ஏழு சபை காலங்களின் செய்தியை தட்டெழுத்து (Typing) செய்ய அவருடைய மனைவிக்கு ஆறு மாத காலம் பிடித்தது என்று எண்ணுகிறேன்; இப்பொழுது அது முழுவதுமாக ஆயத்தம் செய்யப்பட்டு புத்தக வடிவில் வரவிருக்கிறது. சகோதரி சம்னர் அவர்களே, நீங்கள் செய்த ஊழியத்திற்காக ஊதியம் அளிக்க எங்களை அனுமதியுங்கள். அது மிகவும் கடினமான வேலை, அதிகப்படியான வேலையும் கூட. அதை முழுவதும் படித்து முடிக்க எனக்கு ஆறுமாத காலம் செல்லும். ஜனங்களுடைய கையில் அது கிடைக்கப்பெற்று அவர்கள் ஆராய்வதற்கேற்ற சமயம், இதுதான் என்று நாங்கள் நினைக்கிறோம். சில நிமிடங்களுக்கு முன்புதான் என் மகன் பில்லி என்னிடம் வந்து அது அச்சடிப்பவரிடம் செல்ல ஆயத்தமாயிருப்பதைக் காண்பித்தான். ஆகவே சகோதரியே, இக்கூடாரம் அதற்கான ஊதியத்தை உமக்குத் தரும். நீங்கள் ஊதியம் பெறாமல் அதை செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. இல்லையென்றாலும், நாம் அந்த புத்தகத்திற்கு விற்பனைக்கென்று ஒரு விலையை நிர்ணயம் செய்து அது விற்பனையாகும் போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட தொகையை நீங்கள் பெற்றுக் கொள்ளலாம். தர்மகர்த்தாக்களோடு அதைக் குறித்து கலந்தாலோசியுங்கள். அவர்கள் அதைக் குறித்து பொறுப்பேற்றுக் கொள்வார்கள். கர்த்தர் உங்களை மிகவும் ஆசீர்வதிப்பாராக. 6ஏறத்தாழ 100 வயதானவர்களாக சகோ. கிட் (Bro. Kidd) மற்றும் அவர் மனைவியும் இங்கிருக்கிறார்கள். சற்று முன்னர் அவர்களை நான் சந்தித்த போது சகோதரி கிட் என்னைப் பார்த்து, ''நான் மிகவும் வயதாகி விட்டேன் சகோ. பில்லி. ஒருவேளை நான் உங்களை சந்திப்பது இதுவே கடைசி முறையாகவும் இருக்கலாம்'' என்று கூறினார்கள். அதற்கு நான், ''ஓ! நீங்கள் அவ்விதம் கூறுவதை கேட்க நான் விரும்பவில்லை'' என்றேன். அவர்கள் ஒரு வயதான தகப்பனும், தாயும் போன்றிருக்கிறார்கள். அவர்களிருவரையும், நாங்கள் நேசிக்கிறோம். அவர்கள் சபைக்குள் வருவதை நான் பார்க்கும் போது ஏதோ ஒரு உணர்வினால் நான் பிடிக்கப்படுகிறேன்; நான் பிறப்பதற்கு முன்பிருந்தே அவர்கள் சுவிசேஷத்தை பிரசங்கித்துக் கொண்டிருக்கிறார்களென்றால் அதைச் சற்று எண்ணிப் பாருங்கள். இதோ நானும், இங்கிருக்கிறேன் என்று நான் சற்று எண்ணத் தொடங்கி, நானும் மிகவும் வயது சென்றவனாகிக் கொண்டிருக்கிறேன், ஊழியத்தை நிறுத்திக்கொள்ள ஆயத்தமாக வேண்டும் என்று எண்ணத் தலைப்பட்ட போது, சகோ. கிட்டும், சகோதரியும் வருவதைப் பார்த்தேன். அப்பொழுது நான், “தேவனுக்கு மகிமை! அல்லேலூயா!'' ”நான் நன்றாகவே இருப்பதாக உணருகிறேன், ஊழியத்தைக் கைவிடமாட்டேன்'' என்று நினைத்தேன். ஆம் ஐயா, அவர்களைப் பார்க்கும் போது, அவர்கள் நம்மை அவ்விதமான ஒரு எழுப்புதலுக்குள்ளாக்கி விடுகிறார்கள். அவர்கள் இன்னுமாக தொடர்ந்து ஊழியத்தில் காணப்படுகிறார்கள், அப்படியானால் என்னுடையவயதையும் திரும்ப நினைத்துக் கொள்ளுங்கள். இன்று காலை அவர்கள் புத்தகங்களையும், ஒலி நாடாக்களையும் கேட்டார்கள். அவர்கள் ஏறத்தாழ 100 வயதானவர்களானாலும் இவைகளை கொண்டு சென்று ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துகிறார்கள். நேற்று இரவு நாம் சிந்தித்த, ''உங்களுடைய இரண்டு சிறகுகள் எங்கே?'' ஆம், ''என்னுடைய சிறகுகள் எங்கே?'' என்று நான் எண்ணத் தொடங்கினேன். சகோதரி கிட் அவர்களே, உங்கள் வயது என்ன? (எண்பத்து ஒன்று). சகோ. கிட் அவர்களே, உங்கள் வயது என்ன? (எண்பத்து இரண்டு) எண்பத்து ஒன்று, எண்பத்து இரண்டு வயதாயிருந்தாலும், இன்னும் அவர்கள் தங்கள் இறக்கைகளை உபயோகித்துக் கொண்டு ஊழியத்தில் காணப்படுகின்றார்கள். 7ஓஹையோவில் ஏதாவது சங்கடம் என்றால் அதை சகோதரி கிட் அறிந்து என் வீட்டிற்கு தொடர்பு கொள்வார்கள். ஒரு நாள் அவர்கள் ஒரு சிறு குழந்தை, சிறு பெண் குழந்தை குறித்து என்னோடு தொலை பேசியில் கூறினார்கள்; அக்குழந்தை பிறக்கும் போதே, அதன் குடல்கள் வெளிப்புறம் தெரிந்த வண்ணமாகப் பிறந்தது. மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய பயந்து என்ன செய்வதென்று அறியாதிருந்தார். (சகோதரி. கிட், ''சவ்வுப்பை (Bladder)“ என்கிறார்.) நாங்கள் ஜெபித்தோம். அறுவை சிகிச்சை செய்து குடல்களை உள்ளே வைத்து தைத்து விட்டார்கள். பிள்ளை மரித்து விடும் என்று நினைத்தார்கள். ஆனால் அது உயிரோடிருந்தது. (துவாரம் இருக்கவில்லை) ஆகாரமானது சென்று கழிவு அகற்ற அதன் மலக்குடலில் துவாரம் இல்லாதிருந்தது. அப்பொழுது சகோதரி கிட் திரும்பவும் என்னிடம் தொடர்பு கொண்டார்கள். நாங்கள் திரும்பவும் ஜெபித்தோம். இப்பொழுது அப்பிள்ளைக்கு மலக்குடல் சீர்பட்டு நன்றாக இருக்கிறது. அதற்கு சாட்சியாக அந்த மருத்து வரும், சகோதரி கிட்டும் இங்கு உள்ளனர். பாருங்கள்? கர்த்தராகிய இயேசு மகத்தான சிருஷ்டிகர் என்பதற்கு இது ஒரு சாட்சி. சாத்தான் என்ன செய்ய முயற்சித்தான் பாருங்கள்? அப்பிள்ளையின் ஜீவனை எடுத்துவிடப் பார்த்தான். அதன்பின்... பாருங்கள், அந்த ஸ்திரீகர்த்தரை ஏற்றுக் கொண்டாள் - கர்த்தரிடம் வந்துவிட்டாள். அந்த மகத்தான அற்புதம் நிகழ்ந்த பின்பு சகோதரி கிட், அப்பிள்ளையின் தாயாரை கிறிஸ்துவினிடம் வழி நடத்தினார்கள். 8நேற்றைய தினம், கலிபோர்னியாவிலுள்ள ஒரு ஊழியக்கார சகோதரர் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். நான் முதன் முதலாக கலிபோர்னியாவிற்கு சென்றபோது அவரிடம் தங்கினேன். இவருடைய பேரனுக்கு பிறந்ததிலிருந்தே இருதயத்திலுள்ள நான்கு வழிகளில் (Valves) மூன்று திறப்பு வழிகளும் மூடியே இருந்தன. நான் இந்த சிறு குழந்தையின் சம்பவத்தை அவருக்குக் கூறினேன். ''அந்த குழந்தைக்கு தேவன் காரியத்தை சிருஷ்டிக்க முடியுமானால் உன்னுடைய பேரனையும் நிச்சயமாக சுகப்படுத்துவார்'' என்றேன். ''அச்சிறுவனை தைரியமாக இருக்கச் சொல்லுங்கள்'' என்றும் கூறினேன். பதினெட்டு வருடங்களுக்கு முன்பு, பதினாறு வருடங்களுக்கு முன்பு, நான் முதன்முதலில் கலிபோர்னியாவில் கூட்டம் நடத்தின போது அவன் பிறந்தான். நான் கலிபோர்னியாவில் இருந்தேன். அந்தக் கூட்டமானது அந்தப் பையனை... ஆனால் அக்குழந்தையில் ஏதோ தவறிருந்தது. அது நீல நிறமாக பிறந்தது. பிராணவாயுவை அதனுள் செலுத்தினார்கள், ஆனால் அது பிழைத்துக் கொள்வது போல் தோன்றவில்லை. மருத்துவர்கள் பரிசோதனைக்குப் பின்பு, அதன் இருதயத்தின் நான்கு திறப்புகளில் மூன்று திறப்புகள் மூடியிருப்பதைக் கண்டார்கள். ஒரே ஒரு திறப்பின் மூலமே அக்குழந்தை உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது. இப்பொழுது அப்பையன் தன் தகப்பனாரை அழைத்து, ''தகப்பனே, சகோ. பிரன்ஹாமை உடனே கூப்பிடுங்கள், சம்பவம் நிகழத்தக்கதாக கிறிஸ்துவிடம் கேட்கச் சொல்லுங்கள்'' என்று கூறினானாம். அது போதுமானதாயிருந்தது. ஓ, என்னே! அவர்கள் கண்டதான சக்தியைப் பாருங்கள். சரியான நேரத்தில் சரியான காரியம் என்பதைப்பற்றி நேற்றைய இரவு பேசப்பட்டதை கவனியுங்கள். 9நல்லது, இவ்விதமாக நாம் பேசிக் கொண்டேயிருப்போமானால் நாம் ஒருபோதும் செய்திக்கு வர முடியாது. நாம் வர முடியுமா? இது, ஒரு குளிர்ச்சியான காலையில் உள்ள சர்க்கரைப் பாகு போன்றிருக்கிறது. ஒன்றோடொன்றாக நெருக்கமாக இணைந்து அவ்வளவு அடர்த்தியாக காணப்படுகின்றது. அவ்விதமான ஒரு ஐக்கியத்தை நாம் கொண்டிருப்பதற்காக மிகவும் சந்தோஷமாயிருக்கிறோம். ஆம், ஐயா. ஆகவே இப்பொழுது, நாம் நம்மை அமைதிப்படுத்திக் கொண்டு, பாடத்திற்குச் செல்வோமாக. இப்பொழுது, நான் ஒருக்கால்... கரும்பலகையை உங்களால் காண முடிகின்றதா அல்லது முடியாதா என்று எனக்குத் தெரியவில்லை. நான் சற்று நேரத்தில் அதை இவ்விதம் திருப்புவேனானால் நம்மால் அதைக் காணமுடியும். இப்பொழுது ஒருவேளை உங்களால்... என்ன கூறுகின்றீர்கள்? இல்லை, அது இப்பொழுது அவ்விதம் தான் என்று நான் நினைக்கவில்லை. டாக் (Doc) இன்னும் சற்று தள்ளி நாம்... நாம்... நாம் அதைப் பெற்றுக் கொள்வோம் - அங்கே ஓர் இடம் உள்ளதா? சரி, இப்பொழுது நாம் சற்று வலதுபுறம் திரும்புவோம். அங்கே கடைசியிலுள்ளவர்களால் அதைக் காண முடிகின்றதா? உங்களால் கரும்பலகையையும் அதில் எழுதப்பட்டுள்ளதையும் காண முடிந்தால் உங்கள் கரங்களை உயர்த்துங்கள். இல்லை? சரி, நாம் அந்த இடத்தைக் கண்டுவிட்டோம். 10இப்பொழுது, அவர்கள் அதை ஆயத்தம் செய்கையில்... இன்று காலையில் நான் சிறிது தாமதமாகவே துவக்குகிறேன். அல்லது... இல்லை... இல்லை. நான் ஏறக்குறைய பதினைந்து நிமிடங்கள் முன்பாகவே துவக்குகிறேன். நான் இப்பொழுது, துரிதமாக செல்ல முற்படாமல், நாம் நமக்கு அதிக நேரத்தை எடுத்துக் கொள்வோம். இப்பொழுது, நாம் துரிதமாக செல்வோமானால், நீங்கள் சொல்ல வேண்டிய காரியங்களை விட்டுவிடுவீர்கள். நான் உங்களுக்கு கூறினவிதமாக, அன்றொரு நாள் நான் ஒலிநாடாவைக் கேட்டுக் கொண்டிருந்த போது, எனக்கு நானே வெட்கமடைந்தேன். நான் கூறினதைக் குறித்தல்ல, ஆனால் நான் அதை வேகமாய்ப் பேசியதைக் குறித்தே வெட்கப்பட்டேன். அது சற்று அமைதி குலைந்த நாளாயிருந்தது. ஆம், நான் உணர்கிறேன்...? 11லூயிஸ்வில் (Louisville) என்னுமிடத்தில் ஒரு பெரிய மிருகக்காட்சி சாலை (Zoo) கட்டப் போவதாக நான் கேள்விப்பட்டேன். திரு. பிரௌன் (Mr. Brown) என்பவர் அதைக் கட்ட 10,00,000 டாலர்கள் கொடுப்பதாக வாக்களித்திருக்கிறார். நல்லது, அவ்வளவு பணம் என்னிடம் இருந்தால், அவ்விதமாக கட்டப்பட்டிருக்கும் மிருகங்களையெல்லாம் அவிழ்த்து விடுவதற்காக கொடுத்து விடுவேன். மிருகங்களை கூண்டில் அடைப்பதை நான் விரும்புகிறதில்லை. கரடிகளும், சிங்கங்களுமாகிய பரிதாபத்திற்குரிய மிருகங்கள் வாழ்நாளெல்லாம் அடைக்கப்பட்டு, முன்னும் பின்னுமாக அங்கு நடப்பதைக் காண கோரமானதாயிருக்கிறது. தங்களைக் காட்டிலும் புத்திசாலிகளான மனிதர்களால் அவைகள் பிடிக்கப்பட்டு அடிமைத்தனத்திற்குட் படுத்தப்பட்டிருக்கின்றன என்பதை பாருங்கள். அவர்கள் அவைகளைப் பிடித்து வந்து சிறையிருப்பில் வைத்துள்ளனர். யோசிக்கப் போனால், சாத்தான் தான் இவைகளை செய்கிறான். தேவனுடைய மகத்தான உலகில் வெளியில் சுற்றித்திரிய வேண்டிய அருமையான ஜனங்களை பிசாசு கொள்கை, கோட்பாடு என்னும் ஸ்தாபனத்தில் கட்டி சிறை வைத்திருக்கிறான் என்பதை பார்க்கும் போது அது பயங்கரமாயிருக்கிறது. மிருகக்காட்சி சாலைகளை நான் விரும்புகிறதில்லை. அங்கு கூண்டிலடைக்கப்பட்டிருக்கும், ஒரு மிருகத்தைப் போன்று நான் உணருகின்றேன். நீங்களெல்லோரும் கூண்டுகளில் அடைக்கப்பட்டிருந்தால், நீங்கள் விடுதலைப் பெற முயற்சி செய்து வெளியே வந்து ஏதாகிலும் செய்ய நினைப்பீர்கள். 12இப்பொழுது நாம் வார்த்தையை தியானிக்கும் முன்பு அதன் ஆக்கியோனை நோக்கி சற்று தலைகளைத் தாழ்த்தி ஜெபம் செய்வோம். கிருபை நிறைந்த எங்கள் பரமபிதாவே, அநீதியான எங்களை பரிபூரணப்படுத்தத்தக்கதாக இவ்வுலகிற்கு வந்து, எங்கள் பாவங்களுக்காக மரித்த தேவ குமாரனாகிய கர்த்தராகிய இயேசு என்னும் நாமத்தில் இந்த காலையில் திரும்பவும் கூடி வந்திருக்கிறோம். கர்த்தாவே, நாங்கள் தகுதியற்றவர்கள் என்று அறிக்கையிட வந்திருக்கிறோம். எங்களைக் குறித்து நன்மையான காரியம் ஒன்றும் இல்லை. நாங்களெல்லாரும் எந்த மூலையிலிருந்தாலும் ஒரே சிறைச் சாலையில் தான் இருக்கிறோம். ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய முடியாத நிலையிலிருக்கிறோம். ஆனால் தேவனே, நீர் உம்முடைய கிருபையில் நித்தியமானவராயிருந்து, தாழ இறங்கி வந்து சிறைச்சாலை கதவுகளை திறந்து எங்களை விடுதலையாக்கியிருக்கிறீர். எங்கள் சிறைச்சாலை வாழ்க்கை முற்று பெற்றுவிட்டது. இவ்வுலகம் என்னும் மிருகக்காட்சி சாலையில் நாங்கள் இப்பொழுது இல்லை; ஆனால் விடுதலையாகி அதற்கு வெளியே இருக்கிறோம். 13ஓ! நாங்கள் எவ்வளவாய் அவரை நேசித்து தொழுது கொள்கிறோம்! மகத்தான வாக்குத்தத்தமான தேசத்தின் ஊடே நாங்கள் நடந்து, எங்கள் கண்களுக்கு முன்பாகவே வாக்குத்தத்தங்கள் நிறைவேறி, பழைய ஏற்பாட்டின் தீர்க்கதரிசிகளுக்கு அவர் செய்தது போல நித்தியத்தின் தேவனானவர் தம்மை எங்களுக்கு முன்பாக வெளியரங்கப்படுத்துவதை எவ்வளவாய் நாங்கள் காண்கிறோம். இதை அறிந்துதான் அவர்கள், இந்த ஜீவன் முடிந்த பிறகு என்றாவது ஒருநாள் திரும்பவும் உயிர்த்தெழுந்து, வாடாத அந்த நித்திய ஜீவனை சுதந்தரித்துக் கொள்வோம் என்ற நம்பிக்கைக்காக அவர்கள் இளைப்பாறிக் கொண்டிருக்கிறார்கள். அங்கே எங்கள் சரீரங்கள் விருத்தாப்பியமாவதில்லை, நாங்கள் ஒரு போதும் மரிப்பதுமில்லை. மற்றும் நாங்கள் ஒருபோதும் பசியடைவதுமில்லை, தேவையென்று ஒன்றும் எங்களுக்கு அப்பொழுது இருப்பதில்லை. ஆனால் நாங்கள் அவரோடுகூட நடப்போம். ''உலகத் தோற்றத்திற்கு முன்பாக என் பிதாவினால் ஆயத்தம் பண்ணப்பட்ட கர்த்தருடைய சந்தோஷத்துக்குள் பிரவேசியுங்கள்'' என்று அவர் கூறுவதை நாங்கள் கேட்க விரும்புகிறோம். பாவமானது பிரவேசிப்பதற்கு முன்பாக, ஆதாமுக்கும், ஏவாளுக்குமென்று தொல்லையில்லாத, வியாதியில்லாத ஒரு ராஜ்யத்தை அவர் ஆயத்தப்படுத்தினது போன்று, நமக்கும் ஆயத்தப்படுத்துகின்றார். நாம் தோன்றுவோம் என்று அவர் முன்னறிந்து, நமக்காக இப்பொழுது அதை ஆயத்தப்படுத்தியிருக்கிறார். பாவமானது ஒரு பெரிய தடையையுண்டு பண்ணியிருந்தது. இப்பொழுதுதோ, இயேசுவின் இரத்தத்தினால் பாவமானது நீக்கப்பட்டுவிட்டது. தேவனுடைய வாக்குத்தத்தத்தின் படி, நித்தியமான அந்த தேசத்திற்கு நாம் இப்பொழுது பிரயாணப்பட ஆயத்தமாகி விட்டோம். 14பிதாவே, நாங்கள் உம்முடைய வார்த்தையை ஆராயும் பொழுது எங்களை ஆசீர்வதித்தருளும். உம்முடைய ராஜ்யத்தில் இருக்கும் தகுதியைப் பெற நாங்கள் எத்தகைய ஜனங்களாயிருக்க வேண்டுமென்று அறிய விரும்புகிறோம். இன்று இந்த வேத ஆராய்ச்சிக் கூட்டத்தில் தலையாய போதகராகிய, பரிசுத்த ஆவியானவர் தாமே இறங்கி வந்து தம்முடைய வார்த்தையின் மூலம் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு உதவி செய்யும். பரிசுத்த ஆவியானவர் தாமே இங்குவந்து தம்முடைய வார்த்தையின் மூலம் தம்மை எங்களுக்கு வெளிப்படுத்தட்டும். இவையெல்லாவற்றையும் அவருடைய மகிமைக்கென்று, அவருடைய நாமத்திலே கேட்டுக் கொள்கிறோம். ஆமென். 15இப்பொழுது என்னோடு கூட நீங்களும் வேதாகமத்திலுள்ள, 2.பேதுரு;1ம் அதிகாரத்தின் ஒருசிறு பாகத்திற்கு வேதாகமத்தைத் திருப்ப நான் விரும்புகிறேன். வேதத்திலிருந்து ஒருசிறு பகுதியை, 2.பேதுரு முதல் அதிகாரத்தை வாசிக்க விரும்புகிறேன். எழுது கோல்களையும், காகிதங்களையும் உடையவர்கள் ஆயத்தமாயிருங்கள். நான் சில சமயம் ஒலிப்பெருக்கியினிடமிருந்து, என் தலையை திருப்புவதால் ஒலி நாடாக்களில் பதிவுமந்தமாகிறது என்று என்னிடம் கூறினார்கள். நான் அவ்விதம் செய்ய நோக்கம் கொள்ளவில்லை, ஒலி பெருக்கியை (Mike) உயரே மத்தியில் வைப்போமென்றால், நான் எவ்விதம் அசைத்தாலும், அது பாதிக்கப்படாமல் சரியாயிருக்கும் என்று நம்புகிறேன். 16இப்பொழுது... நான் பேசிக் கொண்டிருக்கும் பொழுது; நான் இங்கு ஒரு வரை படத்தை வைத்திருக்கிறேன். உங்களுக்கு விருப்பமானால், இந்த ஆராதனைக்குப் பின்பு பிரதி எடுத்துக் கொள்ளத்தக்கதாக அதை இங்கு பொருத்தி வைக்கிறேன். மேலும் அதை தட்டெழுத்து இயந்திரத்தின் மூலம் அச்சிடவும் நான் விரும்புகிறேன். 17நாம் இப்பொழுதுதான் ஏழு சபை காலங்களை முடித்திருக்கிறோம். ஏழு முத்திரைகளைப் பற்றிய செய்தியை நாம் எதிர் நோக்கிச்சென்று கொண்டிருக்கிறோம். நான் இப்பொழுது போதிக்கப் போகும் செய்தியானது, முத்திரைகளின் முடிவில் உள்ள நித்தியத்தை சுதந்தரிக்கத்தக்கதாக, கர்த்தராகிய இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்படப் போகிற மனிதனை இணைக்கின்றதாயிருக்கிறது. ஏழு எக்காளங்கள், ஏழு வாதைகள், ஏழு கலசங்கள் போன்றவைகளும் உண்டு என்று நாமறிவோம். நாம் தொடர்ந்து செல்லும் போது இவைகளைக் குறித்து சிந்திப்போம். ஜனங்கள் உட்காரத்தக்கதாக அதிக இடமுண்டாயிருக்க நாம்காத்திருக்கிறோம். நான் எதிர்பார்ப்பதில், இது இணையும் என்றே நான் எண்ணினேன். இந்த படத்தை வரைவேனென்று நான் எதிர்பார்க்கவில்லை, கெண்டகியிலுள்ள என் சில நண்பர்களோடு அன்று இருந்தேன். அணிலின் காலம் முடிவடையும் முன்பதாக மேலும் ஒரு நாள் அணில் வேட்டையாடலாம் என்று நினைத்து என்னுடைய நண்பர்களான சகோ. சார்லி, ரோட்னி அவருடைய சகோதரரோடும் காடுகளில் வேட்டையாடச் சென்றேன். ஆனால், அங்கு ஒரு அணிலையும் நான் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் காடுகளில் சத்தமிட்டு ஜெபித்ததின் விளைவாக அணில்களையெல்லாம் பயப்படுத்தி விட்டேனோ என்று நினைத்தேன். சகோதரர்களே, சகோதரி நெல்லி, மார்ஜி அவர்களே, நான் ஒரு செய்தியைப் பெற்றுக் கொண்ட பின்பு, ஞாயிறு அன்று உங்களுக்கு அதை கூறுவேன் என்று கூறினேனே, அது இது தான். மற்றவைகளை இணைக்கத்தக்கதாக என்னிடம் வந்த செய்தியைத்தான் நான் பேசப் போகிறேன். ஓ! காடுகளில் உரக்க சத்தமிட்டு ஜெபிக்கும் உண்மையான ஆவியை அடைந்திருக்க விருப்பங் கொண்டுள்ளேன். 18இப்பொழுது, 2.பேதுரு 1ம் அதிகாரத்தின் ஒரு பாகத்தைப் படிப்போம். ''நம்முடைய தேவனும், இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது.“ இவ்வசனம் சொல்லப்பட்ட விதம் எனக்கு விருப்பமாயுள்ளது. ஏனெனில், இக்காலையில் நான் முழுவதுமாக பேச எடுத்துக்கொண்ட பொருள் 'விசுவாசம்' என்பதாகும். பாருங்கள். நான் அதை மீண்டும் வாசிக்கட்டும். கூர்ந்து கவனியுங்கள். “நம்முடைய தேவனும் இரட்சகருமாயிருக்கிற, இயேசு கிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும் அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது.” கவனியுங்கள்: ''எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு“ என்று பேதுரு கூறினார். இது வெளியுலகத்திற்கல்ல; பாருங்கள், கிறிஸ்துவுக்குள்ளான சபைமக்களுக்கு அவர் கூறுகிறார். “தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் (கிறிஸ்து) அறிகிற அறிவினாலே உங்களுக்கு கிருபையும், சமாதானமும் பெருகக்கடவது; தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும் தேவ பக்திக்கும் வேண்டியயாவற்றையும், அவருடைய திவ்விய வல்லமையானது நமக்கு தந்தருளினதுமன்றி; (அவருடைய திவ்விய வல்லமையானது, இப்பொழுது நமக்கு எல்லாவற்றையும் தந்திருக்கிறது.) இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே (வாக்குத்தத்தங்கள்) நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது... 19இது உண்மையாகவே ஆழமாக உங்கள் மனதில் பதியட்டும், இக்காலையில் நான் பிரசங்கிக்கப் போகிறதில்லை; திவ்விய சுபாவத்தைக் குறித்து போதிக்கப் போகிறேன். “திவ்விய சுபாவம்.'' நான்காவது வசனத்தை மீண்டும் வாசிக்கிறேன். அப்பொழுது நீங்கள் அதைவிட்டு விடாதிருப்பீர்கள். ''நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது,'' இதை நீங்கள் தவறவிட வேண்டாம்: இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, மகாமேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே (வாக்குத்தத்தங்கள்) நமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. இன்று நாம் எப்படிப்பட்ட, ''உலகத்திற்கு'' தப்பியிருக்கிறோம் என்பதை பாருங்கள். இவ்வசனங்களை பேதுரு சபைக்குக் கூறுகிறான். அதன் காரணமாகத் தான் நாம் இக்காலையில், வழி எதுவென்றும், தேவனுடைய தேவைகள் எதுவென்றும் அறியத்தக்கதாக இங்கு கூடியிருக்கிறோம். தேவனை நேசிக்கும் இங்குள்ள ஒவ்வொரு கிறிஸ்தவனும், கிறிஸ்துவைப் போலாக அதிகமாக விரும்புகிறான். அது இங்கு வைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும்! நான் ஒரு வயது சென்ற போர்வீரன். சகோதரன் கிட், சகோதரி கிட் அவர்களும் இங்கிருக்கிறார்கள். ஒரு வேளை இக்கட்டிடத்திலுள்ள அனைவரிலும் அவர்கள் வயது சென்றவர்களாயிருக்கக் கூடும். ஆனால், நான் அவர்களை நோக்கி, ''உங்களுடைய இருதயத்தின் விருப்பம் என்ன?'' என்று கேட்பேனாகில், அவர்கள், “தேவனோடு இன்னும் நெருங்கி ஜீவிப்பதே” என்று கூறுவார்கள். நீங்கள் கிறிஸ்துவைப் பற்றி அறியும் போது, அவரைக் குறித்த ஏதோ ஒன்று அவரை நேசிக்கச் செய்து, நீங்கள் அவருக்குள்ளாகவே சென்றுவிட முயற்சி செய்ய வைத்துவிடும். 20நான் இப்பொழுது கூறப்போகும் தோரணையை நீங்கள் மன்னிக்க வேண்டும். ஒரு சமயம் நான் என் மனைவியைப் பார்த்து, (நாங்கள் இருவரும் வயது சென்றவர்களாகி விட்டோம்.) ''நீ எப்பொழுதும் என்னை நேசிப்பது போல் இப்பொழுதும் நேசிக்கிறாயா?'' என்று கேட்டேன். அதற்கு அவள், ''ஆம், நிச்சயமாக நான் அவ்விதமே நேசிக்கிறேன்'' என்றாள். அப்பொழுது நான் அவளிடம், ''உன்னை எனக்குள்ளாக இழுத்துக் கொண்டு, நாம் இருவரும் உண்மையாகவே ஒருவராக இருக்குமளவுக்கு, நான் உன்னை அவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை அறிந்துகொள்'' என்று கூறினேன். இத்தகைய அன்பை நூறு கோடியால் பெருக்கினால் எவ்விதமோ அவ்விதம் கிறிஸ்துவினிடத்தில் நேசத்தால் சிறைப்பட்ட ஒரு விசுவாசி, அவ்வளவாய் அவரிடத்தில் அன்பு கூர்ந்து, அவருக்குள் செல்ல விரும்புவதை நீங்கள் காணலாம்; ஏனெனில் அது ஒரு நேசமாயிருக்கிறது; இங்கு, இந்த அழிந்து போகக்கூடிய சரீரத்தை உடையவர்களாகிய நாம் எவ்விதம் அவருடைய வாக்குத்தத்தங்களினால் கிறிஸ்துவின் திவ்விய சுபாவத்திற்கு பங்குள்ளவர்களாகப் போகிறோம் என்பதைக் காட்டப் போகிறார். 21இங்கு நான் ஒரு காரியத்தைச் சொல்ல வேண்டும். சில நாளைக்கு முன்பு ஒரு சகோதரன் என்னைக் குறித்து தவறாய் புரிந்து கொண்டார். ஊழியக்காரர்களின் ஐக்கியத்தினின்று ஒரு கடிதம் வந்தது. அதில், ''கணவனும், மனைவியும் ஆத்தும ஜோடியாக இருத்தல் வேண்டும் (Soul mated). அவ்விதம் இல்லையென்றால், நாம் நம்முடைய கூட்டாளியைத் தள்ளிவிட்டு, ஆத்தும் ஜோடியாய் இருக்கத்தக்க வேறொருவளை விவாகம் செய்து கொள்ளலாம் என்று நான் நம்புகிறேன்'' என்று எழுதியிருந்தது. ஓ, என்னே! அதற்கு நான், ''அத்தகைய வேதப் புரட்டைக் குறித்து நான் குற்றமற்றவனாயிருக்கிறேன்'' என்று பதிலெழுதினேன். நான் எப்பொழுதும் அத்தகைய காரியத்திற்கு எதிரிடையாக இருந்திருக்கிறேன். மேலும், அதை நான் விசுவாசிப்பதில்லை. நிச்சயமாக இல்லை. தேவன் நமக்கு ஒரு ஜோடியைத் தருகிறாரென்றும், பின்பு நாம் ஒருவரிலொருவர் பாகமாகிறோம் என்றும் நான் விசுவாசிக்கிறேன். அதுதான் உண்மை. ஆகவே தான், ஒரு மனிதன் விவாகம் செய்யும் முன்பே இக்காரியங்களைக் குறித்து ஆராய்தல் அவசியமாகும். 22ஒரு சமயம் ஒரு வாலிபன் என்னிடம், ''சகோ. பிரன்ஹாமே, நான் இன்னவிதமான ஒரு பெண்ணை விவாகம் செய்து கொள்வதைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?'' என்று கேட்டான். அதற்கு நான், ''அவளைக் குறித்து நீ எந்த விதமாய் நினைக்கிறாய்?'' என்று கேட்டேன். அதற்கு அவன், “ஓ, நான் அவளை மிகவும் நேசிக்கிறேன்'' என்று பதிலளித்தான். அப்பொழுது நான், ''நல்லது, அவளில்லாமல் நீ வாழ முடியாது என்று எண்ணினால் அவளை விவாகம் செய்துகொள். அவளில்லாமல் வாழ முடியும் என்று எண்ணினால், அவளை விவாகம் செய்து கொள்ளாதே. ஆனால், அவ்விதம் அவளை நீ விவாகம் செய்யாமலிருப்பது உன்னைக் கொன்றுவிடும் என்று எண்ணினால் நீ தாராளமாக சென்று அவளை விவாகம் செய்துகொள்'' என்று கூறினேன். நான் எதை அவனுக்கு போதிக்க முயற்சி செய்தேன் என்றால், நீ விவாகம் செய்து கொள்ளும் முன்பு எல்லாம் அருமையாகவும், நலமாகவும் காணப்படும், ஆனால் விவாகமான பின்பு வாழ்க்கையில் சோதனைகளும், உபத்திரவங்களும் வரும். அத்தகைய சமயத்தில்தான் நீங்கள் ஒருவரையொருவர், புரிந்து கொண்டு மிகவும் நேசிக்க வேண்டும். நீயோ அல்லது அவளோ ஒருவரிலொருவர் ஏமாற்றதைக் காணும் போது இன்னுமாய் ஒருவரையொருவர் புரிந்து கொண்டு நேசித்தலே சிறந்த அன்பு என்பதே என்னுடைய கருத்தாயிருக்கின்றது. 23கிறிஸ்துவினிடம் காரியம் அவ்விதமேயிருக்கின்றது. பாருங்கள்? நாம் ஒரு காரியத்தை அவரிடம் கேட்டு நமக்கு அதை அவர் கொடுக்காவிட்டாலும், அது நம்மை சிறிதேனும் பாதிக்கா வண்ணம் அவ்வளவாய் நாம் அவரிடம் அன்பு கூற வேண்டும். பாருங்கள்? பாருங்கள்? ஏன்? இதை செய்யத்தக்கதான ஒரே வழி அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்கு பெறுதலேயாகும். அப்பொழுது தான், அவர் ஏன் அதை உனக்குக் கொடுக்கவில்லை, என்பதை நீ புரிந்துகொள்ள முடியும். ''திவ்விய சுபாவத்தில் பங்கு பெறுதல்.'' “இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத்தப்பி...'' இதை சபைக்கு கூறுவதை கவனியுங்கள். கேட்டுக்குத் தப்பிக்கொள்ளல்! கிறிஸ்துவுக்குள்ளானவர்கள் இவைகளுக்குத் தப்பி மேன்மைப்படுத்தப் படுகிறார்கள். அவன் தன்னை உயர்த்துவதல்ல; ஆனால், கிறிஸ்து அவனை உயர்த்துகிறார். 24நான் இப்பொழுது கூறப்போகிற காரியம் யாருக்கும் இடறல் உண்டாக்கும் நோக்கம் கொண்டதல்ல, இன்று காலை இங்கிருக்கும் என்னுடைய நீக்ரோ சகோதர, சகோதரிகள் என்னை தவறாகப் புரிந்துக்கொள்ளக் கூடாது. நாங்கள் சில காலங்களுக்கு முன்பு ஒரு கூட்டத்தை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு ஒரு நீக்ரோ சகோதரி, “நான் சாட்சி கூறலாமா?'' என்று கேட்டாள். அதை நான் இங்கு இக்கூடாரத்தில் எப்போதாவது கூறியிருக்கிறேனா என்று தெரியவில்லை. வேறு அநேக இடங்களில் அதைக் கூறியிருக்கிறேன். அதற்கு நான், ''நிச்சயமாக சகோதரியே, நீங்கள் சாட்சி கூறலாம்'' என்று கூறினேன். அப்பொழுது அந்த சகோதரி, “தேவனுடைய நாமத்திற்கு மகிமையாக நான் இந்த சாட்சியை சொல்ல விரும்புகிறேன், அது என்னவென்றால், நான் இருக்க வேண்டிய பிரகாரமாக நான் இல்லை, நான் எப்படி இருக்க வேண்டுமென்று விரும்புகிறேனோ, அவ்விதமாயுமில்லை. ஆனால், ஒன்று மட்டும் நிச்சயம். நான் எப்பொழுதும் இருக்கிற வழக்கமாய் இப்பொழுதில்லை'' என்று கூறினாள். 25பாருங்கள், அவள் எங்கோ ஓர் இடத்திலிருந்து வந்தாள்; ஆனால் அவள் தூக்கியெடுக்கப்பட்டாள். அவ்விதமாகத்தான் நாமும் மரணத்தினின்று ஜீவனுக்கு கடந்து சென்றோம் என்று அறிந்திருக்கிறோம். நாம் பிரித்தெடுக்கப்பட்ட குட்டையை நோக்கிப் பார்க்கிறோம். பாருங்கள்? நாம் எப்படியிருக்க வேண்டுமென்று விரும்புகிறோமோ அவ்விதமாய் நாமில்லை, நாம் எப்படியிருக்க வேண்டுமோ அவ்விதமாயுமில்லை. ஆனால் ஒரு காரியத்திற்காக நாம் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம், அது, நாம் எப்பொழுதும் இருக்கிற வழக்கமாய் இப்போதில்லை என்பதே. அது சரி. நாம் முன்னேறிச் சென்று கொண்டிருக்கிறோம். இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, நாம் இப்போது பிரயாண பாதையில் இருக்கிறோம்; நாம் அதற்கு மேலாக கொண்டு வரப்பட்டுவிட்டோம். 26அந்த விதமாக கேட்டுக்குத் தப்பிய மனிதனைக் குறித்துத்தான் கர்த்தர் இங்கு பேசுகிறார். இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய் உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவ பக்தியையும், தேவ பக்தியோடே, சகோதர சிநேகத்தையும், சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். 27இங்குநாம் எதை செய்ய வேண்டுமென்றும், அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்றும் தேவன் சட்டத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். நான் ஏற்கனவே உங்களுக்கு கூறியபடி, நாமெல்லோரும் தேவனோடு நெருங்கி ஜீவிக்கவே முயற்சிக்கிறோம். ஆகவே தான், இக்காலை இச்செய்தியை சபைக்குக் கொடுக்க நான் தெரிந்து கொண்டேன். நேற்றிரவு நான், இந்தப் பட்டணத்துக் கப்பாலிருந்து வந்தவர்கள் எவ்வளவு பேர் என்று கேட்டேன். அது (தொண்ணுற்றெட்டு) 98 சதவீதமாயிருந்தது. ''எத்தனை பேர் 100 மைலுக்கு அப்பாலிருந்து வந்திருக்கின்றீர்கள்?'' என்று கேட்டேன். அது ஏறத்தாழ 80 சதவீதமாயிருந்தது. நான் மறுபடியும், ''எத்தனைப் பேர் 500 மைலுக்கு அப்பாலிருந்து வந்திருக்கிறீர்கள்?'' என்று கேட்டேன். மூன்றில் ஒரு பங்கு ஜனங்கள் தங்கள் கைகளை உயர்த்தினார்களென்று நான் நினைக்கிறேன். ஜனங்கள் எவ்விதமாய் பிரயாணப்பட்டு இங்கு வருகிறார்களென்று சற்று நினைத்துப் பாருங்கள். அம்மக்கள் இங்கு சபையில் தங்களைக் காட்ட வேண்டுமென்று வரவில்லை. வெளிவுலகமானது காணத்தக்க அழகு இந்த இடத்தைச் சுற்றிலும் இல்லை. அவர்களெல்லோரும் எளிமையாக உடையுடுத்திய சாதாரண ஜனங்கள். தேவ தூதர்களைப் போன்று பாசாங்கு செய்யும் பாடல் குழுவினின்று வரும் மகத்தான பாடல்களும், குழல் வாத்தியங்களும், அலங்கரிக்கப்பட்ட கண்ணாடி ஜன்னல்களும் இங்கில்லை. இங்கு நீங்கள் உட்காரவும் கூட போதிய இடமில்லாமல் சுவற்றை சுற்றி நிற்க வேண்டிய கடின சமயமுண்டாயிருக்கின்றது. அவ்வித அலங்காரமான காரியங்களைக் காண்பதற்காக அவர்கள் இங்கு வரவில்லை. ஆனால், அவர்களுக்குள்ளிருக்கும் ஏதோ ஒன்று இயற்கையான கண்கள் காணத்தவறும் அழகை இங்கு காண்கின்ற காரணத்தினால் இங்கு வருகின்றார்கள். கிறிஸ்துவினுடைய அழகை ஆவிக்குரிய கண்தான் கிரகித்துக் கொள்ள முடியும். அதன் காரணமாகவே அவர்கள் வருகின்றனர். 28ஆகவே, ஆராதனை நடப்பதற்கு அநேக நாட்களுக்கு முன்பே நான் காடுகளுக்குச் சென்று தொடர்ச்சியாக ஜெபிப்பேன். நான் என் மனைவியிடம், ''இந்த காலை நான் அணில் வேட்டைக்குச் செல்கிறேன்'' என்று கூறுவேன். பின்பு நான் ஒரு எழுது கோலையும், சிறிது காகிதங்களையும் என்னோடு எடுத்துக் கொண்டு சென்று விடுவேன். பார்க்கும் அளவு வெளிச்சம் வந்தவுடன் ஒரு மரத்தினடியில் சார்ந்து கொண்டு கரங்களை உயர்த்தியவாறு, ''கர்த்தாவே, நான் இன்று என்ன செய்யட்டும்? உம்முடைய பிள்ளைகளுக்கு அளிக்கத்தக்கதாக நீர் என்னிடம் எதைக் கொடுக்கச் சித்தாமாயிருக்கிறீர்,'' என்று கேட்பேன். பின்பு ஏதோ ஒன்று எனக்குத் தோன்றி அது என் உள்ளத்தை எரித்து, அவருடைய பிரசன்னம் என்னிடம் நெருங்குகையில், தூரத்தில் ஒரு சப்தமானது எனக்கு பின்கண்ட முறையில் கேட்க ஆரம்பிக்கும்: இரண்டும்....இரண்டும்....நான்கு; (நெருக்கமாக.) இரண்டும்....இரண்டும்....நான்கு; இரண்டும்....இரண்டும்....நான்கு; இரண்டும்....இரண்டும்....நான்கு; (சகோ. பிரன்ஹாம் இந்த வார்த்தையை திரும்பத் திரும்ப சொல்லும் போது அதன் வேகத்தை அதிகரிக்கின்றார்). இவ்விதமாக தொடர்ந்து கேட்டு கொண்டேயிருக்கும். அது அவருடைய பிரசன்னத்தின் வருகையாகும். 29முற்றிலும் அவரை சார்ந்து உன்னை ஒப்புக்கொடுத்து விடு, பின்பு சிறிது நேரம் கழித்து உனக்குள்ளாக நீ நொறுங்கி உடைந்து போன பின்பு அங்கு தரிசனமானது சம்பவிக்கின்றது. “இன்னின்ன இடத்திற்கு செல், இன்னவிதமான காரியங்களைச் செய்'' என்ற விதமாக தரிசனத்தில் கூறப்படும். பாருங்கள்? சமுதாயத்திற்கப் பாலுள்ள வனாந்தரத்தில், நீ இருந்து கொண்டு உன் சிந்தனையில் தேவனை வைத்து தியானிக்கும் போது: அவருடைய பிரசன்னமானது, ''ஒன்று... ஒன்று...'' என்ற விதமாக நான் முன்பு கூறிய வண்ணம் எந்த எண்ணைக் கொண்டாவது மெதுவாக வர ஆரம்பித்து, பின்பு அது வேகமாக வரும். நீ அங்கேயே அமர்ந்திருந்து உன் கைகளை மேலே உயர்த்திய வண்ணம் எவ்வார்த்தையும், பேசாமல் இரு. முதலாவது சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், உன்னுடைய முழு சரீரமும், மாம்சமும் தேவ பிரசன்னத்தில் மறக்கப்பட்டு போகும். அப்பொழுது தான் நீ எதைக்காண வேண்டுமென்றும், என்ன சம்பவிக்கப் போகிறது என்றும் தேவன் உனக்குக் காண்பிப்பார். சில சமயங்களில் அது ஒரு நிலை வரை வந்து, பின்பு நின்று போகும். மேற்கொண்டு தரிசனங்களாக காட்டப்படுவதில்லை. ஆனால் தேவ வசனங்கள் வந்து குவியலாகக் கொடுக்கப்படும். அச்சமயத்தில் நான் எழுதுகோலை துரிதமாக எடுத்துக் கொண்டு, அவைகளை நான் மறந்து போகும் முன்பு உடனடியாக எழுதிவிடுவேன். பின்பு நான், வீட்டிற்கு வந்து அவைகளைப் படிப்பேன். சில சமயங்களில் அவ்வசனங்களின் குவியலை நான், ஆராயும் போது அவைகள் சரியான பொருளை எனக்குத் தருவதாயிருக்காது. ஆனால், அதை தியானிக்கும் போது திரும்பவும் தேவ பிரசன்னம் அங்கு வந்து, எனக்கு அவர் விளக்கும் காரியங்களை ஒரு புத்தகத்தில் துரிதமாக எழுதிக்கொள்வேன். பின்பு நான், ''கர்த்தாவே, நான் இப்பொழுது சபைக்குச் சென்று... வாருங்கள் உங்களுக்குச் சொல்லத்தக்கதாக ஒரு செய்தி எனக்குண்டு'' என்று கூறும் வண்ணமாக மனதிலே நினைத்துக் கொள்வேன். தேவனுடைய பிரசன்னம் நிச்சயமாக எனக்கு அவ்விதம்தான் சம்பவிக்கின்றது. அது முற்றிலும் சரி. அவர் எனக்கு முதலில் அதை தராமல், நான் அதை வெளியே கொடுக்க முடியாது. ஆகவே, இங்கு வைத்திருக்கிற வரை படத்தின் பேரில் நான் பேசவிருக்கிறேன். இந்த செய்தியை நான் இங்கு பெற்று கொள்ளவில்லை, இரண்டு நாட்களுக்கு முன்பு காடுகளில் இதை தேவனிடத்தில் பெற்றேன். 30நாம் அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்கடைய வேண்டுமென்று பேதுரு கூறுகிறார். நாம் ஒவ்வொருவரும் தேவனை அறிகிற அறிவின் பரிபூரண வளர்ச்சியின் நிலையை அடைய வேண்டுமென்று முயற்சிக்கிறோம். ஏழு முத்திரைகளைப் பற்றி பார்க்கும் போது, ஒவ்வொரு முத்திரைகளும் அவிழ்க்கப்படும் போது... அம்முத்திரை என்னவென்று நாம் தெரிந்துக் கொள்கிறோம்; அது ஒரு ஊழியத்தை அவிழ்த்து விடுகிறதாயிருக்கின்றது. இங்கு வைக்கப்பட்டிருக்கும் வரை படத்தில் அதைக் காண்கிறோம். முத்தரித்து வைக்கப்பட்ட ஒரு செய்தியானது அவிழ்த்துவிடப் படுகிறதென்றும் அர்த்தமாகிறது. 31கடந்த ஞாயிறு நான், ''விசுவாசமானது ஒரு திறவுகோலாயிருக்கிறது'' என்பதைக் குறித்து பிரசங்கித்தேன். அந்த திறவுகோல் தேவ வசனமாயிருக்கிறது, கிறிஸ்துவே வாசலாயிருக்கிறார். பாருங்கள்? ஆகவே, விசுவாசமானது தேவ வசனங்களிலுள்ள சிறு தாழ்ப்பாள்களை திறந்து தேவனுடைய மகத்துவங்களையும், நன்மைகளையும் அவருடைய ஜனங்களுக்கு வெளிப்படுத்திக் காண்பிக்கின்றது. பாருங்கள்? ஆகவே, விசுவாசமானது திறவு கோலை உடையதாயிருந்து கிறிஸ்துவை ஜனங்களுக்கு திறந்து அல்லது வெளிப்படுத்திக் கொடுக்கின்றது. இன்றைக்கு நாமும் கூட தேவனை அறிகிற அறிவின் வளர்ச்சியில் ஒரு சற்குணமுள்ள கிறிஸ்தவனாகவும், ஜீவிக்கிற தேவன் வாசம் பண்ணத்தக்கதான ஜீவனுள்ள ஆலயமாகவும் மாற, இந்த திறவு கோலை எடுத்து, வழியுண்டாகத்தக்கதாக திறக்க முயற்சி செய்வோம். ஞாபகம் கொள்ளுங்கள், தேவன் தம்மை மூன்று வழிகளில் வெளிப்படுத்தினார். முதல் தடவை அவர் தம்மை அக்கினி ஸ்தம்பமாக வெளிப்படுத்தினார். அது பிதாவின் தன்மை என்று அழைக்கப்பட்டது. இரண்டாவது தடவை, அதே தேவன் இயேசு கிறிஸ்துவில் வெளிப்பட்டார். அது அவர் வாசம் செய்யத்தக்கதாக ஒரு சரீரத்தை ஆயத்தம் செய்ததைக் குறிக்கிறது. மூன்றாவதாக, அந்த சரீரத்தின் மரணத்தின் மூலம், தாம் வாசம் செய்யத்தக்கதான ஒரு சபையை அவர் பரிசுத்தப்படுத்தினார். அதே தேவன் தான், நமக்கு மேலாக (above us) இருந்தார்; நம்மோடு (With us) இருந்தார்; நமக்குள் (In us) இப்பொழுது இருக்கிறார் அதன் காரணமாகத்தான் அவர் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்று அழைக்கப்படுகிறார். மூன்று கடவுள்களல்ல —- ஒரே தேவன். மூன்று அலுவல்களையுடையவராயிருக்கிறார் என்பதே, இதை அவர்கள் நிசயாவின் ஆலோசனை சங்கத்தில் யோசித்திருந்தார்களானால் இன்றைக்கு இவ்வளவு பெரிய குழப்பத்திற்குள் நாம் சிக்கியிருக்க மாட்டோம். அப்படித்தானே? அது சரி. மூன்று கடவுள்களல்ல. 32இயேசு பிதாவினிடத்தில் பேசிக் கொண்டிருந்து விட்டு, பின் எவ்வாறு பிதாவும், நானும் ஒன்றாயிருக்கிறோம் என்று கூற முடியும் என்பதை ஜனங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை. அங்கு தான் முழு காரியமும் அடங்கியிருக்கின்றது. அதை அவர் அங்கு வெளிப்படுத்துகிறார்: மூன்று கடவுள்களல்ல... மூன்று அலுவல்கள். அப்படியென்றால், அது என்ன? தேவன் தம் சிருஷ்டிக்குள் தாழ்ந்தருளசித்தங் கொண்டார். தேவன் தாம் ஆராதிக்கப்பட விரும்பினார். தேவன் என்ற பதம் தொழுகைக்குரிய பொருள் என்று அர்த்தம். தேவன் தம்முடைய ஜனங்களை நிபந்தனைக்குட்படுத்தி, அவர்கள் எதற்காக சிருஷ்டிக்கப்பட்டார்களோ அந்த நோக்கத்தை அவர்களிடம் நிறைவேற்ற முயற்சிக்கிறார். ஒரு குமாரனாகவோ, குமாரத்தியாகவோ நீ இருப்பதைத் தவிர வேறு எந்த விதமாகவோ இருப்பதற்காக தேவன் உன்னை உண்டாக்கவில்லை. நீ அதை அடையத்தவறினால் (தேவ குமாரனாகவோ, குமாரத்தியாகவோ இருப்பதற்கு) இலக்கை தவற விட்டாய் என்று பொருள். பாவம் (SIN) என்ற பதம் “இலக்கை தவற விடுதல்'' என்று பொருள்படும். 50கெஜ தூரத்திலுள்ள ஒரு இலக்கை நான் துப்பாக்கியால் சுடும் போது, அதை நாலு அல்லது ஐந்து அங்குலம் தள்ளி சுட்டேனென்றால் என்னுடைய துப்பாக்கி நேராக்கப்பட வேண்டுமென்றும், அதைக் குறித்து ஏதோ தவறிருக்கிறதென்றும் அர்த்தம். அது போல தேவன் பேரில் வைக்கும் விசுவாசத்தை நான் தவற விடுவேனானால் நான் ஒரு கிறிஸ்தவனாக இருப்பதை தவற விடுகிறேன்... நீ ஒரு கிறிஸ்தவனாக ஜீவிப்பதற்காக, தேவன் உன்னை இங்கு வைத்திருக்கிறார். ஆனால், நீ வேறு வழியாக ஓடி சீர் கேட்டடைவாயானால் உன்னை திருப்பிக் கொண்டு வரத்தக்கதான, ஒரே ஒரு காரியம் அவருடைய வசனம் தான். தேவ வசனத்திலுள்ள பரிசுத்த ஆவியானவர் உன்னை நிலைவரப்படுத்தி நேர் வழியாக இலக்கண்டை உன்னை வழி நடத்துவார். அது சரி. 33இப்பொழுது நாம் தேவ வசனத்தை தியானிக்கப் போகிறோம். நாம் ஜீவிக்கிற தேவனுடைய ஜீவனுள்ள ஆலயத்தைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்கையில், ஸ்தேவான், அப்போஸ்தலர் 7ம் அதிகாரத்தில் அதைக் குறித்து என்ன கூறுகிறான் என்பதைப் பார்ப்போம். அது அப்:7:44ம் வசனம் தொடங்கி என்று நான் நம்புகிறேன். “மேலும் நீ பார்த்த மாதிரியின்படியே சாட்சியின் கூடாரத்தை உண்டு பண்ணுவாயாக என்று மோசேயுடனே பேசினவர் கட்டளையிட்ட பிரகாரமாக, அந்தக் கூடாரம் வனாந்தரத்திலே நம்முடைய பிதாக்களோடு இருந்தது. “மேலும், யோசுவாவுடனே கூட (ஆங்கிலத்தில் ”யோசுவா'' என்பதற்குப் பதிலாக, “இயேசுவுடனே கூட'' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) நம்முடைய பிதாக்கள் அதைப் பெற்றுக் கொண்டு, தேவன் அவர்களுக்கு முன்பாகத் துரத்திவிட்ட புறஜாதிகளுடைய தேசத்தை அவர்கள் கட்டிக் கொள்ளுகையில், அதை அந்த தேசத்தில் கொண்டு வந்து, தாவீதின் நாள் வரைக்கும் வைத்திருந்தார்கள். இவன் தேவனிடத்தில் தயவுபெற்ற படியினால், யாக்கோபின் தேவனுக்கு, ஒரு வாசஸ்தலத்தைத் தான் கட்ட வேண்டுமென்று விண்ணப்பம் பண்ணினான். சாலமோனோ அவருக்கு ஆலயத்தைக் கட்டினான். ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார். வானம் எனக்கு சிங்காசனமும், பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது: எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்கஸ்தலம் எது; 34''வாசஸ்தலம்'' என்பது நாம் தங்கி இளைப்பாறி நித்திரை மற்றவற்றிலிருந்து, புத்துணர்ச்சி பெறுகின்ற காரியங்கள் போன்றது. பவுல் எபிரெயர் 10ம் அதிகாரம் 5ம் வசனத்தில் அதை இவ்விதம் கூறுகிறார்: “ஆகையால் அவர் உலகத்தில் பிரவேசிக்கும் போது: பலியையும் (அது கிறிஸ்துவைக் குறிக்கிறது) காணிக்கையையும் நீர் விரும்பவில்லை, ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்.'' அப்படியானால் இங்கு வாசஸ்தலம் என்னப்படுவது என்ன? அது ஒரு சரீரமாயிருக்கிறது. தேவன் ஒரு சரீரத்தில் குடியிருத்தலே காரியமாகும். சீனாய் மலையில் தேவன் தம்மை வெளிப்படுத்தும் போது, ஒரு காளையாகிலும், எந்த மிருக ஜீவனும் கூட மலையைத் தொட்டால் அது கொல்லப்படக்கடவது என்றார். தேவன் பரிசுத்தமுள்ளவராயிருக்கிறார். கடந்த இரவு நாம் சிந்தித்தபடி, பரிசுத்த முகங்களுடையவர்களாய், பாவம் என்பதின் பொருள் என்னவென்று அறியாத சேராபீன்கள், தேவனுடைய பிரசன்னத்தில் தங்கள் முகங்களையும், கால்களையும் தாழ்மைக்கு அறிகுறியாக மூடிக்கொள்ள வேண்டியிருந்தது. பரிசுத்தமான தேவன் பாவத்தை மன்னிக்க கூடாதவராய் இருந்தார். ஆகவே, தேவன் இறங்கின மலையை எதுவும் தொடக் கூடாதவாறு இருந்தது. பின்பு தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டு இயேசு கிறிஸ்துவாக நமது மத்தியில் வாசம் செய்தார், அவருடைய குமாரன் - அவருடைய சிருஷ்டியாயிருந்தார். பின்பு அந்த குமாரன் தம்முடைய ஜீவனைத் தந்தார், இரத்தத்தினால் நாம் கழுவப்படவும், இரத்தத்திலுள்ள ஜீவன் நமக்குள் வரத்தக்கதாக தேவனுடைய இரத்த அணுவானது உடைக்கப்பட்டது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் நம்மை கழுவுகிறது, (முன்பு பால் உணர்ச்சியின் (Sex) விருப்பம் காரணமாக வாழ்ந்திருந்து நம்முடைய ஜீவன் இவ்வுலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.) அவருடைய பரிசுத்த ஆவி நம்மேல் அனுப்பப்படுவதன் மூலம் நம்முடையசு பாவங்கள் மாறுகின்றன. ஆகவே, நாம் அவருடைய தெய்வீக சுபாவத்தைத் தரித்துக் கொண்டு, தேவன் வசிக்கத்தக்க இடமாக மாறுகின்றோம். 35இயேசு, “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்று கூறினார். தேவன் தம்முடைய சபையில் எப்படியிருப்பார் என்பதை அறிந்துக் கொள்கிறீர்களா? சபையானது தற்போது ஊழியத்தில் கிறிஸ்துவின் இடத்தை வகிக்க வேண்டும். ''என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளை தானும் செய்வான், இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; ஏனென்றால் நான் உங்களோடும், உங்களுக்குள்ளும், இதோ உலகத்தின் முடிவு பரியந்தமும், சகல நாட்களிலும் உங்களுடனே கூட இருக்கிறேன்'' என்றார். பாருங்கள்? அங்குதான் அவருடைய கிரியைகளைத் தொடரத்தக்கதான காரியம் காணப்படுகின்றது. 36சாலமோன் தேவாலயத்தைக் கட்டினதைக் குறித்து ஸ்தேவான் பேசினான், ''ஆகிலும் உன்னதமானவர் கைகளினால் செய்யப்பட்ட ஆலயங்களில் வாசமாயிரார், வானம் எனக்கு சிங்காசனமும், பூமி எனக்குப் பாதபடியுமாயிருக்கிறது; எனக்காக நீங்கள் எப்படிப்பட்ட வீட்டைக் கட்டுவீர்கள்; நான் தங்கியிருக்கத்தக்க ஸ்தலம் எது'' என்று தேவன் கூறினதாக வேதம் உரைக்கின்றது. ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்,'' ஆமென்! அதுதான் காரியம். ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்.'' சரீரப் பரிமாணமான ஒரு மனிதனில் தேவன் வாசம் செய்து, தன்னை அந்த மனிதனில் பிரதிபலிக்கிறார்... பரிபூரணமான ஆராதனை. தேவன் நமக்குள் இருப்பதனால் நமது சரீரம் அவருடைய ஆலயமாயிருக்கிறது; தேவன் அங்கிருந்து தம்மை வெளிப்படுத்துகின்றார். ஓ! இந்த பொருளைப் பற்றிய சிந்தனையில் நிலைத்திருப்பது எவ்வளவு நன்றாயிருக்கிறது. 37கவனியுங்கள், எல்லா சமயங்களிலும், எப்பொழுதும் தேவன் தம்மை மனிதனின் மூலமே பிரதிபலிக்கிறார். தேவன் மோசேயினுள் இருந்தார்; அவனை சற்று கவனியுங்கள்; அவன் ஒரு தலைவனாயிருக்கத்தக்கதாகப் பிறந்தான்; அவன் பிறந்தபொழுது சிறு குழந்தைகள் உபத்திரவத்திற்குள்ளானார்கள், அதன் மூலம் மோசேயை கண்டுபிடித்து அழித்து விடலாம் என்று முயற்சிக்கப்பட்டது. கிறிஸ்துவோடும், காரியம் அவ்விதமேயிருந்தது. மோசே பிரமாணத்தைக் கொடுக்கக் கூடியவனாயிருந்தான். கிறிஸ்துவும் அவ்விதமேயிருந்தார். மோசே நியாயப் பிரமாணத்தைப் பெற்றுக்கொள்ள, 40 நாட்கள் மலையின் மேல் சென்றான்; கிறிஸ்துவும் வனாந்தரத்தில், 40 நாட்கள் சென்ற பின்பு திரும்பி வந்து, ''விபசாரஞ் செய்யாதிருப்பாயாக என்பது பூர்வத்தாருக்கு உரைக்கப்பட்டதென்று கேள்விப்பட்டிருக்கிறீர்கள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஒரு ஸ்திரீயை இச்சையோடு பார்க்கிற எவனும், தன் இருதயத்தில் அவளோடே விபசாரஞ் செய்தாயிற்று'' என்று கூறினார். பாருங்கள். இவை போன்ற இன்னும் அநேக காரியங்கள், தேவன் தம்மை மனிதனில் பிரதிபலிப்பதைக் குறிக்கின்றன. 38யோசேப்பைப் பாருங்கள், ஒரு கூட்ட சகோதரர்கள் மத்தியில் பிறந்த அவன் ஒரு ஆவிக்குரியவனாயிருந்தான். கோத்திரப் பிதாக்களாகிய அவன் சகோதரர்கள் எல்லோரும் நல்ல மனிதர்கள் தாம், ஆனால் யோசேப்போ வித்தியாசமானவனாயிருந்தான். அவன் தரிசனங்கள் பார்த்து சொப்பனங்களுக்கு அர்த்தம் சொல்லக் கூடியவனாயிருந்தான். அதன் காரணமாக அவனுடைய சகோதரர்களால் வெறுக்கப்பட்டான். எந்த நோக்கத்தை நிறைவேற்ற அவனை பூமியில் தேவன் வைத்தாரோ, அதை அவன் செய்த போது அவனுடைய சகோதரர்களால் அவன் வெறுக்கப்பட்டான். அவைகளெல்லாம் சிலுவையை சுட்டிக்காட்டுவதாயிருந்தன. கவனியுங்கள், அவனுடைய சகோதரர்களால் மரித்து போகத்தக்கதாக அவன் ஒரு குழியில் தள்ளப்பட்டு, பின்பு தூக்கியெடுக்கப்பட்டு ஏறத்தாழ 30 வெள்ளிக் காசுகளுக்கு விற்கப்பட்டான்; எகிப்திலே அவன் பார்வோனின் வலது பாரிசத்திற்கு உயர்த்தப்பட்டு, யோசேப்பை பார்க்காமல் ஒருவனும் பார்வோனிடத்தில் வரக்கூடாத வண்ணம் (அன்று இருந்த உலகத்தை பார்வோன் ஆதிக்கம் செலுத்தினான்) உயர்த்தப்பட்டான். கிறிஸ்துவின் மூலமேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் என்பதை அது சுட்டிக் காட்டினது. யோசேப்பு அரண்மனையை விட்டு புறப்படும் முன்பு எக்காளமானது தொனிக்கப்படும், அவனுடைய ஊழியக்காரர், “எல்லா முழங்கால்களும் முடங்கட்டும், யோசேப்பு வருகிறார்'' என்று அறிவித்தார்கள். யார் எங்கிருந்தாலும், என்ன முக்கியமான வேலை செய்து கொண்டிருந்தாலும், அதைவிட்டு யோசேப்பு கடந்து போகும் மட்டும் முழங்காலில் இருக்க வேண்டும். என்றாவது ஒரு நாள் எக்காளம் தொனிக்கும்போது, கிறிஸ்துவாகிய நம்முடைய யோசேப்பும் கிமையினின்று இறங்கி வருவார். அப்பொழுது உன்னுடைய வேலை அதிக முக்கியமானதல்ல, எல்லா முழங்காலும் அவருக்கு முன் முடங்க வேண்டும், எல்லா நாவுகளும் அவர் தேவகுமாரன் என்று அறிக்கையிட வேண்டும். அதுதான் உண்மை. 39ஓ! நாம் தேவனை தாவீதில் எவ்வளவாய் காண்கிறோம்! தன்னுடைய சொந்த குமாரனாலும், சகோதரர்களாலும் தள்ளப்பட்ட, ஒரு ராஜாவாக அவன் ஒலிவ மலையின் மேல் அமர்ந்து எருசலேமை பார்த்து கதறி அழுதான்; அவனுக்கு ஊழியம் செய்து, அவனால் தேவனைப் பற்றி கற்பிக்கப்பட்ட அவன் சொந்த ஜனங்களே அவனை புறம்பே தள்ளி, அவன் முகத்திற்கு நேராக துப்பி கேலி செய்தார்கள். ஓ! 800 வருடங்களுக்குப் பின்பு வந்த தேவகுமாரனுக்கு அது எவ்வளவு பரிபூரணமாய் ஒத்திருந்தது. தம்முடைய சொந்த ஜனங்களால் இயேசு புறம்பாக்கப்பட்டு, ஒலிவ மலையின் மேல் அமர்ந்து எருசலேமைப் பார்த்து அழுதார். அது என்ன? தேவன் அந்த தீர்க்கதரிசிகளின் மூலம் தம்மை பிரதிபலித்ததேயாகும், கிறிஸ்துவைப் பிரதிபலித்ததாகும். பின்பு தேவனுடைய பரிபூரணம் என்கின்றவர் (இயேசு) வந்தார்-அது நம் மத்தியில் வாசம் செய்தல். அந்த நாள் தொடங்கி, கல்வாரியின் இப்பக்கமாக அவர் தம்மை தம்முடைய சபையில் பிரதிபலித்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, நாமெல்லாரும் இந்த ஜீவிக்கிற தேவனுடைய ஆலயமாக மாற முயற்சித்துக் கொண்டிருக்கிறோம். 40நாம் முதலாவதாக விசுவாசத்தையும், தைரியத்தையும், ஞானத்தையும், தன்னடக்கத்தையும், பொறுமையையும், நற்குணத்தையும், தேவ பக்தியையும் அதன் பின் சகோதர சிநேகத்தையும் கூட்டி வழங்க வேண்டுமென்று அவர் கூறுவதைக் கவனியுங்கள். நான் அதை மீண்டும் வாசிக்கிறேன். எனவே, அதனை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்வீர்கள். இப்பொழுது நாம் மறுபடியும், 2.பேதுரு 1:5லிருந்து படிப்போம். இப்படியிருக்க, நீங்கள் அதிக ஜாக்கிரதையுள்ளவர்களாய், உங்கள் விசுவாசத்தோடே தைரியத்தையும், தைரியத்தோடே ஞானத்தையும், ஞானத்தோடே இச்சையடக்கத்தையும், இச்சையடக்கத்தோடே பொறுமையையும், பொறுமையோடே தேவபக்தியையும், தேவபக்தியோடே சகோதர சிநேகத்தையும், (இது அன்பாயிருக்கிறது) சகோதர சிநேகத்தோடே அன்பையும் கூட்டி வழங்குங்கள். இவைகள் உங்களுக்கு உண்டாயிருந்து பெருகினால், உங்களை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை அறிகிற அறிவிலே வீணரும் கனியற்றவர்களுமாயிருக்க வொட்டாது. அந்த இடத்தை அடைவதற்கென்று நாம் பின்பற்ற வேண்டிய சட்டத்தை பேதுரு இங்கு கூறுகிறார். 41நான் உங்களுக்கு ஒன்றை கூற விரும்புகிறேன்; வல்லமை, ஞானம், பொறுமை ஆகிய இக்குணாதிசயங்களின் ஒரு பாகத்தை சில ஜனங்கள் பெற்றிருக்கக்கூடும். ஆனால் அவர்கள் தங்களை கிறிஸ்தவர்கள் என்று அறிக்கையிட அது போதுமானதல்ல, நான் இப்பொழுது இதனை ஞாயிறு பள்ளிக்குக் கற்பித்துக் கொண்டுள்ளேன்; அது சரி. கிறிஸ்தவர்கள் என்று தங்களை பாசாங்கு செய்யவும் முடியாது. இது எப்படியிருக்கிறதென்றால், ஒரு கறுப்புப் பறவை தன்னுடைய இறகுகளில் மயிலின் சிறகுகளை சொருகிக் கொண்டு தன்னை மயிலாக்க முயற்சி செய்வதைப் போன்றிருக்கிறது. அத்தகையோன் தனக்குத்தானே அபகீர்த்தியை உண்டு பண்ணிக் கொள்கிறான். அப்படி பாசாங்கு செய்வதைக் காட்டிலும் ஒரு கறுப்புப் பறவையாகவே, நீ இருந்து விடு. பாருங்கள்? ஒரு கிறிஸ்தவனாக இல்லாமல் இக்காரியங்களை அவன் பயிற்சி செய்ய முயற்சித்தால், அவன் முற்றிலும் தன் நிலையில் இல்லாமற் போவான். அது சிக்காமூர் மரம் (Sycamore tree) (பாலஸ்தீனாவில் உள்ள ஒருவகை பழ மரம் - தமிழாக்கியோன்.) ஆப்பிள் பழங்களை உண்டாக்க முயற்சித்தது போன்றதாகும்; ஏனெனில் அதனால் ஆப்பிள் பழங்களை உண்டாக்க முடியாது. அது ஒரு, கோவேறு கழுதை செம்மறியாட்டைப் போன்று கம்பளியை உற்பத்தி செய்ய முயற்சி செய்ததைப் போன்றதாகும். அது கம்பளியை உற்பத்தி செய்ய முடியாது. பாருங்கள்? அதனால் அதைச் செய்ய முடியாது. கம்பளி உற்பத்தி செய்வது செம்மறியாட்டிற்கு கொடுக்கப்பட்ட ஒரு வரமாகும். ஆனால், கோவேறு கழுதை அதை செய்ய முடியாது. ஒருவேளை அது செம்மறியாட்டைப் போன்று பாவனை செய்யலாம். ஆனாலும், அது கோவேறு கழுதையாகவே இருக்கின்றது. ஒருவேளை நீ, ''நான் செம்மறியாட்டைப் போன்று சாப்பிட முடியும், செம்மறியாட்டைப் போல் இதைச் செய்ய முடியும்,'' என்று கூறலாம். ஆனால், நீ எதைச் செய்தாலும் கம்பளியை உற்பத்தி செய்ய வேண்டுமானால், நீ ஒரு செம்மறியாடாய் இருத்தல் அவசியம். 42இங்கு சற்று நான் நிறுத்துகிறேன். ஒரு செம்மறியாடு கம்பளியை உற்பத்தி செய்வதில்லை. ஏனெனில் அது செம்மறி ஆடாக இருப்பதினால் கம்பளியை தோன்றச் செய்வது அதனுடைய சுபாவமாயிருக்கின்றது. அநேக ஜனங்கள், ''நல்லது, நான் நல்லவனாக இருக்க முயற்சி செய்வேன், நான் இக்காரியங்களை செய்ய முயற்சி செய்வேன்'' என்றெல்லாம் கூறுவார்கள். ஒன்றையும் நீங்கள் உற்பத்தி செய்ய முடியாது, ஏனெனில் உங்களால் அதை செய்ய முடியாது. ஒரு செம்மறியாடு கம்பளியை உற்பத்தி செய்ய அதற்கு கூற வேண்டியதில்லை, அல்லது எதிர்ப் பார்க்க வேண்டியதில்லை. அது செம்மறியாடாயிருப்பதினால் அது கம்பளியை உடையதாயிருக்கிறது. அதேபோன்று நீ ஒரு கிறிஸ்தவனாயிருந்தால், ஆவியின் கனியை சர்வசாதாரணமாய் உன்னில் தோன்ற செய்வாய். நீ அதை செய்ய முயற்சி செய்யாதே. நீ வகிக்காத இடத்தை வகிக்கப் பிரயாசப்படாதே. நீ எப்படியிருக்க வேண்டுமோ அப்படியேயிரு, அது தன்னுடைய காரியத்தைக் கவனித்துக் கொள்ளும். 43''நான் ஒரு சபையில் சேர்ந்து விட்டேன்; ஆகவே நான் உண்மையாகவே பொய் பேசுவதை நிறுத்திவிட வேண்டும்'' என்று ஜனங்கள் கூறுவதை நீங்கள் கேட்டிருக்கிறீர்களா? நீ ஏதோ ஒன்றை உற்பத்தி செய்ய மீண்டுமாக முயற்சிக்கின்றாய், அது உன்னால் கூடாது. அதனை நீ முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அது, கோவேறு கழுதை கம்பளியை உற்பத்தி செய்ய முயற்சி செய்வது போன்றது. அதனால், அதை உற்பத்தி செய்ய முடியாது. ஒரு பிணந்தின்னி கழுகு ஒரு புறாவுடன் உணவு உண்ண முயற்சி செய்து, ''உனக்குத் தெரியுமா? நானும் ஒரு புறாதான்'' என்றும், புறாவின் சிறகுகளை தன்மேல் சொருகிக் கொண்டு, ''நான் எவ்விதம் இருக்கிறேன் என்று இப்பொழுது என்னைப் பார்'' என்று கூறுவதை நினைத்துக்கூடப் பார்க்க முடியுமா? அது அவ்விதம் செய்யுமானால் தன்னுடைய சுயரூபத்தையும் இழந்து விடும். அதைப் போன்றுதான், தான் இல்லாத காரியத்தில் தன்னை ஒரு பொருட்டென்று அறிக்கையிடும் மனிதனும் அவ்வாறேயிருக்கின்றான். பாருங்கள். நீங்கள் அதனைச் செய்ய முடியாது. ''நான் வல்லமையுடையவனாயிருக்க வேண்டும், ஆகவே எனக்கு வல்லமையுண்டாயிருக்கும்'' என்றும், ''நான் தேவ பக்தியுள்ளவனாயிருக்க வேண்டும், ஆகவே நான் தேவபக்தியைப் பெற்றுக்கொள்வேன்'' என்றும் நீ சொல்ல முடியாது. அது, நீ எட்டிப் பிடிக்கக் கூடிய தூரத்திலிருந்தாலும், அது அந்த சிறகுகளை நீ தரித்துக்கொள்ள முயற்சி செய்வதைப் போன்றதாகும். ஆனால், தவறான பறவையின் மேல் அச்சிறகுகளை நீ சொருக முடியாதே. அவ்விதம் செய்வாயானால் அது கிரியை செய்யாது. அது எவ்வளவு மாய்மாலமான பறவை என்பதையும், அது காட்டுவதாயுள்ளது. பாருங்கள்? 44ஒரு வயதான பிணந்தன்னி சில புறா சிறகுகளைக் சொருகிக்கொள்ள முயற்சித்து, ''இங்கே பாருங்கள், நான் ஒரு புறா?'' என்று கூறுமானால், அதைக் குறித்து சற்று கற்பனை செய்து பாருங்கள். பாருங்கள்? அது பிணந்தன்னி என்பதை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். பாருங்கள்? பாருங்கள்? அவ்வளவு தான். அது பிணந்தின்னிதான் என்பதை நாம் அனைவரும் கூறிவிடுவோம். கிறிஸ்துவத்தை உற்பத்தி செய்ய முயற்சிப்பதும், அது போன்றேயிருக்கின்றது. நீ அவ்விதம் செய்ய முடியாது. நீ செய்ய வேண்டிய முதல் காரியம் என்னவென்றால், மறுபடியும் பிறக்க வேண்டும். முழுவதுமாக மாற வேண்டும். பாருங்கள்? அவ்விதம் நீ மாறும் போது ஒரு புது சிருஷ்டியாகின்றாய். நீ முற்றிலும் சரியாகிவிடுகின்றாய். இப்பொழுது சரியான காரியத்தை பெற்றுக் கொண்டிருக்கிறாய். பாருங்கள்? ஆகவே சிறகுகளைக் குறித்த கவலை நீ கொள்ள வேண்டியதில்லை; ஏனெனில் நீ மறுபடியும் பிறக்கும்போது சிறகுகளைக் குறித்த காரியத்தை அதுவே கவனித்துக் கொள்ளும். ஆம் ஐயா. நான் எப்பொழுதும் சொல்வது போல: ஒரு பன்றியைப் பிடித்து அதை நன்றாகக் கழுவி, விலையுயர்ந்த வஸ்திரத்தை அதற்கு போட்டாலும், அது மறுபடியும் சேற்றிற்குத்தான் செல்லும். ஏனெனில், அதனுடைய சுபாவம் அதுதான். நீ அதனுடைய சுபாவத்தை மாற்ற வேண்டும், அப்பொழுதுதான் மற்ற காரியங்கள் தானாக நிகழும். 45கவனியுங்கள்: நீ, நிச்சயமாக மறுபடியும் பிறக்க வேண்டும்; அங்கு ஒரு மாற்றமானது நிகழ வேண்டியதாயிருக்கின்றது. ''நல்லது, சகோ. பிரன்ஹாமே, எனக்கு ஒரு பெண்மணியைத் தெரியும்; அவர்கள் ஒரு தவறும் செய்வதில்லை, அவள் ஒரு நல்ல பெண்மணி. இன்னொரு மனிதனையும் எனக்குத் தெரியும், அவர் ஒரு நல்ல மனிதர். அவர் யாருக்கும் எந்தவித தீங்கும் செய்வதில்லை,'' என்று ஒருவேளை நீங்கள் கூறலாம். அது ஒரு காரியத்திற்கும் உதவாது. ஒருவேளை அவர் தன்னை, ஒரு நல்ல அயலானாகக் காண்பிக்கலாம். ஆனாலும், அவர் மறுபடியும் பிறவாதவரை அவர் கிறிஸ்தவனாக முடியாது. இயேசு, ''ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால் தேவனுடைய ராஜ்யத்தைக் காணவும் கூட மாட்டான் என்று மெய்யாகவே உனக்குச் சொல்லுகிறேன்'' என்றார். இங்கு காண்பது என்றபதத்திற்கு, 'புரிந்துக் கொள்ளுதல்' என்று பொருள். ஏதாவதுஒன்றை நீ பார்த்து, ''அதை என்னால் காணமுடிய வில்லை'' என்று கூறுவாயானால், அதை உன்னால் புரிந்து கொள்ள முடியவில்லையென்று பொருள்படும். 46ஜனங்கள் ஏன் கூச்சலிடுகிறார்கள் என்று ஒரு மனிதனால் புரிந்து கொள்ள முடியாது. பாஷையானது மாற்றப்பட்டு ஏன் ஒருவன் அந்நியபாஷையில் பேச வேண்டும் என்பதை ஒரு மனிதனால் புரிந்துகொள்ள முடியாது. நேற்றிரவு கர்த்தர் நமக்காக செய்தது போன்று தேவனுடைய மகிமையானது, ஒரு மனிதனின் கண்களுக்கு மேலாக வந்து அவன் தரிசனங்கண்டு காரியங்களை ஒரு மனிதனுக்கு வெளிப்படுத்தி, அவன் செய்ய வேண்டிய காரியத்தையும் அவனுக்குக் கூறுவது எவ்விதம் என்பது பாருங்கள்? பாருங்கள்? மாம்சப் பிரகாரமான மனிதனுக்கு புரிந்துகொள்ளக் கூடாத ஒரு காரியமாகும். மாம்சப்பிரகாரமான சிந்தனையானது, “அவன் என்ன செய்தானென்றும் அல்லது எவ்வகையான ஏமாற்று தலை உபயோகிக்கிறான் எவ்வகையான தந்திரத்தை பெற்றிருக்கிறான்?'' என்று தான் சிந்திக்க முயற்சிக்கும். சரீரத்தின் ஒரு அங்கத்தினன் என்ன செய்தானென்றும், எதைச் செய்யக் கூடாதென்றும், ஒரு மனிதன் அந்நியபாஷை பேசி அதை மற்றொருவர் சரியாக வியாக்கியானப் படுத்துவதை அவர்கள் காணும் போது, அதை ஒரு ஏமாற்று வேலையென்று எண்ணுகிறார்கள். பாருங்கள்? பாருங்கள்? “இது அவர்களுக்குள் ஏற்கனவே செய்யப்பட்ட ஒரு ஏற்பாடு'' என்றும் கூறுகிறார்கள். அவர்களால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மறு பிறப்பு அடையும் வரை, அவர்களால் அதை புரிந்துகொள்ள முடியாது. ஆனால் ஒருவன் மறுபடியும் பிறக்கும் போதே, அவன் ஐக்கியத்தின் நேர்க்கோட்டில் வந்துவிடுகிறான். ஏனெனில் அவனுக்குள் இருந்த பழைய சந்தேகங்கள், குணாதிசயங்கள் யாவும் மரித்து அவன் புது சிருஷ்டியாகி விடுகிறான். ஆகவே, அவன் தன்னோடு எதையும் கூட்ட வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், அது தானாகவே அவனோடு சேர்க்கப்பட்டுவிடும். 47கவனியுங்கள்: நீ, நிச்சயமாக மறுபடியும் பிறக்க வேண்டும். அவ்விதம் நீ மறுபடியும் பிறக்கும் போது, விசுவாசம் இல்லாமல் மறுபடியும் பிறக்க முடியாது. அது உண்மை. ஆகவே நான் இங்கு வைத்திருக்கும் வரை படத்தில் அஸ்திபாரத்தையே பாருங்கள். விசுவாசமே எல்லாவற்றிற்கும் அஸ்திபாரமாயுள்ளது ''விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியமாயிருப்பது கூடாத காரியம்; ஏனென்றால் தேவனிடத்தில் சேருகிறவன் அவர் உண்டென்றும், அவர் தம்மை தேடுகிறவர்களுக்கு பலன் அளிக்கிறவரென்றும் விசுவாசிக்க வேண்டும்'' பாருங்கள்? நீ வேதத்தைக் குறித்தும், வார்த்தையானது சரியென்பதைக் குறித்தும் சந்தேகம் கொள்கின்ற நாத்தீக வாதியாக (skeptic) இருப்பாயானால், நீ அதை விசுவாசிக்கும் மட்டும் சற்று அதனிடமிருந்து விலகியிருத்தல் நல்லது. பாவம் என்றால் என்ன? அவிசுவாசமே பாவமாகும். இரண்டு மூலக்கூறுகளே மனித இனத்தை ஆட்கொண்டிருக்கின்றன. அது விசுவாசம் அல்லது அவிசுவாசம் இந்த, இரண்டில் ஒன்று ஆகும். இதில் ஏதாகிலும் ஒன்று, உன்னை ஆட்கொண்டு உன் ஜீவியத்தை நடத்துகின்றது. நீ எவ்வளவு உயரம் வளருகின்றாய் என்பது, நீ எவ்வளவு விசுவாசம் கொண்டிருக்கிறாய் என்பதை பொறுத்ததாகும். விசுவாசமே முதலாவதாக அமைந்திருக்கிறது. இந்த விசுவாசமாகிய அஸ்திபாரத்தைப் பற்றி நான் சற்று நேரம் பேச விரும்புகின்றேன். 48நீ எதை நிச்சயமாக நம்புகிறாயோ அதுவே விசுவாசமாகும். ''விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்...'' நீ விசுவாசிக்கும் போது அதை ஏற்கனவே பெற்று கொண்டு விட்டாய். ஏனெனில், அது விசுவாசத்தில் உனக்கு வெளிப்படுத்தப்பட்டுவிட்டது. ''விசுவாசமானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும், காணப்படாதவைகளின் நிச்சயமுமாயிருக்கிறது'' எபிரெயர் 11, நிச்சயம் அல்லது அத்தாட்சி... அது என்ன? எத்தகைய அத்தாட்சி? பரிசுத்தமான அத்தாட்சி. ஆகவே, நீ என்னைப் பார்த்து, ''சகோ. பிரன்ஹாமே, தேவன் சுகமாக்குகிறவர் என்று நான் விசுவாசிக்கிறேன்“ என்று சொல்லுவாயானால், நல்லது. அவருடைய தழும்புகளினால் நீ குணமானாய் என்பதை உண்மையாய் விசுவாசித்து அவரை உன்னுடைய சுகமாக்குபவராக ஏற்றுக்கொள்வாயானால், அதனின்று உன்னை திருப்பத்தக்கதான சக்தி வேறொன்றுமில்லை. ஏனெனில், அது இறுதியாக்கப்பட்ட ஒரு காரியமாகி விடுகின்றது. ஒருவேளை உனக்கு நம்பிக்கை இருக்கலாம். அதனால் விசுவாசிப்பது போல இங்கும் அங்குமாக பாவனை செய்யலாம்; ஆனால் உனக்கு விசுவாசமுண்டாயிருக்குமானால் அதை நீ அறிந்துக் கொள்வாய். ஏனெனில், அது நீ ஏற்கனவே பெற்றுக் கொண்டதன் அத்தாட்சியாயிருக்கின்றது. 49எத்தனை பேர் இன்று காலை ஓரல் ராபர்ட்ஸ் (Oral Roberts) பிரசங்கத்தை கேட்டீர்கள்? விடுதலைக்காக அவர் விசுவாச ஜெபம் செய்யப் போவதாக நான் வானொலியில் கேட்டேன். ''ஜெபத்தினுடன் தொடர்பு கொள்ளத்தக்கதாக உங்கள் கைகளை வானொலி பெட்டியின் மேல் வையுங்கள்'' என்று அவர் கூறினார். அந்த மனிதன் இதைச் சொல்லக் காரணம் என்னவென்றால், ஜனங்கள் விசுவாசிக்கத்தக்கதாக ஏதாகிலும் ஒன்றை தொடட்டும் என்பதே. அப்பொழுது அவர்கள், ''என்னுடைய வானொலிப் பெட்டியை அவர் தொடச் சொன்னார், நான் தொட்டேன், இப்பொழுது நான் பெற்றுக் கொண்டேன்'' என்று கூறுகிறார்கள். பாருங்கள்? சரி. அதைக் குறித்துப் பரவாயில்லை. ஆனால், உண்மையான விசுவாசத்திற்கோ அந்த விதமான எந்த ஒரு பொருளையும் தொட வேண்டிய அவசியமுண்டாயிருப்பதில்லை. நான் சகோ. ஓரல் அவர்களை ஒருபோதும் குற்றப்படுத்த நோக்கம் கொள்ளவில்லை. அவர் ஒரு மகத்தான ஊழியம் செய்கிறார், அவர் ஒரு தேவ பக்தியுள்ள மனிதன். அவரைப் போன்று அநேக ஓரல் ராபர்ட்ஸுகள் எழும்ப வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவரைப் போன்று அநேகர் இல்லாததே எனக்கு வருத்தம். ஆனால், நான் எதைக் கூற முயற்சிக்கிறேன் என்றால்: விசுவாசத்திற்கு எதுவும் தேவையில்லை. பாருங்கள்? விசுவாசமானது தேவனுடைய வார்த்தையை நம்பும்! விசுவாசமானது தொடுகிறதினாலா வரும்? இல்லை, ஐயா! ''விசுவாசம் கேள்வியினாலே வரும், கேள்வி தேவனுடைய வசனத்தினாலே வரும்.'' இவ்வசனம் நங்கூரம் பாய்ச்சப்பட்டதை போன்றது. பாருங்கள்? நான் கூறியதை போன்று விசுவாசத்திற்கு ஏதும் இடைவெளி அல்லது தூரம் கிடையாது. அது இப்பொழுதே இங்கேயே இருக்கின்றது. 50அன்று ஒரு நாள், குடல்கள் வெளியே இருக்கும்படியாக பிறந்து ஆகாரக் கழிவு குடலில் திறப்பில்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த ஒரு சிறு பிள்ளையின் தாயார் சகோதரி கிட், சாட்சி பகர்ந்ததை விசுவாசித்து, நான் அக்குழந்தைக்காக ஜெபிக்கும்படி தொடர்பு கொண்டார்கள். நாம் தொடர்பு கொள்ளத்தக்கதாக, தேவனிடத்தில் அனுபவம் பெற்ற ஜனங்களை தேவன் நமக்கு தருகிறார். சகோ. நெவிலுடனோ அல்லது மற்றவர்களுடனோ, நீங்கள் சென்று தொடர்பு கொள்ளலாம். சில சமயங்களில் நாம் அவர்களை நமக்காக ஜெபிக்க அழைக்கலாம். அதைத்தான் நாம் செய்ய வேண்டியவர்களாயிருக்கிறோம். நமக்கு விசுவாசம் இருக்குமானால், யார் தேவனை நோக்கி ஜெபித்தாலும், நமது விசுவாசமானது பலப்படுத்தப்பட்டு உறுதியாக்கப்படுகிறது. 51இயேசுவிடம் வந்த அந்த ரோமன், ''ஆண்டவரே! நான் - நான் பாத்திரனல்ல. நீர் என் வீட்டு வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரன் அல்ல; நான் உம்மிடத்தில் வரவும் என்னை பாத்திரனாக எண்ணவில்லை: என் மகன் மிகவும் வியாதியாயிருக்கிறான். ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும், அப்பொழுது என் மகன் பிழைப்பான்'' என்றான். அது என்ன? தூரம் விசுவாசத்தை வித்தியாசப்படுத்துவதில்லை, பாருங்கள்? ஏனெனில் தேவன் சர்வவியாபி. தேவன் சர்வ வல்லவர். தேவன் எங்கெல்லாமிருக்கிறாரோ, அங்கு அவருடைய சர்வவல்லமையுமிருக்கிறது. தேவன் சர்வ வியாபியாயிருக்கிற படியினால் அது தேவனை எங்குமிருக்கிறவராகச் செய்கிறது. பாருங்கள்? இந்த நிமிடம் தேவன் மகத்தானவராய் ஜெர்மானியிலும், சுவிட்சர்லாந்திலும், ஆப்பிரிக்காவிலும் இருப்பது போல, இப்பொழுது இங்கேயும் அவ்விதமாகவே இருக்கிறார். ஓ! அதுதான் காரியம். ஆகவே அவன், ''நீர் என் வீட்டின் வாசலுக்குள் பிரவேசிக்க நான் பாத்திரனல்ல, வார்த்தையை மாத்திரம் சொல்லும்.'' அது அந்த ரோமனின் விசுவாசம். அவன் அதை விசுவாசித்தான். இயேசு அவனை நோக்கி, “நீ போகலாம், உன் குமாரன் பிழைத்திருக்கிறான்'' என்றார். அவன் பிரயாணப்பட்டு (இரண்டு நாள் பிரயாணம்) வீடு போய் சேரும் முன்பு அவனுடைய ஊழியக்காரர் அவனுக்கு எதிர்கொண்டு வந்து: உம்முடைய குமாரன் பிழைத்திருக்கிறான் என்று அறிவித்தார்கள். அப்பொழுது அவன் ஆச்சரியமுற்று: எந்த மணி நேரத்தில் அவனுக்கு சுகமுண்டாயிற்று என்றும் நாளின் எந்த பகுதியில் என்றும் அவர்களிடத்தில் விசாரித்தான். அவர்கள், “நேற்று பதினொன்றாம் மணி நேரத்தில் ஜுரம் அவனை விட்டது,'' என்றார்கள். ''உன் குமாரன் பிழைத்திருக்கிறான் என்று இயேசு தன்னுடனே சொன்ன மணி நேரம் அதுவே என்று தகப்பன் அறிந்து அவனும், அவன் வீட்டாரனைவரும் விசுவாசித்தார்கள்.'' ஆமென். 52தேவன் சர்வவல்லமையுள்ளவரும், சர்வவியாபியானவரும், சர்வ ஞானமுள்ளவரும், முடிவற்றவருமானவர். ஆகவே அவர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ''ஜெபியுங்கள்'' என்று சொன்ன போது, அந்த தொடர்பு! உன்னுடைய விசுவாசமானது தேவனை அங்கு கொண்டு வருகிறது! அந்த விசுவாசமானது ஜெபத்தையும், தேவனையும் ஒருமிக்க அங்கு காட்சியில் கொண்டு வருகிறதாயிருக்கின்றது. ஜெபம்! விசுவாசமானது இதிலிருந்து அதற்கு மாற்றுகின்றது. அது இரண்டையும் ஒன்றாகக் கொணர்கிறது. ''நீ வார்த்தையைப் பேசும். நீர் ஒரு வார்த்தையை மட்டும் கூற நான் விரும்புகிறேன். அப்பொழுது எல்லாம் சரியாகிவிடும்'' என்றான். பாருங்கள்? அவர் இங்கு இருக்க வேண்டுமென்ற அவசியமில்லை. ''வார்த்தையை மாத்திரம் பேசும்.'' ஏன்? தேவன் சர்வவியாபியாயும், சர்வவல்லமையுள்ள வருமாயுமிருக்கிறார். பூமியின் கீழானாலும் சரி, மேலானாலும் சரி, அவர் எல்லாவற்றிற்கும் வல்லமையுள்ள வராயிருக்கிறார். அவர் தேவன். ''நீர் ஆகவே ஒரு வார்த்தை மாத்திரம் சொல்லும்'' என்றான் அவன். விசுவாசமானது மீதமான யாவற்றையும் செய்கிறது. விசுவாசம் அதைச் செய்கிறது. ஆகவே, அஸ்திபாரத்திற்கு விசுவாசமானது உனக்குத் தேவையாயிருக்கிறது. வர வேண்டிய எல்லாமும், எல்லா கிறிஸ்தவமும், உங்களுடைய எல்லாக் காரியமும், எப்பொழுதும் வார்த்தையிலுள்ள விசுவாசத்தையே சார்ந்திருக்கிறது. 53அதன் காரணமாகத்தான் நான் வார்த்தையை விசுவாசிக்கின்றேன். பாருங்கள்? என்னுடைய விசுவாசத்தை நான் வேறு எதின் மேலும் வைக்கமாட்டேன். அவ்விதம் நான் அதை ஒரு சபையின் மேல் வைப்பேனென்றால், எந்த சபையின் மேல் அதை நான் வைக்கக் கூடும்? கத்தோலிக்க சபை, லூத்தரன் சபை, மெத்தோடிஸ்டு சபை, பாப்டிஸ்டு சபை, பெந்தெகொஸ்தே சபை இவைகளில் எதின் பேரில் என் விசுவாசத்தை நான் வைக்கக் கூடும்? நான் அதை அறியேன். அவர்களெல்லாரும் வார்த்தையை சந்தேகித்து கோணலான வழியிலிருப்பவர்கள். ஆனால், என்னுடைய விசுவாசத்தை நான் அவருடைய வார்த்தையில் வைப்பேனானால், அதுவே நங்கூரம் பாய்ச்சப்பட்டதாகும். அதற்கு வியாக்கியானம் சொல்ல யாரும் அவசியமில்லை. ''கர்த்தர் உரைக்கிறதாவது'' என்ற விதமாய், அது இருக்கும். பின்பு அதை நான் விசுவாசிப்பேன். அதில் தான் அஸ்திபாரமிருக்கிறது. 54மருத்துவர் சாம் அடைர் அவர்களும், நானும் சிறுவர் பிராயத்திலிருந்து இணைபிரியாத நண்பர்கள். சாம் அவர்களை உங்களெல்லோருக்கும் தெரியும். அவர் எங்கே வீட்டைக் கட்டுவார், அது எவ்விதமாயிருக்கும் என்பதை நான் தரிசனங்கண்டு அவருக்குச் சொல்லியிருந்தேன்; அது உண்மையா என்று எப்பொழுதாவது அவரிடம் விசாரித்து அறிந்து கொள்ளுங்கள். அது நடப்பதற்கு இரண்டு, மூன்று வருடங்களுக்கு முன்பே நான் தரிசனங்கண்டேன். நான் அவரிடம், “நீங்கள் அநேகமாக நகர்புற பகுதியை எடுத்துக் கொள்வீர்கள்'' என்று கூறினேன். அவருக்கும் அதை பெற்று கொள்வதற்குமிடையில் எந்த விதமான வியாஜ்ஜியமுமில்லை, அது அவருடைய இடம். அதை திரும்பவும் பெற்றுக் கொள்ளுதலேயாகும்; அதனோடு கூட மற்றவைகளையும் அவர் பெற்று கொள்வார். அவ்வளவுதான். தரிசனத்தின்படி வந்த அந்த இடத்தைக் குறித்து அவர் என்னிடம், ''கடந்த 25 வருடங்களாக, அதை குறித்து ஒன்றும் சொல்லக் கூடாதிருக்கிறது; ஏனெனில் அது நீதிமன்றத்தில் நியாயதீர்ப்புக்காக காத்திருக்கிறது“ என்று கூறினார். அதற்கு நான், ''மருத்துவரே, உம்முடைய தாழ்மையின் காரணமாக கர்த்தர் அதை இப்பொழுது உமக்குத்தருகிறார்'' என்றேன். அதற்கு அவர், “நான் ஒரு நல்லவனில்லை'' என்றார். அப்பொழுது நான், ''நீர் ஒரு ஆமையைப் போன்றவர். உம்முடைய வெளித்தோற்றத்தில் நீர்மேல் ஓடு ஒன்றைக் கொண்டவராயிருக்கிறீர். அதன் மூலம் நீர் உம்முடைய நண்பர்களுக்கு அறியப்படுகிறீர், ஆனால் உம்முடைய உள்புறத்திலோ, நீர் ஒரு உண்மையுள்ள மனிதன். அந்த ஓடாகிய போர்வையினின்று வெளியே வாரும், தேவன் அதை உமக்கு தருகிறார்'' என்றேன். அதற்கு அவர், ''பில்லி, நான் உன்னை ஒருபோதும் சந்தேகித்ததில்லை, ஆனாலும் அதை நான் சந்தேகிக்கத்தான் வேண்டியிருக்கிறது'' என்றார் அதற்கு நான், “உம்முடைய அலுவலகத்திற்கு செல்லும்'' என்றேன். அதன்படி அவர் சென்றுவிட்டார். அடுத்த நாள் காலை, அவர் என்னிடம் தொலைபேசியின் மூலம் தொடர்பு கொண்டு, ''பில்லி, நான் உறைந்து போகும் அளவுக்கு உணர்ச்சி வசப்படுகிறேன்'' என்றார். அதற்கு நான், “காரியம் என்ன?” (இது ஜுலை மாதம் நடந்தது) என்று கேட்டேன். அதற்கு அவர், ''நான் அந்த இடத்தை வாங்கி விட்டேன், பில்லி; அவர்கள் நேற்று இரவு பாஸ்டன் என்னுமிடத்தில் கூட்டம் கூடி முடிவெடுத்து அந்த இடம் விடுவிக்கப்பட்டதினால், நான் இன்று காலை அதை வாங்கி விட்டேன்'' என்றார். அதற்கு நான், ''நான் ஏற்கனவே உமக்கு கூறினேன்'' என்றேன். பின்பு ஒருநாள், அவரோடு நான் பேசிக் கொண்டிருந்த போது (துப்பாக்கி என் முகத்தில் வெடித்த சம்பவத்தின் போது) அவர் என்னிடம், “இங்கு வரும் ஆயிரக்கணக்கான ஜனங்களிடம் அந்த சாட்சியைக் கூறினேன்'' என்றார். அது என்ன? தேவன் எதையாகிலும் உரைப்பாரென்றால், அது நடைபெற்றேயாக வேண்டும்! 55நேற்றுமாலை சில நண்பர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். 42 அங்குல நீளமுள்ள கொம்புகளையுடைய கலைமானையும், வெள்ளி நிறம் கலந்த வெள்ளைக் கரடியையும் பற்றிய தரிசனத்தை அவர்கள் கேள்விப்பட்டிருந்தார்கள். எத்தனை பேர் அதை பார்க்க விருப்பம் கொண்டு என் வீட்டிற்கு வந்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நான் அவர்களிடம், ''அளவு கோல் இங்கு உள்ளது, கொம்புகளை அளந்து பாருங்கள்'' என்றேன். இது சம்பவிக்கும் முன்பே நான், இதை சொல்ல நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். பாருங்கள். காரியம் என்ன? தேவன் எதையாகிலும் உரைப்பாரென்றால் அது நிச்சயமாக நடந்தேற வேண்டும்! அந்த அடிப்படையே அதன் காரணமாயிருக்கின்றது. தேவனுடைய இரட்சிப்பின் திட்டம் இதோ இங்கிருக்கிறது. அவருடைய தரிசனமானது அவர் உரைத்த வண்ணமே சரியாக சம்பவிக்குமானால், (இங்கிருக்கும் சபையானது, அது உண்மையென்று அறியும்) அவருடைய வார்த்தையைக் குறித்து எப்படி? பாருங்கள்? அது தரிசனங்களைக் காட்டிலும் அதிக நிச்சயமல்லவா? ஒரு தரிசனம் வார்த்தையோடு ஒன்றிப்போக வில்லையென்றால், அத்தரிசனம் தவறானதாகும். தேவனுடைய வார்த்தையே முதன்மையானது. ஏனெனில் வார்த்தை தேவனாயிருக்கிறது. பாருங்கள்? தேவன் சர்வவியாபியாயிருந்து, இங்கே அதைக்குறித்து அறிவித்து கனடா (Canada) தேசத்தில் அதை சம்பவிக்கப் பண்ணினார் (கரடி வேட்டையைக் குறித்து சகோதரன் கூறுகிறார் - தமிழாக்கியோன்.) ஆமென். பாருங்கள்? அவர் சர்வவியாபியானவர். 56சரி. முதலாவதாக நீ, நிச்சயமாக மறுபடியும் பிறக்க வேண்டும். அவ்வாறு நீ மறுபடியும் பிறக்கும் பொழுது, நீ விசுவாசத்தையுடையவனாய், வார்த்தையை விசுவாசிக்கிறாய். நீ மறுபடியும் பிறக்கும் வரை அதற்கு விரோதமாய் தர்க்கிக்கிறவனாயிருப்பாய். நீ ஒரு மதசார்புள்ளவனாய் மட்டும் இருந்தால், நல்லதை செய்ய வேண்டுமென்பதைக் குறித்து சிறிதளவே அறிவைப் பெற்றவனாயிருந்து, தேவனுடைய வார்த்தையை உன்னால் ஒருபோதும் ஆமோதிக்க முடியாது. நீ அதை ஒருபோதும் செய்யமாட்டாய். நீ மறுபடியும் பிறந்தே ஆக வேண்டும். ஆனால், நீ மறுபடியும் பிறக்கும் போது, அது விசுவாசத்தை அங்கு உற்பத்தி செய்கின்றது. சரி. இந்த விசுவாசம் வி-சு-வா-ச-ம், உனக்குக் கிடைத்த பின்பு, நீ வளர்வதற்கேற்ற நிலைமையில் வைக்கப்படுகின்றாய். 57அநேக ஜனங்கள் பீடத்தண்டையில் சென்று, “கர்த்தாவே என்னை மன்னியும்,'' என்று ஜெபித்து பரிசுத்தமாகுதலின் மகத்தான அனுபவத்தைப் பெற்று கூச்சலிட்டு, ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம், நான் அதை அடைந்து விட்டேன்'' என்று கூறுகிறார்கள். இல்லை ஐயா, நீ வளரத்தக்கதான ஆரம்ப இடத்தில் தான் வந்திருக்கிறாய்; நீ இன்னும் ஒன்றையும் செய்யத் தொடங்கவில்லை. பாருங்கள்? நீ செய்ததெல்லாம் அஸ்திபாரத்தை போட்டது தான். இப்பொழுது நீ ஒரு வீட்டைக் கட்டுவதற்கான அஸ்திபாரத்தை போட்டிருக்கிறாய். ''நான்அதைப் பெற்றுள்ளேன்'' என்று கூறுவாயானால், நீ ஒரு வீட்டைக்கட்ட அஸ்திபாரத்தை மட்டுமே போட்டிருக்கிறாய். பாருங்கள்? ஆகவே இனி நீ அந்த வீட்டைக் கட்ட வேண்டும். இங்குதான், இன்று காலை நாம் பேசிக் கொண்டிருக்கிறதான பொருள் நமக்குத் தென்படுகின்றது. சரி. ஒரு வீட்டிற்கு முதலில் தேவையானது அஸ்திபாரம். கிறிஸ்துவத்தின் அஸ்திபாரம் என்ன? தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பதே அந்த அஸ்திபாரம். அதன்பின் நீ வளர ஆரம்பிக்கிறாய். இந்த அஸ்திபாரத்தைக் கொண்டு, நீ மற்றவைகளை இதனோடு கூட்டி சேர்க்க ஆரம்பிக்கிறாய். 58ஒரு வீட்டைக் கட்டும் போது அதன் ஏற்ற தாழ்வுகளை, நெளிவு சுளிவுகளை போன்ற அநேக காரியங்களை அங்கு வைக்கிறாய். சகோ. உட் அவர்களும், அநேக தச்சர்களும், மற்றும் ஒப்பந்ததாரர்களும் இங்கே எப்படி உன் வீட்டை கட்டுவதென்று நமக்கு கூறக் கூடும். பாருங்கள்? ஆனால் தேவன் தங்கியிருக்கத்தக்கதான ஆவிக்குரிய வீட்டைக் குறித்து, நான் உங்களுக்குக் கூறப்போகிறேன். தேவன் உன்னில் வாசமாயிருக்க விரும்புகிறார். தம்மை போல உன்னையும் மாற்ற, அவர் தாமே உன்னில் பிரிதிபலிக்க விரும்புகிறார். 59முன்காலங்களில், தங்கத்தை செய்யும் போது, அதை உருக்கும் முன்பாக, அதனுள் இருக்கும், இரும்பு, செம்பு போன்ற கழிவுகள் அகலத்தக்கதாக தங்கத்தை சுத்தியில் நன்றாக அடிப்பது வழக்கமாயிருந்தது. இந்தியாவில் இந்த முறை இப்பொழுதும் கையாளப்படுகின்றது. அதிலுள்ள எல்லாக் கழிவுகளும் அகற்றப்பட்டு விட்டன என்பதை எப்பொழுது கூறுவார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? அத்தங்கத்தைத் திரும்பத் திரும்ப அடித்துக் கொண்டிருப்பவன் தன்னுடைய உருவத்தை ஒரு கண்ணாடியில் பார்ப்பது போன்று அந்ததங்கத்தில் தன்னுடைய உருவத்தின் பிரதிபலிப்பை பார்க்கும் பொழுதுதான் அது சுத்தமாயிற்று என்று கூறுவான். அந்த விதமாகவே தேவனும் செய்கிறார். தாம் பூமியில் கண்டெடுத்ததான தங்கத்தை பரிசுத்த ஆவியைக் கொண்டு நன்றாக, திரும்பத் திரும்ப புடமிட்டு தம்முடைய உருவம் அதில் பிரதிபலிக்கும் வரை அவ்விதம் அதற்கு செய்கிறார். (இந்த வாக்கியத்தைக் கூறும்பொழுது சகோ. பிரன்ஹாம் எட்டு முறை கை கொட்டுகிறார் - ஆசி) தேவனுடைய குமாரனை பிரதிபலிப்பதே, நாம் செய்ய வேண்டிய காரியமாகும். 60அவருடைய கிரியைகளைத்தான் நாமும் செய்ய வேண்டும். ''என்னை விசுவாசிக்கிறவன்... பரிசுத்த யோவான்;14:7, என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்.'' நீ கிறிஸ்துவினுடைய கிரியைகளை பிரதிபலிக்க ஆரம்பிக்கிறாய். ஆனால் நம்மில் அநேகர் கிறிஸ்துவின் பிரதிபலிப்பு காணப்படுவதற்கு முன்னரே கிரியைச் செய்ய முயற்சிக்கின்றனர். அங்கு தான் தொல்லை உண்டாகின்றது. நீங்கள் அதை அறிவீர்கள். நானும் அதை அறிவேன். அவர்கள் வழிநெடுக இடறி விழுந்திருப்பதை நாம் காண்கிறோம். இத்தகைய கழிக் குவியலான (scrap heap) கிறிஸ்தவ ஊழியக்காரர்கள் வழிகளில் குவிந்திருப்பதை, நாம் காண்கிறோம். காரணமென்னவென்றால் அவர்கள் தேவனுடைய திட்டத்தில் சரியாக அமைந்திருக்கவில்லை. ஆகவே தான் இக்காலை, நான் எனக்கும் இங்குள்ள சபைக்கும் ஜீவிக்கிற தேவனுடைய ஆலயமாக நாம் எவ்விதம் மாறுவதென்பதைக் குறித்து போதிக்க முயற்சிக்கிறேன். எத்தனை பேர் அவ்விதம் மாற விரும்புகிறீர்கள்? (சபையார், ''ஆமென்'' என்கின்றனர் - ஆசி.) ஜீவிக்கிற தேவனின் ஆலயம்! 61நாம் காரியத்தை எவ்விதம் செய்வது என்பதை நான் இப்பொழுது கூறுகிறேன். நாம் செய்ய வேண்டிய முதல் காரியம் என்ன? விசுவாசம் கொண்டு மறுபிறப்படைதலே, அஸ்திபாரத்தைப் போடுவதாகும். அஸ்திபாரத்தை போட்ட பின்பு இரண்டாவதாக, உன் அஸ்திபாரத்துடன் கூட்டிக்கொள். ''விசுவாசத்துடன் கூட்டிக்கொள்'' என்று பேதுரு கூறுகிறான். கூட்டிக்கொள்... ''முதலாவது விசுவாசம், அதனுடன் தைரியத்தை'' (ஆங்கிலத்தில் 'Virtue' என்று மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதற்கு, ''வல்லமை'' என்று பொருளாகிறது - தமிழாக்கியோன்) அல்லது ''வல்லமையை'' கூட்டி வழங்க வேண்டும். இந்த வரைப்படத்திலுள்ள அடுத்தக் கட்டம் இதுதான். முதலாவதாக அஸ்திபாரமாகிய விசுவாசம்; பின்பு உன் விசுவாசத்தோடே, வல்லமையானது சேர்க்கப்படுகிறது. விசுவாசத்தோடே, வல்லமையை சேர்க்கும் காரியம் நம்மில் அநேகரை கீழே விழத்தள்ளி விடுகின்றது. ஆம் ஐயா, ஆம்! ஆணோ, பெண்ணோ, யாராயிருந்தாலும் அவர்கள் நல்லொழுக்கமான வாழ்வு, வாழ்வதை இது குறிப்பிடவில்லை. அதற்கும், இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை. ''என்னிலிருந்து வல்லமை புறப்பட்டதை அறிந்திருக்கிறேன்'' என்று இயேசு கூறினதை, லூக்கா எழுதின சுவிசேஷத்தில் வேதம் சுட்டிக் காட்டுகின்றது. அது உண்மையா? (சபையார், 'ஆமென்' என்கின்றனர் - ஆசி) நாம் அவரைப் போல் இருக்கப் போகிறோமென்றால், பின் நாமும் வல்லமையுடையவர்களாயிருக்க வேண்டும். நாம் அவரைப் போன்றிருக்க, நாம் அதைப் பெற்றிருக்க வேண்டும். 62ஞானப்பாட்டுகளில் நான் எப்போதும் விரும்பின முதன்மையான பாட்டு, “இயேசுவைப் போல் இருக்க வேண்டும்” என்ற பாடலே. நல்லது, அவரைப் போல் நான் இருக்க வேண்டுமாயின், வல்லமையானது என் மூலமாய் பாய்ந்து ஜனங்களுக்குச் செல்ல வேண்டும்; ஏனெனில், இயேசுவிலிருந்து வல்லமைப் புறப்பட்டு ஜனங்களுக்குச் சென்றது என்று நாம் காண்கிறோம். வல்லமை! அந்த வல்லமையானது வெளியே போவதற்கு முன்பு, முதலில் நீ அதை பெற்றுக்கொள்ள வேண்டியதாயிருக்கிறது. நீ அதை பெற்றுக் கொள்ளாவிட்டால், அது உன்னிலிருந்து வராது. அது உன்னிலிருந்து வெளியேற எந்தவித சாத்தியமுமில்லை. நம்மிலிருந்து யாராகிலும் வல்லமையைப் பெற முயற்சிக்கும் போது... அதற்கான காசோலை (Cheque) ''போதுமான அளவு பணம் இல்லை'' என்று திரும்பிவிட்டால் எவ்விதமிருக்கும்? பாருங்கள்? திருப்பப்பட்ட காசோலையினின்று யாரும் பணம் பெற்றுகொள்ள முடியாது. உன்னை ஒரு கிறிஸ்தவன் என்று பார்க்கும் ஒருவர் நாளைய தினம் உன்னை ஒரு பாவியாக பார்ப்பாரென்றால், உன்னிலிருந்து எந்த விதமான வல்லமையையும் அவர் பெற்றுக்கொள்ள முடியாதே. பாருங்கள்? சரி. வல்லமை நமக்குள் இருக்க வேண்டும். நாம் வல்லமையைப் பெற்றுக்கொள்ளும் வரை... உண்மையான வல்லமையை நாம் பெற்று கொள்வோமானால், அதை நாம் விசுவாசத்தோடு கூட்டிக் கொள்ளலாம். அதுதான் நம்முடைய இரண்டாவது அஸ்திபாரமாகிய மதில் சுவர். 63முதலாவது நீ அடைய வேண்டியது விசுவாசமாகும். விசுவாசம் மட்டும் காரியத்தை செய்து விடாது. நீ பெற்றிருக்க... ''விசுவாசத்தோடு, வல்லமையை கூட்டி வழங்குங்கள்'' என்று பேதுரு கூறுகிறார். உன்னுடைய விசுவாசத்தோடு சேர்க்கத்தக்கதாக நீ வல்லமையை நிச்சயமாகப் பெற்றுக்கொள்ள வேண்டும். இன்றைக்குள்ள அநேக சபைகள் அதைப் பெற்றிருக்க வேண்டியதில்லை அல்லது வல்லமையின் நாட்கள் கடந்து விட்டது என்று போதிக்கிறபடியால், நீ வல்லமையைப் பெற்றுக் கொள்ளாதவனாய் இருக்கிறாய். “நீ அத்தகைய காரியத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை, நீ சபையை மட்டும் சேர்ந்தால் போதும், அந்த நாட்கள் கடந்து விட்டது'' என்று கூறுகிறார்கள். வல்லமை என்னும் வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்த யாவரும், அதை பெற்றுக்கொள்ள வேண்டுமென்பதை அறிவர். வல்லமையானது இயேசுவிலிருந்து புறப்பட்டு அப்பெண்மணியை சுகப்படுத்தியிருக்குமானால், தம்முடைய சபையினின்றும் அத்தகைய வல்லமை புறப்படுவதை அவர் எதிர்ப்பார்க்கிறார். ஏனெனில் அவரே நமது உதாரணமாயிருக்கிறார். ஜனங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக, வல்லமையை அவர் உடையவராயிருந்திருப்பாரென்றால், நாமும் கூட ஜனங்களுக்கு கொடுக்கத்தக்கதாக வல்லமையுடையவர்களாயிருக்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். வல்லமை என்றால் என்ன? இது 'சக்தி' அல்லது 'பலம்' என்று பொருள்படும். அநேகர் தேவனுடைய வல்லமையைக் கூட விசுவாசிப்பதில்லை. அவர்கள், ''அந்த நாட்கள் கடந்து விட்டன. நீங்கள் செய்ய வேண்டிய ஒரே காரியம், தெளித்தல் அல்லது ஊற்றப்படல் ஞானஸ்நானம் பெற்று, அல்லது ஏதாவதொன்றைச் செய்து, பின்பு உங்கள் பெயர்கள் சபை புத்தகத்தில் எழுதப்பட வேண்டியது தான், நீங்கள் செய்ய வேண்டியது அது தான்'' என்று கூறுகிறார்கள். ஆனால், இங்கு பேதுரு, ''உங்கள் விசுவாசத்தோடு, வல்லமையையும் கூட்டி வழங்குங்கள்'' என்று கூறுகிறார். 64பேதுரு தேவனுடைய வாசஸ்தலம் தேவனுடைய ஆலயம் கட்டப்படுவதைக் குறித்து கூறுகிறார். நீங்கள் வல்லமையைப் பெற்றுக் கொண்ட பின்பு நீங்கள் செய்ய வேண்டியது... ஒன்றிற்கு மேலாக ஒன்றைக் கட்டுவது போன்று விசுவாசத்தோடு, வல்லமையைக் கூட்டி கட்ட வேண்டும். அது சரி. முழு உலகத்திற்காகவும், வல்லமையுடையவனாயிரு. ''லீலி புஷ்பங்கள் எப்படி வளர்கிறதென்று கவனித்துப் பாருங்கள்; அவைகள் உழைக்கிறதுமில்லை, நூற்கிறதுமில்லை; என்றாலும் சாலமோன் முதலாய்த் தன் சர்வமகிமையிலும், அவைகளில் ஒன்றைப் போலாகிலும் உடுத்தியிருந்ததில்லை என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்'' என்று இயேசு கூறிய பாகத்திலிருந்து 20 வருடங்களுக்கு முன்பாக நான், ''போதகராகிய மேதகு. லில்லி அவர்களே'' என்ற தலைப்பில் ஒரு செய்தியளித்தேன் என்று நினைவு கூறுகிறேன். சேற்றிலிருந்து தோன்றும் லீலி புஷ்பத்தைக் கவனியுங்கள், நாளில் ஒவ்வொரு நிமிடமும் தன்னுடைய சத்தை பூமியினின்று அது எடுக்கிறதாயிருக்கின்றது. அது அவ்விதமாக உறியும் சத்தைக் கொண்டு என்ன செய்கின்றது? அந்த வல்லமையை அது தன்னை ரசிப்பவர்களுக்கென்று ஒரு அழகான காட்சியாக பரிணமிக்கின்றது. தேனீக்கள் தங்கள் பாகமான தேனை எடுத்துக் கொள்ளத்தக்கதாக லீலி புஷ்பமானது தன்னை திறந்து மலர்கின்றது. அது முறுமுறுக்காமல், தன்னை சர்வ சாதாரணமாக திறந்து கொடுக்கிறது. ஒரு தேனீ அதனிடமாக வந்து, ''போதுமான அளவு தேன் இல்லை'' என்று கண்டால் காரியம் எப்படியிருக்கும்? அந்த தேனீ தன் தலையை சொரிந்து கொண்டு, “எத்தகைய லீலி புஷ்பம் இது?'' என்று கூறுமல்லவா? 65ஒரு மனிதன் இரட்சிப்பை கண்டடைய முயற்சி செய்து அற்புதங்களும், அடையாளங்களும் கடந்துவிட்டது என்று விசுவாசிக்கிற சபைக்கு வருவானென்றால்... அது, எப்படியிருக்கிறதென்றால்... ஒரு சமயம் ஜாக்கோ என்பவர் ஒரு உணவு விடுதிக்குச் சென்று அங்குள்ள நீளமான உணவு பட்டியலைப் படிக்க ஆரம்பித்து கடைசியில், டீ - எலும்பு, இறைச்சி (T. bone steaks) என்ற உணவைக் குறிப்பிட்டு அதைக் கொண்டுவர சொன்ன போது, அது பரிமாறுபவன், ''ஐயா, அது நேற்றைய உணவு பட்டியல், இன்று எங்களிடம் அது இல்லை“ என்று கூறியதைப் போன்றிருக்கிறது. அவர் அந்த உணவுப் பட்டியலை அங்கேயே வைத்துவிட்டு, அந்த உணவு விடுதியை விட்டு வெளியேறிடுவார். அது உண்மை. ஏனெனில், சாப்பிடத்தக்க எதையும் அவர்கள் உடையவர்களாக இருக்கவில்லை. ஆகவே, நீ சாப்பிடத்தக்கதான உணவு எங்கிருக்கிறதோ, அந்த உணவு விடுதியை நோக்கிச் செல்லுவது தான் நல்லது. வளர்கின்ற ஒரு ஆவிக்குரிய மனிதனுக்கு உண்ணத்தக்கதாக உணவு அவசியமானது ஆகும். அது, தேவனுடைய வார்த்தையாயிருக்கிறது. அந்த ஒவ்வொரு தேவனுடைய வார்த்தையையும் நான் விசுவாசிக்கிறேன். தேவனுடைய பரிசுத்தர்கள் உண்ணத்தக்கதாக, தேவன் மேஜையை விரித்து வைத்திருக்கிறார் தாம் தெரிந்து கொண்டவர்களை, “வந்து போஜனம் பண்ணுங்கள்'' என்று தேவன் அழைக்கிறார். அவருடைய மன்னாவினால் போஷிக்கிறார் நம்முடைய தேவைகளை அவர் தருகிறார்: ஓ! எந்நேரமும் இயேசுவோடு உண்ணும் பாக்கியம்! அது சரி. ஆம், ஐயா. அவன் அதைப் பெற்றிருக்கிறான். சபையானது, ஜீவிக்கிற தேவனுடைய வாசஸ்தலமானது, கிறிஸ்துவை அறிந்து கொள்ளும் அறிவாகிய இந்த பரிபூரணமான மனிதனில் கட்டப்படுகின்றது. 66நீ நிச்சயமாக வல்லமையுடையவனாக இருக்க வேண்டும். முதலாவது சம்பவிக்கும் காரியம் என்னவென்றால், யாராகிலும் உன்னிலுள்ள வாசனையை முகர வாஞ்சையாயிருப்பார்கள். அத்தகையவன் சுய நலவாதியாயிரான். அவன் வாசனையைப் பெற்றிருக்கிறான். ஒருவன் தன் வாசனையை கொடுக்கும் முன்பு அவன் தானே அவைகளை அடைந்தவனாயிருத்தல் வேண்டும். அவன் தேனைக் கொடுக்கும் முன்பு அவன் தானே அவைகளை அடைந்தவனாயிருத்தல் வேண்டும். அவன் அழகைக் கொடுக்கும் முன்பு அவன் தானே அவைகளை அடைந்தவனாயிருத்தல் வேண்டும். முதலாவதாக உன் வல்லமையைக் கொடுப்பதற்கு முன்பு நீ அதை அடைந்திருக்க வேண்டும். ஆகவே, உன் விசுவாசத்தோடு வல்லமையைக் கூட்டி வழங்குவாயாக. ஆமென். புரிந்து கொள்ளுகிறீர்களா? நாம் இதிலே அதிக நேரம் நிலைத்திருக்க முடியும், ஆனால் நேரமானது நம்மிடமிருந்து கடந்து சென்றுவிடும். உன் விசுவாசத்தோடு, வல்லமையைக் கூட்டிக்கொள். 67முதலாவது விசுவாசம், இரண்டாவது வல்லமை, மூன்றாவதாக ஞானத்தையும் கூட்டி வழங்குவாயாக. இந்த ஞானம் உலகப்பிரகாரமான ஞானத்தை குறிப்பதில்லை. ஏனெனில் உலகப் பிரகாரமான ஞானம் தேவனுக்கு முன்பாக பைத்தியமாயிருக்கிறது. ஆனால், இந்த ஞானமானது நன்மை, தீமை எதுவென்று வகையறுத்து நியாயந்தீர்க்கிறதாயிருக்கிறது. உன்னுடைய விசுவாசத்தோடும், வல்லமையோடும் கிறிஸ்தவ ஞானத்தை (கிறிஸ்தவ சமுதாய ஞானம்) நீ பெற்றிருப்பாயென்றால், பின் வார்த்தையானது, எவ்விதம் உண்மை அல்லது தவறென்று நியாயந்தீர்ப்பாய்! உன்னுடைய பாரம்பரியங்களையும், அவிசுவாசத்தையும், நீ செய்ததாக உரிமைக் கொண்டாடும் எல்லாவற்றையும் புறம்பே தள்ள முடியுமானால் அப்பொழுது தான், தேவன் பொய்யுரையாதவர் என்பதை விசுவாசிக்கும் ஞானம் உனக்கு உண்டாயிருக்கும். “எந்த மனிதனும் பொய்யனே, தேவன் ஒருவரே சத்தியபரர்'' என்று வேதம் கூறுவதை கவனியுங்கள். பாருங்கள்? இப்பொழுது நீ ஞானத்தைப் பெற்றுக் கொள்ளுகிறாய். இதுவே உன்னதமான ஞானமாயிருக்கிறது. இதைப் பெறுவதற்காக, நீ ஒரு வேதாகமக் கல்லூரியில் நான்கு பட்டங்களையோ (degrees) அல்லது அதைப் போன்ற ஒன்றோ வேண்டியதில்லை, ஏனெனில் ஒரு உண்மையான தேவ மனிதனாக, தேவனுடைய ஜீவிக்கின்ற மனிதனாக நீ வளர்ச்சியடைய வல்லமை, ஞானம் போன்றவை உன் விசுவாசம் என்ற அடிப்படையான அஸ்திபாரத்தின் மேல் வைப்பதற்காக தேவனால் அருளப்படுகின்றது. ஆம், ஐயா. 68தேவனுடைய வார்த்தையின் ஞானத்தைக் கூட்டி வழங்கு. அற்புதங்களும், அடையாளங்களும் கடந்து போய்விடவில்லை, அது இந்நாளுக்குரியது என்று நீ நிச்சயமாக விசுவாசிக்க வேண்டும். தேவன் எதைச் சொன்னாரோ அதை நிறைவேற்ற வல்லவர் என்று விசுவாசிப்பதே தேவ ஞானமாகும். ஆபிரகாம் அதை விசுவாசித்தான். 100 வயது சென்றவனாயிருந்தும், ஆபிரகாம் தேவனுடைய வாக்குத்தத்தத்தைக் குறித்து அவிசுவாசமாய் சந்தேகப்படவில்லை. பாருங்கள்... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி) இந்த தேவ வார்த்தை எவ்வளவு சிரிப்புக்கிடமாயுள்ளது பாருங்கள்! 90 வயதான தன் மனைவியின் மூலம் ஒரு பிள்ளைக்காக 100 வயது சென்ற ஒருவன் காத்துக் கொண்டிருந்தான். பாருங்கள்? ஏறத்தாழ 50 வருடங்கள் மலட்டுத்தனமாக கடந்துசென்று விட்டது. அவளுடைய வாலிபப் பருவத்திலிருந்து, அவன் அவளோடு வாழ்க்கை நடத்தியிருந்தான். இப்பொழுதோ அவனுடைய ஊற்றும், சாராளுடைய கர்ப்பமும் மரித்துவிட்டது. நம்பிக்கையெல்லாம் கடந்துவிட்ட நிலைமை (நம்பிக்கையைப் பொருத்தமட்டில்). ஆனால் காரியங்கள் நம்பிக்கைக்கு எதிராக இருந்தாலும், ஆபிரகாம் நம்பிக்கையில் விசுவாசமாயிருந்தான். ஏனெனில் தேவன் தாம் வாக்குத்தத்தம் செய்ததை காத்துக் கொள்வார் என்ற ஞானம் அவனுக்குள்ளிருந்தது. 69அத்தகைய ஞானம் உனக்கு வரும்போது அதை உன் விசுவாசத்தோடு சேர்த்துக்கொள். உண்மையான வல்லமை உனக்குள் வரும்போது அதை உன் விசுவாசத்தோடு சேர்த்துக்கொள். நீ வீதியில் நடக்கும்போது ஒரு கிறிஸ்தவனைப் போன்று கிரியை செய்து, ஒரு கிறிஸ்தவனைப் போன்று வாழ்ந்து, பின்பு அதை உன் விசுவாசத்தோடு சேர்த்துக்கொள். நீ ஞானத்தை பெற்றவனால்...“அப்.2:38ல் கூறப்பட்ட காரியத்தோடு நான் எப்படி ஒத்துப்போவது? மத்.28:19வுடன் எப்படி ஒன்றாக்குவது என்பது எனக்குத் தெரியவில்லை. அது எனக்குத் தெரியவில்லை. ''இந்த தேவ வசனம் சரியா என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறுவாயாகில், சரி, அதனோடு ஒன்றையும் கூட்டாதே. ஏனெனில் தேவ ஞானத்தை நீ இன்னுமாய் பெற்றுக் கொள்ளவில்லை என்று பொருளாகிறது. பாருங்கள்? இப்பொழுது நீ என்ன செய்யப் போகின்றாய்? வேதம் தன்னில்தானே முரண்பட்டதாயிராது என்றும் தேவனைப் பற்றி அறிகிற தேவ ஞானம் உனக்குள் இல்லை என்றும் பொருளாகிறது. அதைக் குறித்து ஒன்றும் சொல்லாமல், அதை அவ்விதமே விட்டுவிடு. பாருங்கள்? அதை அவ்விதமே விட்டுவிடு. முழுதேவ வார்த்தைகளும், ஆவிக்குரிய பிரகாரமாக எழுதப்பட்டு முத்திரிக்கப்பட்டிருக்கிறது. அவைகளை தேவ ஞானமே வெளிப்படுத்த முடியும் என்று நீ காணும்போது தான் வேதமானது தன்னில்தான் முரண்பட்டதாயில்லை, என்று நீ கூற முடியும். அவ்விதம் நீ அதைக் கண்ட பின்புதான் ஒவ்வொரு தேவ வார்த்தைக்கும், ''ஆமென்'' என்று கூறி அதை உன் விசுவாசத்தோடு கூட்டி வழங்க முடியும். 70ஓ! இப்பொழுது, நீ ஒரு அழகான மனிதனாக வளர ஆரம்பித்து விட்டாய்! பாருங்கள்? நீ வளர்ந்துக் கொண்டிருக்கின்றாய். எதைக் கொண்டு? விசுவாசம், வல்லமை, பின்பு தேவ ஞானம் இவைகளைக் கொண்டு. இந்த மனிதனை இவைகள் எவ்விதம் கட்டி அமைக்கின்றது பாருங்கள்? உன்னால் இதைக் காண முடியும்... அதிலிருந்து நீ தப்பிக்க முடியாது. ஒரு பரிபூரண மனிதனாக வளர்ச்சியுற, இது ஒன்றே வழியாகும். ஆம் ஐயா. தேவனுடைய வார்த்தையை விசுவாசிப்பது சரியா, தவறா என்று நிதானி. ''நான் தேவனை சேவிப்பதா அல்லது பாரம் பரியத்தை சேவிப்பதா, நான் மறுபடியும் பிறப்பதா அல்லது ஒரு சபையை சேர்ந்து கொள்வதா'' என்று நிதானி. பின்பு நீ சரியாக நிதானிக்கிறாய் என்று வைத்துக் கொள்வோம், அப்பொழுது ஒரு போதகர் உன்னிடம் வந்து, ''அற்புதங்கள் அடையாளங்களெல்லாம் இந்நாளுக்குரியதல்ல'' என்று கூறும் பொழுது, வேதமானது, ''இயேசுகிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று போதிக்கிறதே, இதில் எதை நீ விசுவாசிக்கப் போகிறாய்? ''நான் தேவனை சார்ந்து கொள்ளுகிறேன்'' என்று நீ சொல்லும் போது, ஏதோ சொல்ல வேண்டுமென்பதற்காக நீ அதைச் சொல்லாமல், அது உன் இருதயத்திலிருந்து வருகின்றது. அங்கே விசுவாசம் என்ற ஒன்று உன்னிலிருந்து வெளியே தோன்றுகிறது. காரியம் அதுவே. உன்னுடைய விசுவாசம், “அவர் என்றும் மாறாதவராயிருக்கிறார். ஆமென். அதற்கு நான் சாட்சியாயிருக்கிறேன். அத்தகைய காரியத்தை எடுத்துப்போட, எந்த சக்தியும் இல்லை. அவரே சத்தியம் என்பதை நான் அறிந்துள்ளேன்,'' என்றும் கூறுகின்றது. ஆமென். பின் விசுவாசத்துடன் அதைச் சேர்த்துக் கொள். அதை அந்த அஸ்திபாரத்தின் மீது வைத்துவிடு. 71இப்பொழுது, நீ வளர்ந்து கொண்டு வருகிறாய். தேவனுடைய ராஜ்யத்தை நோக்கி, இந்த இடம் மட்டும் நீ வருகின்றாய் (சகோ. பிரன்ஹாம் வரைபடத்தில் சுட்டிக் காட்டுகின்றார் - தமிழாக்கியோன்) சரி. ஒரு போதகரோ அல்லது சில ஜனங்களோ உன்னிடம் அடுத்ததாக வந்து, ''வேதாகமத்தில் நீ படிக்கும் காரியங்கள் வேறொரு நாளுக்குரியது, ஏன் என்று நான் கூறுகிறேன். ஏனெனில், அக்காரியங்கள் இன்றைக்கு நமக்கு தேவையில்லை. பாருங்கள்? அது நமக்குத் தேவையில்லை. தெய்வீக சுகமளித்தலையும், சபை சீர் பொருந்தத்தக்கதாக அந்நிய பாஷை பேசி வரங்கள் கிரியை செய்கின்ற காரியங்களை நாம் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டியதில்லை, நாங்கள் இதைச் செய்வதும் இல்லை,'' என்று கூறலாம். நாம் அதற்கு வருவோம். நாம் அவற்றை அப்பியாசப்படுத்த வேண்டுமா, இல்லையா என்பதைக் குறித்த வேதவசனத்தை நான் எழுதிவைத்துள்ளேன். ஆனால், அதற்கு இங்கு அவர்கள், “எனக்கு தெரியாது. நான் அதை இந்நாளில் செய்யக்கூடாது. நான் செய்ய வேண்டிய ஒரே ஒரு காரியம்; ஜனங்களுக்கு முன்பாக நன்றாகவும், தீர்க்கமாகவும் பேசக் கற்று கொள்வதும், ஒரு மன நோய் வைத்தியரிடம் சென்று நம்மை ஜனங்களுக்கு முன்பாக கவரத்தக்க விதமாக படைக்க முடியுமா என்றும் சோதனை செய்து பார்க்க வேண்டியதேயாகும்; நம்மிடம் தான் அதிகப்படியான சபையோர் இருக்கின்றார்கள்; நம்முடைய ஸ்தாபனத்தை கட்டுவோம்'' என்றெல்லாம் கூறுவார்கள். 72அத்தகைய ஸ்தாபனத்தை நாம் கட்டுகிறதில்லை. இந்தக்காலை நான் ஒரு ஸ்தாபனத்தைக் கட்டுவதற்காக இங்கில்லை! ஒரு ஸ்தாபனத்தைக் கட்டுவதற்காக ஒரு போதும் கிறிஸ்து என்னை அனுப்பவில்லை! தனிப்பட்டவர்களை, இயேசு கிறிஸ்துவின் அளவிற்கு (stature) அவர்களை வளரச் செய்யவும், அறிவின் வளர்ச்சிக்காகவும் அவருடைய வார்த்தையினால், அவர்கள் ஆவியின் வல்லமையுள்ள வீடாகவும், ஆவியின் தங்கும் ஸ்தலமாகவும் திகழ, நான் அவர்களுக்கென்று கிரியை செய்வதற்காக கிறிஸ்து என்னை அனுப்பினார். ஒரு தனிப்பட்ட நபரை, அவருடைய வார்த்தையினால் அந்த ஸ்தானத்திற்குக் கட்டுவது, பாருங்கள். ஒரு கூட்டமைப்பை ஸ்தாபனமாக்குவதற்காக அல்ல, தனிப்பட்ட மனிதர்களை தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாக வளரச் செய்வதற்கே அவர் என்னை அனுப்பினார். அதுவே என் நோக்கமாயுமிருக்கிறது. உன் விசுவாசத்துடன் வல்லமையைக் கூட்டிக்கொள். உன் வல்லமையுடன் ஞானத்தை கூட்டிக்கொள். நல்லது, இப்பொழுது நீ ஒரு ஸ்தானத்தை அடைகிறாய். 73''நல்லது. அவைகளை இக்காலத்திற்கென்று நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது'' என்று அவர்கள் கூறத்தொடங்குவர். ஆனால் நீயோ, அது இக்காலத்திற்குரியது என்று நிச்சயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். வேதவசனங்கள் ஒருக்காலும் பொய்யுரையா. “வேதத்திலுள்ள எந்த தீர்க்கதரிசனமும் சுயத்தோற்றமான பொருளை (Private Interpretation) யுடையதாயிராதென்று நீங்கள் முந்தியறிய வேண்டியது'' என்று வேதம் கூறுகிறது. அது எழுதப்பட்டிருக்கிற விதமாகவே, அதை விசுவாசியுங்கள். பாருங்கள்? இவைகளைப் பெற்றுக் கொள்ளத்தக்கதான ஒரே வழி, பரலோகத்தில் பிறந்த தேவ ஞானத்தைப் பெற்றுக்கொள்ளுதலேயாகும். பரலோகத்தில் பிறந்த ஞானமானது வார்த்தையை நிரூபிக்கும். பாருங்கள்? பாவனையாக விசுவாசிப்பதில்லை, நிச்சயமாகவே நீ அதை விசுவாசிக்க வேண்டும். ''நான் அதை பெற்றுக் கொண்டேன்'' என்று கூற முயற்சிப்பாயானால், ஒரு கறுப்புப்பறவை மயிலினுடைய இறகுகளை தன்னில் சொருகிக் கொள்வதைப் போன்றது அது. ஏனெனில் அவ்விறகுகள் அங்கு இயற்கையாக வளரவில்லை யாதலால், அவை துரிதமாக விழுந்து போகும். 74''அவன் நீர்க்கால்களின் ஓரமாய் நடப்பட்ட மரத்தைப் போல“ என்று தாவீதும் சங்கீதத்தில் கூறினதை நினைக்கும் பொழுது, அங்கே நடப்பட்டு பயிராவதற்கும், செயற்கையாக சொருகிவைப்பதற்கும் உள்ள வித்தியாசத்தை அவன் உணர்த்துவதை கவனியுங்கள். நடப்பட்டு பயிரான பழைய சிந்தூர மரம் வேர்கள் பாய்ச்சப்பட்டு ஸ்திரமாயிருக்கும்; அலைகள் அதின் மேல்மோத மோத இன்னும் ஆழமாக ஸ்திரப்படும். ஆனால் சொருகப்பட்ட ஒரு மரக்கட்டையோ வேரில்லாத காரணத்தினாலும், அஸ்திபாரம் இல்லாத காரணத்தினாலும் அதற்கு என்ன நேருமோவென்று தெரியாது. பாருங்கள்? அது வேதகல்லூரியில் படித்து விட்டு வரும் சில ஜனங்களைப் போன்றிருக்கிறது, “நல்லது. மேதகு இன்னார் என்னை ஊழியத்திற்கென்று அபிஷேகித்திருக்கிறார்'' என்று நீ கூறலாம். அத்தகையக் காரியம் ஒன்றையும் வித்தியாசப்படுத்துவதில்லை. உன்னுடைய விசுவாசத்தினால் தான் கிறிஸ்து உன்னில் பிறக்கிறார். பாருங்கள்? நீ மறுபடியும் ஜெநிப்பிக்கப்பட்டு அதற்குள் பிறக்கிறாய். நீ அவ்வாறு பிறந்த பின்பு, இச்சுபாவங்களை உன்னோடு சேர்க்க வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஆகவே, அவைகளை உன்னோடு சேர்த்துக் கொண்டேயிரு. அப்பொழுது தான், நீ நேர் கோட்டில் செல்ல முடியும். 75இந்த தேவ ஞானத்தைப் பற்றியதான மற்றொரு காரியத்தையும் பேச வேண்டும். பாருங்கள்? இன்றைய நாளில் வேதமானது தன்னுடைய அர்த்தத்தை இழந்து விட்டதா? அநேக ஜனங்கள், வேதம் சரியாக அந்தப் பொருளைக் குறிப்பிடவில்லை என்று உன்னிடம் கூறுவார்கள். நான் ஒரு தேவ குமாரனாயிருந்து, அவர் என் மேல் கவனமுள்ளவராய் என்னுடைய பாவங்களை கண்டித்து என்னை திருத்துகிறார். அவர் உனக்கும் ஒவ்வொரு தேவனுடைய குமாரனுக்கும், குமாரத்தியிற்கும் செய்கிறார். உன்னையும், என்னையும் குறித்தே அவர் அவ்வளவாய் கவனமுள்ளவராயிருந்து நம்மை திருத்துவாரானால், நமக்கு உதாரணமாயிருக்கின்ற தம்முடைய வார்த்தையைக் குறித்து அவர் எவ்வளவு கவனமுள்ளவராயிருப்பார்? அவரே வார்த்தையாயிருக்கிறாரே! ''ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்.'' 76வார்த்தையே, இயேசு கிறிஸ்துவின் வெளிப்பாடாயிருக்கிறார்: கிறிஸ்து வார்த்தையில் வெளிப்படுகிறார் என்று வேதம் கூறுகிறது. நீ அவருடைய பிரமாணங்களை மீறும் போது, உன்னை அவர் கவனித்து திருத்துவாரானால், உன்னை நியாயந்தீர்க்கும் அவருடைய பிரமாணத்தைக் குறித்து அவர் எவ்வளவு கவனமுள்ளவராயிருப்பார்?ஆமென். (சகோ. பிரன்ஹாம் ஒருமுறை கை கொட்டுகின்றார் - ஆசி) வேதம் தன்னுடைய அர்த்தத்தை இழந்துவிட்டது என்று என்னிடம் கூறாதே. பரிசுத்த ஆவியின் உண்மையான தேவ ஞானத்தை நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியின்ஞானம் எப்பொழுதும் வார்த்தையை, ''ஆமென்'' என்று ஆமோதிக்கும். முரண்பட்ட கருத்துக்கள் வேதத்தில் காணப்படுகிறது என்று உனக்குத் தோன்றுமானால், அமைதியாக உட்கார்ந்து ஜெபத்தோடு காரியத்தை ஆராய்ச்சி செய்; அப்பொழுது நீ அறிந்து கொள்கின்ற முதல் காரியம் என்னவென்றால், பரிசுத்த ஆவியானவர் அசைவாட ஆரம்பிப்பார். பின்பு சிறிது நேரங்கழித்து அவைகள், ஒன்றோடு ஒன்று பொருந்துவதை நீ காண்பாய். அதுதான் காரியம். பாருங்கள்? அதுவே தேவ ஞானமுமாயிருக்கின்றது. 77“நல்லது. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று வேதம் கூறுகிறது. சபையோ, ''ஒரு சிலவற்றில் அவர் மாறாதவர்தான்,'' என்றே கூறுகின்றது. ஹூ! ஹூம்! அந்தப் பிளவை நீ அங்கேயே முறித்துப் போடுகின்றாய். பாருங்கள்? ஆம், ஐயா. இல்லை, ஐயா. அவர் மாறாதவறாகவே இருக்கிறார். ஆம், ஐயா. இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார். அவரில் எந்தவித மாற்றமும் இல்லை. அவர் தம்முடைய சபையில் ஜீவித்திருந்து அதே கிரியைகளைச் செய்கிறார். “இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது, நீங்களோ என்னைக் காண்பீர்கள்; இதோ உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' என்றார். மேலும் அவர், ''நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான்'' என்றார். அவர் மறுபடியும், ''நானே திராட்சை செடி, நீங்கள் கொடிகள்'' என்று கூறினார். கொடியானது செடியின் ஜீவனால் மட்டுமே வாழ்கிறது. செடியில் என்ன ஜீவன் வெளிப்படுகிறதோ, அதுவே கொடியிலும் வெளிப்படுகிறது. மகிமை! ஆகவே, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்; அது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிலுள்ள ஜீவனை உற்பத்தி செய்கின்றது. ஆமென்! 78ஞானம்; உலகப் பிரகாரமான ஞானமல்ல - (உலகப் பிரகாரமான ஞானம் தர்க்கிக்கின்றது.) பாருங்கள்?விசுவாசம் தர்க்கம் செய்வதில்லை. ஒரு குறிப்பிட்ட காரியம் நிகழப்போகிறது என்று, தேவன் உனக்கு வெளிப்படுத்துகிறார் என்றால் உலகத்திலுள்ள ஒவ்வொரு விஞ்ஞானியும் அதற்கு முரணாகக் கூறி, அது நடைபெறாது என்று கூறுவார்கள்; இருந்தாலும் நீ அதை விசுவாசிக்கின்றாய். பாருங்கள்? ஆம் ஐயா, விசுவாசம் சந்தேகம் கொள்ளாது. நாம் சந்தேகத்தைப் புறம்பாக்குவோம் என்று வேதம் கூறுகிறது. விசுவாசத்தோடு நீ தர்க்கிக்காதே. விசுவாசமானது தர்க்கங்களுக்கப்பாற்பட்டது; அது தன்னுடைய இடத்தை அறியும். விசுவாசம் கிரியை செய்கிறது! விசுவாசம் ஸ்திரமாயிருக்கிறது! அது ஒருபோதும் அசையாது. யாதொன்றும் அதை அசைக்க முடியாது. இது, அது, மற்றது என்று கூறி யார் என்ன கூறினாலும் அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. அது சிறிதளவும் அசையாது. ஏனெனில் காத்திரு, காத்திரு, காத்திரு, காத்திரு என்று கூறி அது அசையாமல் நிலை கொண்டிருக்கிறது. அதில் எந்த மாற்றமும் ஏற்படுவதில்லை. அது அசையாமல் நிலை கொண்டிருக்கிறது. இக்காரியங்கள் சம்பவிக்கப் போகின்றன என்று தேவன் நோவாவுக்குக் கூறியிருந்தார்; அவன் அதை விசுவாசித்தான். பாருங்கள்? இவ்விதமாய் சம்பவிக்கும் என்று தேவன், மோசேக்கு கூறியிருந்தார்; அவன் அதை விசுவாசித்தான். இயேசு தமது சீஷர்களிடம், “இன்னின்னபடி பெந்தெகொஸ்தேயின் நாளில் சம்பவிக்கும். ஆகவே, நீங்கள் காத்திருங்கள்'' என்று கூறினார்; அவர்கள் அவ்விதமே விசுவாசித்துக் காத்திருந்தனர். ஆம், ஐயா. 79சரி. ஞானம். அது உலகத்தின் ஞானமல்ல. ஆனால் அது பரலோக ஞானம், பரலோக ஞானம், தேவன் எல்லா ஞானத்திற்கும் ஊற்றாகவும், அவரே வார்த்தையாயும் இருக்கிறார். நீ அந்த பரலோக ஞானத்தைப் பெற்றிருப்பாயானால், வார்த்தையை நீ விசுவாசித்து அதைக் குறித்து தர்க்கிக்க மாட்டாய். அரசாங்கத்திற்கு வரி கொடுக்கும் காரியத்தில் இந்த சபையானது அல்லது எனக்கு நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இருந்தது. வழக்கு விசாரணையில், அவர்களில் ஒருவர் என்னிடம்... நான்... “சபையைக் குறித்து எந்த விதமான தப்பிதத்தையும் அவர்கள் காணவில்லை. ஆகவே அவர்கள் ஆரம்பித்தனர்... இவ்வழக்கு நடைபெறும் போது, ஒரு சமயம் அந்த வழக்கறிஞர்களில் ஒருவர், எனக்கு விரோதமாக வாதாடினார். நான் அவரைப் பார்த்து, ''நல்லது ஐயா. இந்த வழக்கில் தப்பிதம் ஏதும் காணவில்லையென்றால் பின் ஏன் நீங்கள் என்னை தொடர்வதை விட்டு ஓயக் கூடாது?'' என்று கேட்டேன். 80நான் தொடந்து அந்த மனிதனுடன் சில வசனங்களை குறிப்பிட்டு பேசிக் கொண்டிருந்தேன். அவர் ஒரு மகத்துவமான அந்தஸ்தில் உள்ளவர். ஒரு சுருட்டையும் கையில் வைத்துக் கொண்டிருந்தார். அவர் என்னிடம், “பிரன்ஹாம் அவர்களே, நான் வேதக் கல்லூரி மாணவன்'' என்று கூறினார். அதற்கு நான், ''அதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்'' என்றேன். அவர், ''நீங்கள் அபிஷேகிக்கப்பட்ட கைக்குட்டைகள் என்று அழைத்து அவைகள் மேல் மூடபக்தியான சிறிய ஜெபத்தை செய்து, வெளியே அனுப்புகிற அந்த மூடபக்தியைக் குறித்து அறிந்துகொள்ள நான் விரும்புகிறேன். அதற்காக எவ்வளவு பணம் வசூலிக்கின்றீர்கள்?'' என்று கேட்டார். அதற்கு நான், ''இல்லை ஐயா. அதற்கு எந்த விலையும் கிடையாது'' என்றேன். அதற்கு அவர், ''நல்லது, அப்படியானால் இந்த மூட பக்தியைப் பற்றியென்ன?'' என்று கேட்டார். அதற்கு நான், ''ஐயா, இதை மூட பக்தியென்றா அழைக்கின்றீர்கள்? நீங்கள் ஒரு வேத மாணாக்கன் என்று சற்று முன்புதான் தங்களைக் குறித்து கூறினீர்களே'' என்றேன். அதற்கு அவர், ''ஆம், நான் ஒரு வேத மாணாக்கன்தான்'' என்றார். 81அப்பொழுது நான், ''அப்படியானால், அப்: 19:11ஐக் குறித்தென்ன?'' என்று கேட்டேன். தேவ ஞானம்! தேவ ஞானத்துக்கு முன்பாக அவர் நன்றாக சிக்கிக் கொண்டார். அவர் பேசிக் கொண்டிருந்த பொருளை திசை திருப்ப முயற்சி செய்தார். அப்பொழுது நான், யோவான்;5:14ஐக் குறித்து என்ன என்றேன். அவரால் பதில் கூற முடியவில்லை. பிறகு நான், யாக்கோபு;5:14ஐக் குறித்து என்ன என்றேன். அவரால் பதில் கூற முடியவில்லை. உங்களுக்கு யோவான்;3:16ஐக் குறித்து தெரியுமா? என்றேன். பாருங்கள்? உலக ஞானத்தைப் பைத்தியமாக்கும் தேவ ஞானத்தை! மேலும் அவர், ''பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் இந்த வழக்கை வேதத்தைக் கொண்டு வழக்காட முயற்சிக்கிறீர்கள்; ஆனால் நாங்களோ தேசத்தின் சட்டத்தை வைத்து இதை வழக்காட முயற்சிக்கிறோம்'' என்றார். அப்பொழுது நான், “ஐயா, இந்த தேசத்தின் சட்டங்கள் வேத அடிப்படையைக் கொண்டதல்லவா?அப்படியென்றால் அது தானே நீதியாகும்'' என்றேன். ஆமென்! 82நிச்சயமாக. தேவஞானம்; உலக ஞானமல்ல. தேவன் எதைச் சொன்னார் என்பதை அறிந்து அதைச் செய்வதே ஆவிக்குரிய ஞானமாகும். அதுவே சரியானதாகும். அவர் எல்லாக் காரியங்களிலும் மாறாதவரென்றும், வார்த்தை சொல்வது உண்மையென்றும் நீ விசுவாசிக்க முடியுமானால் நீ அந்த ஞானத்தைப் பெற்றுகொண்டு அவருடைய ஒவ்வொன்றையும், ''ஆமென்'' என்று கூறி ஏற்றுகொள்வாய். அது முற்றிலும் சரி. இந்த ஞானத்தை உன் விசுவாசத்தோடு கூட்டிக்கொள். அது முற்றிலும் சரி. ஆம், ஐயா. யாராகிலும் உன்னிடம் வந்து, வேதம் தன்னுடைய வல்லமையை இழந்து விட்டது என்றும், பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் என்று ஒன்றுமில்லையென்றும் கூறுவார்களானால் அதை உன் விசுவாசத்தோடு கூட்டிக் கொள்ளாதே. ஹூம். அது கிரியை செய்யாது. கற்பாறையின் மேல் வைத்த களிமண்ணைப் போன்று அது உதிர்ந்துவிடும். 83சில ஜனங்கள் உன்னிடம் வந்து, ''இன்றைக்கு இந்த வேதத்தை நம்பக் கூடாது, நீ ஜாக்கிரதையாயிரு. அதை நம்பி பின் செல்லாதே. அது சத்தியமாயிருக்க முடியாது,'' என்று கூறுவார்கள். “இந்த வேதத்தை நம்ப முடியாது.'' இத்தகையக் காரியங்களை, நீ எப்பொழுதும் கேள்விப்பட்டு கொண்டேயிருப்பாய். நல்லது. அத்தகைய காரியம் உன் சிந்தையில் எழுமானால் அதை உன் விசுவாசத்தோடு கூட்ட முயற்சிக்காதே. ஏனெனில் அது கிரியை செய்யாது. அங்கு உன் முழுக் கட்டிடமும் தகர்ந்து விழுந்து விடும். மணவாட்டியானவள் பரிசுத்த ஆவியினால் சாந்து பூசப்பட்டிருக்க வேண்டும்... இசைந்திருப்பதை நான் குறிப்பிடுகிறேன். இந்த சாந்துதான் கல்லை இணைத்து முத்தரிக்கின்றது. உருக்கி ஒட்டவைக்கப்பட்ட இரப்பர் குழாய் (tube) ஒட்டுப் போடப்பட்ட குழாயை விட அதிக காலம் நீடித்திருக்கும் என்பதை அறிவீர்களா? ஒட்டு போடப்பட்ட இடத்தில் சிறிது உஷ்ணத்தை காட்டினால், அது துரிதமாக உருகிபோய் விடும். ஆம், ஐயா! பாருங்கள்? இன்றுள்ள அநேக ஜனங்களோடு காரியம் அவ்விதமாகத் தான் உள்ளது. தங்கள் ஞானத்தை உலக ஞானத்தோடு, உலகத்தின் பழைய பசையினால் ஒட்டவைக்க முயற்சிக்கிறார்கள்; உபத்திரவம் வரும் போது, “நான் ஒரு வேளை தவறாகி விட்டேனோ'' என்று கூறுகிறார்கள். பாருங்கள்?துரிதமாக அவர்களுக்குள்ளிருக்கும் காற்றானது குறைந்து போய் தட்டையாகி விடுகின்றனர். மேலும் கீழும் குதித்து கூச்சலிடும் உன் காரியங்களெல்லாம் ஒன்றிற்கும் உதவாது. நீ, வெளி வந்ததான அந்த சேற்றில் மறுபடியும் நீ, இருப்பதை ஜனங்கள் காண்பார்கள். பாருங்கள்? அது சரி. ஆனால், பரிசுத்த ஆவியின் போதுமான அனலில் நீ தரித்திருப்பாயானால் அது உன்னையும், வார்த்தையையும் ஒன்றாக்கிவிடும். அதுவே தான். நீயும், வார்த்தையும் ஒன்றாகிவிடுவது. ஒவ்வொரு தேவ வாக்குத்தத்தமும், நீயும் ஒன்றாகும் வரை தரித்திருப்பாயானால், பின்பு உன் விசுவாசத்தோடு அதை கூட்டிக்கொள். அவ்விதம் நீ இசைந்தில்லையானால் அதை உன்னோடு சேர்க்காதே. 84வேத வார்த்தை விசுவாசிக்கக் கூடியதல்ல என்று நீ கூறுவாயானால், நீ அதைக்கூட்டிக் கொள்ளாதே. பரிசுத்த ஆவியின் ஞானஸ்நானம் பன்னிரெண்டு அப்போஸ்தலருக்கு மட்டும்தான்'' என்று இக்காலத்தில் கூறும் சில சபைகளின் பேச்சை உன் விசுவாசத்தோடு கூட்டாதே. அங்குதான் அவர்களுடைய அஸ்திபாரமெல்லாம் குலைந்து போயிற்று. பாருங்கள்? நேற்றைய தினம், நாம் உசியா ராஜாவைப் பற்றி சிந்தித்தோம். அவன் தவறான அஸ்திபாரத்தைப் போட, நம்பின அவனுடைய காரியம் சீர்குலைந்து அவன் அங்கே குஷ்டரோகியானான். இங்கு ஜனங்கள், ''அவைகள் பன்னிரெண்டு அப்போஸ்தலருக்கு மட்டும், பன்னிரெண்டு அப்போஸ்தலருக்கு மட்டுமே,'' என்று கூறுகிறார்கள். 85சகோ. ரைட் என்பவரின் இடத்திற்கு நான் ஒரு சமயம் சென்றிருந்தேன். அவர்கள் இங்கே எங்கோ இருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒரு நாள் இரவு அங்கிருந்த கூட்டத்தில் நானும், மற்றும் நாலு அல்லது ஐந்து பிரசங்கிகளும் பேச இருந்தோம். அந்த நாலு பேரில் ஒருவர் அங்கு எழுந்திருந்து, ''இப்பொழுது நான் ஒரு காரியத்தைச் சொல்லப் போகிறேன். ஓ! நீங்களெல்லோரும் அருமையான ஜனங்கள்!'' நான், யாரோ ஒருவரிடம், ''ஆனால் இங்கு ஒருவர் அமர்ந்திருக்கிறார், கவனியுங்கள்,'' என்று கூறினேன். அங்கு, சகோ. ஜுனியர் ஜாக்சன் அவர்களும் இருந்தார். அவர் பேசி முடித்திருந்தார். அவர் சொன்னார்... தேவனுடைய கிருபையைக் குறித்து பேசிக் கொண்டிருந்தார். ஓ, என்னே! அவர் அனல் கொண்டு காத்திருந்தார். அவர் எழுந்து நின்று, புரிந்து கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தார். இவ்விதமாக ஆரம்பித்து, இரவு முழுவதுமாகப் பேசினார். அவர், “இப்பொழுது, நான் உங்களுக்கு ஒன்றைக் கூறப் போகிறேன். இங்கே அமர்ந்துள்ள திரு. பிரன்ஹாம் ஒரு அந்தி கிறிஸ்து,'' என்றார். அங்கிருந்த மற்ற பிரசங்கிகள் எதையோ செய்ய ஆரம்பித்தார்கள். அப்பொழுது நான், “சகோதரர்களே, சற்று பொறுங்கள், ஒன்றும் பேசாதிருங்கள். அந்த மனிதன் ஒருவர் தான். நாமோ ஒரு கூட்டமாயிருக்கிறோம், அவர் பேசட்டும், அவர் என்னை மட்டும் சாடி பேசுகிறார்'' என்றேன். அந்த மனிதன் பேசுவதை சவாலாக எடுத்துக்கொள்ள விரும்பினேன். பாருங்கள்? 86ஆகவே அவர், ''பிரன்ஹாம் ஒரு அந்திகிறிஸ்து,'' என்று தொடந்து பேசிக் கொண்டேயிருந்தார். அவர் மேலும் தொடர்ந்து, “பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தையும், தெய்வீக சுகமளித்தலையும் பன்னிரெண்டு அப்போஸ்தலர் மட்டுமே பெற்றனர், வேதம் எங்கே பேசுகிறதோ அங்கே நாங்களும் பேசி அது எங்கே அமைதலாயிருக்கிறதோ அங்கே நாங்களும் அமைதலாயிருக்கிறோம்'' என்றார். இவ்விதமாக அவர் அரைமணி நேரம் உளறி முடிக்கும் வரைநான் காத்திருந்தேன். பின்பு நான் எழுந்து, ''சற்று பொறுங்கள், அவர் பேசிய அநேகக் காரியங்களை நான் இங்கு குறித்து வைத்திருக்கிறேன், அவைகளில் சிலவற்றிற்கு பதிலளிக்க எனக்கு அவகாசம் கொடுங்கள். வேதம் எங்கு பேசுகிறேதோ, அங்கே பேசி அது எங்கே அமைதலாயிருக்கிறதோ அங்கே அவரும் அமைதலாயிருப்பதாக கூறினார். இதற்கு நீங்களெல்லோரும் சாட்சிகள்'' என்றேன். அதற்கு அவர்கள், ''ஆம்'' என்றார்கள். நான் தொடர்ந்து, ''பன்னிரெண்டு பேர் மட்டும் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றனர் என்று அவர் கூறினார், ஆனால் 120 பேர் பரிசுத்த ஆவியைப் பெற்றனர் என்று என்னுடைய வேதம் கூறுகிறது,'' என்று முதல் வெடியை அங்கு வெடித்தேன். ஆமென்! உலகப்பிரகாரமான ஞானத்தை அது தகர்த்தெரிந்து விட்டது. பாருங்கள்.... 87மேலும் நான், “பவுல் பரிசுத்த ஆவியைப் பெற்றார்'' என்று நான் நம்புகிறேன். வேதம் அவ்விதமே கூறுகின்றது.... அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான் என்று. பிலிப்பு சமாரியாவில் போய் பிரசங்கித்த போது, அவர்கள் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றனர். பரிசுத்த ஆவியை மட்டும் அவர்கள் பெறவில்லை. பேதுருவும், யோவானும் அங்கு வரவழைக்கப்பட்டு அவர்கள் அந்த ஜனங்களின் மேல் கைகளைவைத்த போது பரிசுத்த ஆவியைப் பெற்றனர் என்று வேதம் கூறுகின்றது. அவர் கூறியபடி பன்னிரெண்டு பேர் மட்டுமா பரிசுத்த ஆவியைப் பெற்றார்கள்? ''அப்.10:49ல் பேதுரு மேல் வீட்டில் இருக்கும் போது கொர்நேலியுவின் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று தரிசனம் கண்டான். பின்பு கொர்நேலியுவின் வீட்டில் தேவ வார்த்தையைப் பேசிக் கொண்டிருக்கும்போதே வார்த்தையைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்த ஆவியானவர் வந்தார். வேதமானது இன்னும் பேசிக் கொண்டிருக்கிறது. உன்னுடைய சபை எங்கு, எந்த நிலைமையில் இருக்கிறது, அது பின்மாற்றத்தில் இருக்கிறது'' என்றேன். அது சரி. பாருங்கள்? மேலும் நான், ''தெய்வீக சுகமளித்தல் பன்னிரெண்டு அப்போஸ்தலருக்கு மட்டும் தான் என்று நீர் கூறினீர், ஸ்தேவான் சமாரியாவிற்கு சென்று பிசாசுகளைத் துரத்தி வியாதியஸ்தர்களை சொஸ்தப்படுத்தினான். அந்த பட்டினத்திலே மிகுந்த களிப்பு உண்டாயிற்று என்று வேதம் கூறுகிறது. அவன் பன்னிரெண்டு அப்போஸ்தலர்களில் ஒருவனாயிருக்கவில்லை, அவன் ஒரு மூப்பனாயிருந்தான்'' என்றேன். ஆமென்! 88மேலும் நான் தொடர்ந்து, “மேலறையிலிருந்த பன்னிருவரில் ஒருவனாக பவுல் இல்லை என்றாலும் அவனுக்குள் சுகமாக்கும் வரம் இருந்தது. சுகமளிக்கும் வரங்களைப் பாருங்கள். முப்பது வருடங்கள் கழிந்த பின்பும் அவன் கொரிந்து சபையையில் சுகமாக்கும் வரத்தை கிறிஸ்துவின் சரீரத்தில் நியமித்துக் கொண்டிருந்தான்'' என்றேன். ஓ, என்னே! ஏதோ ஒரு புத்தகத்தை படித்ததினால் பெற்ற ஞானத்தை நீ குப்பை தொட்டியில் எரிந்துவிடுவது நலமாயிருக்கும். “இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார்'' என்று தேவன் உரைத்த இந்த ஞானத்திற்கு வா. ''ஆமென்'' என்று சொல்லுங்கள். ஆம், ஐயா. ஆம், ஐயா. அது பன்னிருவருக்கு மட்டு மல்ல, அது எல்லோருக்கும் தான். உன்னுடைய விசுவாசமானது ஒவ்வொரு வேத வார்த்தையின் உறுப்புக்கும், ”ஆமென்'' என்று கூறுவதான ஞானம் வருமானால் நீ, ''எல்லாம் சரி'' என்று கூறி, அதை உன் விசுவாசத்தோடு கூட்டிக்கொள். 89நாம் சீக்கிரம் முடிக்க வேண்டும், ஏனெனில்... நான்காவதாக இச்சையடக்கம் - அதைக் குறித்துப் பேசுவது எனக்கு மிகவும் நல்லுணர்வைத் தருகிறது. ஆமென். (ஒரு சகோதரர், ''நாங்கள் அதில் களி கூருகிறோம்'' என்று கூறுகிறார் - ஆசி) ஆம். நான்காவதாக... உங்களுக்கு நன்றி. “இச்சையடக்கத்தைக்'' கூட்டுவாயாக. ஓ, என்னே! நாம் இப்பொழுது தன்னடக்கத்திற்கு வந்துள்ளோம். (ஆங்கில வேதாகமத்தில் ”Temperance“ என்பதற்கு தமிழில், ''தன்னடக்கம்'' என்று பொருள்படும் —- தமிழாக்கியோன்). முதலாவதாக நீ விசுவாசம் பெற்றவனாயிருக்க வேண்டும், அதுவே ஆரம்பமாகும் பின்பு உன் விசுவாசத்தோடு, வல்லமையைக் கூட்டிக்கொள், அது சரியான வல்லமையாயிருக்கும் பட்சத்தில். பின்பு வல்லமையோடு, ஞானத்தைக் கூட்டிக்கொள், அது சரியான தேவ ஞானமாயிருக்கும் பட்சத்தில். இப்பொழுதோ நீ, ''தன்னடக்கத்தை'' அதனோடு கூட்டப் போகின்றாய். இச்சையடக்கம் அல்லது தன்னடக்கம் என்பது, குடித்தல் போன்ற கெட்டப் பழக்கங்கள் முதலானவைகளை நிறுத்துவது என்று பொருளாகாது. இல்லை, இல்லை, தன்னடக்கம் என்பது குடித்தல் போன்ற கெட்ட பழக்கத்திலிருந்து, சுகம் அளிப்பது அல்ல. இந்த வேதப்பிரகாரமான தன்னடக்கமானது, பரிசுத்த ஆவியின் தன்னடக்கமாயிருக்கிறது. குடித்தல் போன்ற பழக்கங்கள் மாம்ச இச்சையாயிருக்கின்றது. ஆனால், நாம் பேசுகின்ற காரியமோ பரிசுத்த ஆவியின் தன்னடக்கமாயிருக்கின்றது. அதன் பொருள் என்ன வென்றால், எவ்விதம் உன்னுடைய நாவையடக்க வேண்டுமென்பதே. வீண் வார்த்தைகளை அலப்புகிறவனாக அல்ல, உன்னுடைய கோபத்தை எவ்விதம் அடக்குவதென்பதே. யாராவது உன்னை இடைமறித்து பேசும் போது, எப்பொழுதும் அவர்கள் மேல் எரிந்து விழும் சுபாவமல்ல. ஓ, என்னே! ஓ, என் கர்த்தாவே! நம்மில் அநேகர் அவ்விதமிருக்கின்றனர். அப்படித்தானே? காரியம் இப்படியாயிருக்கும் போது, ஏன் தேவன் தம்முடைய சபையில் இருந்து, எப்பொழுதும் செய்யும் அற்புதங்களையும், அடையாளங்களையும், செய்யவில்லை என்று நாம் அதிசயிக்கிறோம். 90ஆம், ஐயா. பாருங்கள்? இக்காரியங்கள் யாவையும் கூட்டிக் கொள்ளுங்கள். இந்த தன்னடக்கத்தை கூட சேர்த்துக்கொள். உன்னிடம் யாராகிலும், கடும் கோபமாக பேசும் போது, சாந்தமாக எவ்விதம் பதிலளிக்க வேண்டுமென்பதே தன்னடக்கமாயிருக்கின்றது. யாராவது உங்களைப் பார்த்து, ''நீங்கள் ஒரு கூட்ட பரிசுத்த உருளைகள்'' என்று கூறும் போது, உடனே உங்கள் கைச்சட்டையை சுருட்டிவிட்டுக் கொண்டு அவர்கள் மேல் பாய்வது அல்ல. பாருங்கள்? அது அல்ல. அதற்கு மாறாக தேவ அன்போடும், சாந்தத்தோடும், தயவோடும் பேசுவதே காரியமாகும். அவ்வாறு நீ இருக்க விரும்புகிறாயா? (சபையார், ''ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி) யாராகிலும் உன்னை கோபமூட்டும் போது, நீ திரும்பிக் கோபப்படாதே. கிறிஸ்துவை உன்னுடைய உதாரணமாக வைத்துக்கொள். ''நீர் தேவனுடைய குமாரனேயானால் இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும்'' என்று பிசாசு கூறினான். அவர் அவ்விதமே செய்து தம்மை தேவன் என்று காண்பித்திருக்க முடியும். ஆனால் அங்கு அவர் தன்னடக்கமாயிருந்தார். அவரை அவர்கள், ''பெயல்செபூல்'' என்று அழைத்த போது, அதை அவர்களுக்கு மன்னித்தார். அது உண்மையா? அவருடைய தாடியின் மயிரைப் பிடித்திழுத்து முகத்தில் துப்பினார்கள், ''சிலுவையை விட்டு கீழே இறங்கிவா'' என்று கூறினார்கள். அவரோ, ''பிதாவே இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே'' என்றார். 91அவருக்குள் வரமானது இருந்து... தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக அவருக்குள் இருந்ததால், அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. ஜனங்களுக்குள் தப்பிதம் என்னவென்றும் மற்றவற்றையும் அவர் எடுத்துக் கூறி, அற்புதங்களை அவர் செய்வதை ஜனங்கள் கண்டார்கள். இருந்தாலும், அவர்கள் அவர் தலையில் முள் முடியை வைத்து அடித்து, அவர் கண்களை கந்தைத் துணிகளால் மூடி, ''உன்னை அடித்தவன் யார் என்று கூறும்; அப்பொழுது நாங்கள் விசுவாசிப்போம்'' என்றார்கள். பாருங்கள்? அவர் தன்னடக்கமாயிருந்தார். அவ்விதம் நீ தன்னடக்கத்தைப் பெற்றுக் கொண்டாயானால் அதை உன் விசுவாசத்தோடு கூட்டிக்கொள். ஆனால் இன்னுமாக நீ கோபப்பட்டு, எரிச்சலுள்ளவனாய் காணப்படுவாயானால், ஓ, உனக்கு இன்னுமாக தன்னடக்கம் வரவில்லை என்று பொருள். இதை நீ கூட்டி சேர்க்க முடியாது. ஏனெனில் அது, அதனோடு சேராது. பாருங்கள்? அது அங்கு ஒட்டாது. அது அங்கு ஒட்டாது. ஒரு சிறு ரப்பர் துண்டையெடுத்து, அதனை ஒரு இரும்புத் துண்டோடு ஒட்டவைக்க முடியாது. அது கிரியை செய்யாது. அப்படி ஒட்ட வைக்க வேண்டுமானால், அது அந்த ரப்பரைப் போன்றே வளையக் கூடியதாயிருக்க வேண்டும். பாருங்கள்? விசுவாசமும், தன்னடக்கமும் அவரிலிருந்தபடியே, உன்னுடைய விசுவாசமும், தன்னடக்கமும் பரிசுத்த ஆவியின் தன்னடக்கமாக மாற வேண்டும்; அப்பொழுது தான் அது அவரோடு இசைந்திருக்கும். உன்னுடைய வல்லமையும், ஞானமும் அவருடையது போன்று இருக்கும் போது மட்டுமே, அது கூட்டி சேர்க்கப்படும். 92உன்னுடைய ஞானம் அவருடைய ஞானத்தைப் போலவே இருக்க வேண்டும். ''பிதாவின் சித்தத்தை செய்யவே நான் வந்தேன்,'' என்று இயேசு கூறினார். பாருங்கள்? பிதாவின் வார்த்தையினால் அவர் ஒவ்வொரு பிசாசையும் வென்றார். வானமும், பூமியும் ஒழிந்துபோகும், அவருடைய வார்த்தையோ ஒரு போதும் ஒழிந்து போவதில்லை. பாருங்கள், நீ அத்தகைய ஞானத்தை அடையும் போது, அது உன்னுடைய விசுவாசத்தோடு ஒட்டிக் கொள்ளும். அவரிடமிருந்த தன்னடக்கத்தைப் போல உன் தன்னடக்கம் இருக்குமானால், அப்பொழுது அது ஒட்டிக்கொள்ளும். மனிதனால் உண்டாக்கப்பட்ட, பாவனையான விசுவாசத்தையும், தன்னடக்கத்தையும் நீ கொண்டிருப்பாயானால், சந்தர்ப்பம் வரும்போது, நீ, ''ஓ! நான் அவனை கன்னத்தில் அறைந்திருக்க வேண்டும். ஆனால் நான் அவ்விதம் செய்யவில்லை. ஏனென்றால், ஒருவேளை அவர்கள் என் பெயரை செய்தித்தாளில் பிரசுரிக்கக் கூடும்'' என்று கூறுவாய். அத்தகைய தன்னடக்கத்தைக் குறித்து அவர் இங்கு கூறவில்லை. இத்தகைய காரியத்தை நீ கூட்டி சேர்க்க முயலாதே. ஏனெனில், அது கிரியை செய்யாது. ஆனால் இருதயத்தினின்று தோன்றும், உண்மையான அன்போடு எல்லா மனிதரையும் மன்னித்து, உன் சமாதானத்தைக் காத்துக் கொள்ளும் போது, அது ஒட்டிக்கொள்ளும். அத்தகைய தன்னடக்கத்தை உன் விசுவாசத்தோடு கூட்டிக்கொள். வ்யூ! சபையானது குறைவாயிருக்கிறதென்றால், அதிசயமொன்றுமில்லை. அது சரியா? 93''மனந்திரும்பி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுகொள் என்று வேதம் கூறுகிறது'' என்று நான் கூறும் போது, ஒரு கண்டிப்பான திரித்துவக்காரன், அதை அவிசுவாசித்து, ''அது ஒரு பழைய அந்திகிறிஸ்து; அவன் ஒரு இயேசு நாமக்காரன்; இயேசு நாமம் மட்டுமே என்று கூறுபவன் அவன்'' என்று கூறுவானென்றால், அதை கவனித்துக்கொள், சகோதரனே! அதைக் குறித்ததான உன்னுடைய தன்னடக்கம் என்ன என்று எனக்குத் தெரியாது. பாருங்கள்? நீ இங்கு வந்து, ''சகோதரன் பிரன்ஹாம், நாம் இருவரும் ஒருமித்து இதைக்குறித்து தீர்வு காண்போம், இதை எனக்கு விளக்கிக் காட்டுங்கள்'' என்று கூறலாமே? பாருங்கள்? அதன்பின் இங்கு வந்து நீ அதை கவனிக்கலாமே. அது உனக்கு முன்பாக சரியாக வைக்கப்படும் பொழுது நீ சென்று விடுவாயனால் - இன்னும் சில நிமிடங்களில் “தேவ பக்தி'' என்பதைக் குறித்துப் பேசும் போது - நாம் அதைப் பார்க்கலாம். ஆனால், அத்தகைய சந்தர்ப்பத்தில் நீ உன் நிதானத்தை இழந்து, நீ எடுக்கும் ஒவ்வொரு முடிவின் மீதும் எரிச்சலுடன் குதிப்பாயானால், பாருங்கள்? நீ இன்னுமாக வேதம் குறிப்பிடும் தன்னடக்கத்தைப் பெற்று கொள்ளவில்லை. எவ்விதம் பதிலுரைக்க வேண்டும் என்று நீ கற்றுக்கொள்ள வேண்டும். பின் அதை நீ பெற்றுக் கொண்டால், உன் விசுவாசத்தோடு அதைக்கூட்டிக் கொள்ளலாம். 94நான்காவதாக, ஐந்தாவதாக, உன்னுடைய விசுவாசத்தோடு “பொறுமையைக்'' கூட்டிக்கொள்.”விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்கும்'' என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? நாம், ஏன் எங்குள்ளோம்? ஆம், ஐயா, பாருங்கள்? இந்த வளர்ச்சியில் அடுத்தபடியாக வைத்துக் கட்டப்படுவது பொறுமையாகும். தேவன் தம்முடைய கட்டிடத்தில் உண்மையான வஸ்துக்களை வைக்கிறார் என்பதை அறிகின்றீர்களா? சகோதரனே, சகோதரியே, நாம் எவ்வளவு குறைவுள்ளவர்களாயிருக்கிறோம். பாருங்கள்? நாம், ஏன், எங்குள்ளோம்? ஆம், ஐயா, பாருங்கள்? விசுவாசம் நமக்கிருக்கின்ற காரணத்தால், மகிமை, சத்தமிடுதல் மற்றும் அதைப் போன்ற காரியங்களை உடையவர்களாயிருக்கிறோம்; ஆனால் இங்கு கூறப்பட்ட இந்த காரியங்களை நாம் உடையவர்களாயிராமற் போனால், தேவனால் நம்மை அந்த பூரண வளர்ச்சிக்குக் கட்ட முடியாது. பாருங்கள் அவரால் முடியாது, நம்மை அவ்வித ஸ்தலத்திற்குக் கொண்டு செல்ல தேவனால் முடியாது. நாம் மற்ற எல்லாக் காரியங்களைக் கொண்டுள்ளோம். நாம் விழுகிறோம், அதனின்று நழுவி விடுகிறோம். பாருங்கள்? அவரால் தம்முடைய சபையைக் கட்ட முடியாது. 95எதனுடன் பொறுமை? எத்தகைய பொறுமையைக் குறித்து தேவன் இங்கு பேசுகிறார்? முதலாவது அவர் தேவனுடன் பொறுமையாயிருந்தார். உன்னிடத்தில் உண்மையான விசுவாசம் இருக்குமானால், உண்மையான பொறுமையையும், நீ பெற்றுக் கொள்வாய். ஏனெனில் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குகிறதாயிருக்கிறது. தேவன் ஏதாகிலும் சொல்வாரென்றால் அதை அவ்விதமே விசுவாசிக்கின்றாய். அது அவ்வளவே. நீ பொறுமையைப் பெற்றுள்ளாய். ''நல்லது, நேற்றிரவு, அவர் என்னை சுகமாக்க வேண்டுமென்று நான் அவரிடம் ஜெபித்தேன், ஆனால் இன்று காலை நான் மிகவும் மோசமாக வியாதியுற்றிருக்கிறேன்'' என்று கூறுவாயானால், ஓ! என்னே! அது எத்தகைய பொறுமை? தேவன் ஆபிரகாமுக்கு வாக்கு கொடுத்து இருபத்தைந்து வருடங்கள் சென்றும், காரியம் நிகழ எந்தவித அடையாளமும் காணப்படவில்லை; இருந்தாலும் அவன் விசுவாசித்தான். அவன் தேவனிடத்தில் பொறுமையாயிருந்தான். ஹூ.. ஹூம். எப்பொழுதும் தேவனை உனக்கு முன்பாக நிறுத்திக்கொள். உன்னுடைய அடுத்த குறுக்கீடும் அவராகவே இருக்கட்டும். நீ அவரை குறுக்கிடாமல் அவரை உன் முன்பாக நிறுத்திக்கொள். அவர் கூறினார், எனவே அது நிச்சயமாக நடந்தேறும் என்றவிதமாக, அவரை உன் பிரதானமாக வை. பாருங்கள்? அதுதான் சரியான தாகும். 96நோவா பொறுமையுடையவனாயிருந்தான். ஆம். நோவா, உண்மையான தேவ பொறுமையுள்ளவனாயிருந்தான். ''இந்த உலகத்தை ஜலப்பிரளயத்தினால் அழிக்கப் போகிறேன்'' என்று தேவன் கூறினார். நோவா, 120 வருடங்கள் பிரசங்கித்தான். அதிக பொறுமையுடையவனாயிருந்தான். ஒரு சிறு மழைத்துளியாகிலும் விழாமல், எப்பொழுதும் இருந்தது போல காரியங்கள் காணப்பட்ட போதிலும் நோவா பொறுமையோடு, 120 வருடம் பிரசங்கித்தான். தேவன் உன் விசுவாசத்தைப் பரீட்சிக்கிறார். அது சரி. தேவன் தம்முடையவர்களை பரிட்சித்தறிகிறார். அவர் நோவாவிடம் கூறின பிறகு, இப்பொழுது அவர் நோவாவைப் பார்த்து, “நோவா, நீ போய் பேழையில் ஏறிக்கொள், மிருகங்கள் மற்றவைகளையெல்லாம் உன்னிடத்தில் நான் வரப்பண்ணுவேன். இந்தப் படிகளின் வழியாய், நீ மேலே ஏறி அந்த சாரத்தின் வழியாக இந்த ஜனங்களைப் பார். நீ உள்ளே இருக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன். ''என்ன சம்பவிக்கப் போகிறது என்று கடந்த 120 வருடங்களாக நான் பிரசங்கித்தேனோ, அது நாளையதினம் சம்பவிக்கப்போகிறது'' என்று நீ அவர்களிடம் சொல்ல வேண்டுமென்று நான் விரும்புகிறேன், அது சரி, நீ சென்று அவர்களிடம் சொல்,'' என்றார். அங்கு நடந்த முதல் காரியம் என்ன? நோவா பேழைக்குள் பிரவேசித்தான். ஆனாலும், அங்கு மழை காணப்படவில்லை. 97நோவா ஆயத்தமானான். அவன் தன் மழை 'கோட்'டையும், மற்றவற்றையும் அணிந்துக் கொண்டு வெளியே எட்டிப்பார்த்தான் - சிறிது இடைவெளிகள் விட்டுவிட்டு எட்டிப் பார்த்தான். அவன் ஆயத்தமானான். ஆனால் அடுத்த நாளோ... அவன் தன்னுடைய குடும்பத்தையும், மருமகள்களையும் அழைத்து, ''ஓ என்னே! நாளைய தினம் இதுவரை நீங்கள் கண்டிராத ஒரு காரியத்தை காணப் போகின்றீர்கள். வானம் கருமையடந்து மேகங்களால் சூழ்ந்து, இடியும் மின்னலும் உண்டாகி, மழை பொழியும், தேவனுடைய பட்டயமானது வானத்தை இரண்டாகக் கிழிக்கும். நம்முடைய வார்த்தையை, 120 வருடங்களாக கேட்காத இந்த பாவ சந்ததியின் மேல், தேவ கோபாக்கினை விழப்போகிறது. நீங்கள் கவனித்துப் பாருங்கள்'' என்று கூறியிருப்பான் என்று நான் நம்புகிறேன். பாருங்கள்? ஏனெனில் அரைகுறை விசுவாசிகள் அங்கு கூடி கொண்டு இருமனமாக இருந்திருக்கலாம்; அவர்கள் எப்பொழுதும் உள்ளே வரமாட்டார்கள். அத்தகையவர்கள் இன்றும் நம்மத்தியிலுண்டு. ஆகவே, அத்தகையவர்கள் அங்கு வந்து, ''நல்லது, அந்தக் கிழவன் சொல்வது ஒரு வேளை சரியாக இருக்கலாம், நாம் அங்கு சென்று நாளைக் காலை சில மணி நேரங்கள் காத்திருந்து பார்ப்போம்'' என்று கூறினார்கள். 98அடுத்த நாள், கருமையான மேகத்திற்குப் பதிலாக அங்கு சூரியன் எப்பொழுதும் போல பிரகாசித்தது. நோவா சாரத்தின் வழியே எட்டிப் பார்த்தான். அவர்கள் அவனை நோக்கி, “ஏய்! எங்கே மேகங்கள்?” என்று கேட்டார்கள். அந்த ஆள் அங்கு வந்து அங்கிருந்த ஒருவனிடம், ''ஆ! நீயும் அவர்களில் ஒருவன். நீ, இங்கே இவ்விதமாய் சுற்றிக் கொண்டிருந்ததை நான் கண்டேன்'' என்றான். அதற்கு அவன், ''மன்னியுங்கள் ஐயா, ஹா...ஹா... நான் ஏதோ ஒன்றினால் உந்தப்பட்டு அவ்விதமாய் கூறிவிட்டேன்'' ஹா... ஹா... என்றான்.'' ஆனால் நோவா, பொறுமையுடையவனாயிருந்தான். அவன் அவர்களைப் பார்த்து, “மழை இன்று வரவில்லையென்றால், நாளை நிச்சயமாக வரும்'' என்று கூறினான். அதுதான் சரி. ஏன்? தேவன் அவ்விதம் உரைத்திருந்தார். ''அதை எப்பொழுது உன்னிடம் கூறினார், நோவா?'' என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நோவா, ''120 வருடங்களுக்கு முன்னால் அவர் எனக்குக் கூறினார். இதோ இன்று வரை நான் அதற்காக காத்திருக்கிறேன்'' என்று கூறினான். அவ்விதமே தேவனும் தம்முடைய சபைக்காக இந்நாள் மட்டும் காத்திருக்கிறார்; நீ அதைக்குறித்து கவலை கொள்ளாதே. அது அவ்விதமே சம்பவிக்கும்; ஏனெனில், அவர் அதைக்குறித்து வாக்களித்திருக்கிறார். அந்த மகத்தான உயிர்த்தெழுதலுக்காக, இந்நேரம் மட்டும் நாம் காத்திருக்கிறோம். அது நிச்சயம் சம்பவிக்கும். அதைக் குறித்து கவலை கொள்ளாதே. 99நீ நித்திரை அடையலாம், அது... பொறுமையோடு காத்திரு. அது சம்பவிக்கும் முன் நீ நித்திரையடைந்து விடலாம். ஆனால் அந்த நேரத்தில் நீ விழித்தெழும்புவாய். நீங்கள் பாருங்கள், அவர் அவ்விதம் வாக்களித்துள்ளார். இங்கு மரணம் என்று அழைக்கிறோமே, அது நித்தரை மட்டுமே. இங்கு மரணம் என்பதை நாம், சற்று நித்திரையாயிருப்பதையே அல்லது கிறிஸ்துவுக்குள் நித்திரையாயிருப்பதையே கூறுகிறோம். கிறிஸ்துவுக்குள்ளாக மரித்தல் என்பது ஒன்றும் கிடையாது. ஜீவனும், மரணமும் ஒருங்கே காணப்படுவதில்லை. பாருங்கள்? நாம் சிறிது நித்திரையாயிருப்போம். நம்முடைய நண்பர்கள் அதனின்று நம்மை அழைக்க முடியாது. தேவன் மட்டுமே நம்மை அழைக்க முடியும். ''அவர் என்னை கூப்பிடட்டும், நான் அவருக்கு மறுஉத்தரவு கொடுப்பேன்'' என்று யோபு கூறினான். யோபு இன்றைக்கு 4000 வருடங்களாக நித்திரையாயிருக்கிறான். அதைக் குறித்து கவலைக்கொள்ளாதே, அவர் எழுப்புவார், அதைக் குறித்து கவலை கொள்ளாதே. அவர் இன்னுமாகக் காத்துக் கொண்டிருக்கிறார். 100நோவா காத்திருந்தான். நான்காவது நாளும் கடந்து சென்று விட்டது. ஆனால், அங்கு மழையேதுமில்லை. அதைக் குறித்துப் பரவாயில்லை, அது நிச்சயமாக சம்பவிக்கப் போகிறது. நோவாவின் மனைவி அங்கு வந்து, ''நீங்கள் கூறினதைக் குறித்து நிச்சயமாயிருக்கிறீர்களா?'' என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. ''அவ்விதம் பேசாதே'' என்று நோவா கூறுகின்றான். அவன் விசுவாசம் உடையவனாயிருந்தபடியால் பொறுமையைப் பெற்றிருந்தான். ஆம் ஐயா, அவன் வல்லமையை யுடையவனாயிருந்தான். தேவன் உண்மையுள்ளவர் என்ற ஞானத்தையும், தன்னடக்கத்தையும் உடையவனாய் இருந்தான். அவன் தன்னுடைய தன்னடக்கத்தை இழந்தவனாய், ''ஓ! இக்காரியம் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. என்னுடைய புகழையெல்லாம் நான் இழந்து விட்டேன்,'' இல்லை, இல்லை, ''ஜனங்கள் இனி என்னை மதிக்கமாட்டார்களே, ஆகவே நான் மறுபடியும் சென்று புதிதாக வேறொரு காரியத்தை தொடங்குவேன்'' என்று அவன் கூறவில்லை. இல்லை, இல்லை. அவன் பொறுமை யுள்ளவனாயிருந்தான். தேவன் வாக்களித்திருந்தார். அவர் அதைச் செய்வார். அவர் அதைச் செய்வார். ஏனெனில், தேவன் அவ்வாறு உரைத்திருந்தார். 101நோவாவின் குமாரன் அங்கு வருவதை என்னால் காண முடிகின்றது. (நோவா வயது சென்றவனாகி, நரைத்த தன் தாடியை வருடிவிட்டுக் கொண்டிருக்கிறான்). அவன் நோவாவைப் பார்த்து, ''அப்பா, நீங்கள் ஒரு பழைய கோத்திரப் பிதா என்று நான் அறிவேன், நான் உங்களை நேசிக்கிறேன். ஆனால், நீங்கள் சிறிதளவு தவறாயிருப்பதற்கு ஏதாகிலும் சாத்தியக் கூறுகள் உண்டா?'' என்று கேட்டான். ''ஓ, இல்லை. இல்லை.'' ''ஏன்?'' அதற்கு நோவா, “தேவன் அவ்விதம் கூறினார்'' என்று விடையளித்தான். மேலும் அவன் குமாரன், “அப்பா, இதோ, இந்த ஆறு நாளும் இங்கே இந்த பெரிய, பழைய, உலர்ந்த இருட்டு பேழைக்குள் உட்கார்ந்துக் கொண்டிருக்கிறோம். நாம் உள்ளும் புறமுமாக அதற்குக் கீல் பூசினோம். இத்தனை வருடங்களாக நாம் இந்தப் பேழையைக் கட்டினோம். நீங்களும் உங்கள் தலை வழுக்கையாகி, மயிரெல்லாம் நரையாகுமட்டும் அங்கு பிரசங்கித்தீர்கள். இப்பொழுதும் இன்னின்ன காரியத்தை நீங்கள் கூறுகின்றீர்கள். இந்த ஜனங்கள் பரிகசித்து சிரித்துக் கொண்டு அழுகிய தக்காளிப் பழங்களை பேழையின் மேல் எரிகின்றார்கள். நீங்கள் செய்கின்ற காரியத்தைக் குறித்து கவனமாயிருங்கள்'' என்று கூறினான். அப்பொழுது நோவா, ''என் மகனே பொறுமையாயிரு'' என்று பதிலளித்தான். ''நிச்சயமாக அதை நம்புகிறீர்களா, அப்பா?'' என்று அவன் மறுபடியும் கேட்டான். அப்பொழுது நோவா, ''நிச்சயமாக மழை பெய்யும்!'' என்று கூறினான். நோவாவின் மருமகள் அவனிடம் வந்து, ''அப்பா உமக்கு தெரியுமா, நான்....'' ''நிச்சயமாக மழை பெய்யும்!'' ''இத்தனை வருடங்களாக பலவற்றையும் ஆயத்தம் செய்து நாம் காத்திருக்கிறோம். மழை பெய்யும் என்று ஒரு வாரத்திற்கு முன்பு கூறினீர்களே, இதோ நாம் இதற்குள் இங்கே இருக்கிறோம். இதோ பேழையின் கதவெல்லாம் அடைக்கப்பட்டு விட்டது. இதற்குள்ளாக நாம் நடந்து கொண்டிருக்கிறோம். சூரியன் எப்பொழுதும் போல, இன்றும் தகித்துக் கொண்டிருக்கிறதே'' என்றாள். அதற்கு நோவா, ''ஆனால் மழை பெய்யப் போகிறது!'' என்று கூறினான். ''அதை எப்படியறிவீர்கள்?'' என்று அவள் கேட்டாள். அதற்கு நோவா, ''தேவன் அவ்விதம் கூறினார்'' என்றான். 102அந்த விதமாக நீ பொறுமையைப் பெற்றுக் கொண்டால், அதை உன் விசுவாசத்தோடு கூட்டிக்கொள். ஆனால் அவ்வித பொறுமை உனக்கிராவிடில் அதை சேர்த்துக் கொள்ள முயற்சிக்காதே. அவ்விதம் செய்தால், அது கிரியை செய்யாது. அது தெய்வீக சுகமளித்தல் மீதும் கிரியை செய்யாது. அது வேறொன்றின் மீதும் கிரியைச் செய்யாது. பாருங்கள்? அது எந்த வஸ்துவோடு ஒட்ட வைக்கப்பட்டிருந்ததோ அதனோடு இணைந்திருக்க வேண்டும். அது சரி. அப்பொழுதுதான் நீ அதைக் கூட்டிக்கொள்ள முடியும். தேவனுடைய வாக்குத்தத்தத்தின் பேரில் நீ பொறுமையாயிருக்க வேண்டும். ஆம், ஐயா. நோவா அவ்விதம்தான் விசுவாசித்து, 120 வருடம் தேவனோடு பொறுமையாயிருந்தான். 103மோசே தேவனோடு பொறுமையாயிருந்தான். ஆம், ஐயா. ''மோசே, என் ஜனங்கள் இடுகிற கூக்குரலை நான் கேட்டேன், அவர்களை விடுவிக்கும்படி இறங்கி வந்தேன். ஆகவே, என் ஜனங்களை எகிப்திலிருந்து அழைத்து வரும்படி உன்னை பார்வோனிடத்திற்கு அனுப்புவேன் வா,'' என்று கர்த்தர் கூறினார். அங்கே தேவனுக்கும், மோசேக்கும் இடையில் சிறிது முரண்பாடு காணப்பட்டது. ஆனால் கர்த்தர் தம்முடைய மகிமையை அவனுக்குக் காண்பித்தார். அவன் தேவனுடைய மகிமையை ஒரு முறை கண்டபின்பு, ''இப்பொழுது நான் செல்கிறேன்'' என்றான். அவன் விசுவாசமுடையவனாயிருந்தான். கர்த்தர் அவனை நோக்கி, ''உன் கையிலிருக்கிறது என்ன மோசே?'' என்றார். அதற்கு அவன், ''ஒரு கோல்'' என்றான். ''அதை தரையிலே போடு'' என்று அவர் கூறினார். அது சர்ப்பமாக மாறிற்று. “ஓ! இது என்ன?'' என்று மோசே ஆச்சரியப்பட்டான். அப்பொழுது கர்த்தர், ''உன் கையை நீட்டி அதன் வாலைப் பிடி, மோசே. அந்தக் கோலை ஒரு சர்ப்பமாக மாற்ற என்னால் கூடுமானால், அதை திரும்பவும் ஒரு கோலாக மாற்றவும் என்னால் முடியும்'' என்றார். ஆ! (சகோ. பிரன்ஹாம் தன் கைகளை மூன்று முறை கொட்டுகிறார் - ஆசி.) ஆமென்! தேவன் எனக்கு இயற்கையான ஜீவனை கொடுக்க முடியுமென்றால், ஆவிக்குரிய ஜீவனையும் அவரால் எனக்குக் கொடுக்க முடியும்! தேவனால் எனக்கு முதல் பிறப்பை கொடுக்க முடியுமானால், இரண்டாம் பிறப்பையும் அவரால் எனக்குக் கொடுக்க முடியும்! ஆமென்! தேவனால் தெய்வீக சுகமளித்தலைக் கொடுக்க முடியுமானால், அதே ஊழியத்தை கடைசி நாட்களில் அவர் திரும்பவும் எழுப்பி தம்முடைய நாமத்தை மகிமைப் படுத்திக்கொள்ள முடியும்! அது சரி. ''என்னால் கோலை சர்ப்பமாக மாற்ற முடியும். அதையே திரும்பவும், கோலாக மாற்றவும் என்னால் முடியும். நீ உன் கையை நீட்டி அதின் வாலைப் பிடி. மோசே தன் கையை நீட்டி அதைப் பிடித்தபோது, அது அவன் கையிலே கோலாயிற்று. மோசே அதனோடு தேவ ஞானத்தைச் சேர்க்க ஆரம்பித்தான்.'' பாருங்கள்? மேலும் கர்த்தர் அவனை நோக்கி, ''உன் கையை உன் மடியில் போடு'' என்றார். ''சரி. அதைக் குறித்து....'' அவன் தன் கையை தன் மடியிலே போட்டு அதை வெளியே எடுக்கும் போது, ''இதோ அவன் கை உறைந்த மழையைப் போல் வெண்குஷ்டம் பிடித்திருந்தது.'' ''ஓ கர்த்தாவே, என் கையைப் பாரும்'' என்று மோசே கூறினான். அதற்கு அவர், ''மோசே உன் கையை திரும்பவும், உன் மடியிலே போடு'' என்றார். அவன் அவ்விதமே செய்து தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்ற சதையைப் போலாயிற்று. மோசே ஒன்றின் மேல் ஒன்றை கூட்டிக்கட்ட ஆரம்பித்தான். ஆம், ஐயா. 104அவன் எகிப்திற்கு சென்றான். அங்கு முதலாவது வேறு பாடுகளின் காட்சி (contrast)... அவன் அங்கு சென்றான். அவன் வெளியில் சென்று, “என் ஜனங்களைப் போகவிடு என்று கர்த்தர் சொல்லுகிறார். பார்வோனே, நீர் இதை அறிந்து கொள்ள வேண்டுமென்று நான் விரும்புகிறேன். நான் அவருடைய பிரதிநிதியாக இங்கு நிற்கிறேன், நீர் எனக்குக் கீழ்ப்படிய வேண்டும்'' என்றான். அதற்கு பார்வோன், ''கீழ்ப்படிவதா? நான் யார் என்று உனக்குத் தெரியுமா? நான் பார்வோன். அடிமையாகிய உனக்கு நான் கீழ்ப்படிவதா?“ என்று கூறினான். அப்பொழுது மோசே, ''கீழ்ப்படிவதையா, அல்லது அழிந்து போவதையா, எதை நீர் தெரிந்து கொள்ளவிரும்புகிறீர்? இதில் ஏதாகிலும் ஒன்றை தெரிந்துக் கொள்ளும்,'' என்றான். ஏன்? தான் பேசுகிற காரியத்தை மோசே அறிந்திருந்தான். அவன் அங்கு மலையிலே தேவனை சந்தித்து பேசினான். அவன் நிறைவேற்ற வேண்டிய ஊழியமும், கட்டளையும் அவனுக்கு உண்டு. அவன் விசுவாசமுள்ளவனாய், தான் எங்கு நிற்கிறான் என்பதை அறிந்திருந்தான். ''நான் உனக்குக் கீழ்ப்படிய நீ விரும்புகிறாயா? இங்கிருந்து ஓடிப் போய்விடு'' என்று பார்வோன் கூறினான். அதற்கு மோசே, ''நான் உனக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்கப் போகின்றேன்'' என்றான். அதற்கு பார்வோன், “ஒரு அடையாளத்தைக் காட்டு பார்க்கலாம்'' என்றான். அப்பொழுது மோசே தன் கோலை தரையிலே போட்டான், அது சர்ப்பமாயிற்று. 105அதைக் கண்ட பார்வோன், ஏன்? ''இது ஒரு அற்பமான மந்திரவாத வித்தை! யந்நேயும், யம்பிரேயும் இங்கே வந்து உங்கள் கோல்களையும் தரையிலே போடுங்கள்,'' என்றான். அவர்கள் அவ்விதமே செய்தபோது அவைகளும் சர்ப்பங்களாக மாறின. அப்பொழுது பார்வோன், ''அற்பமான நீங்கள், எகிப்தியனாகிய என்னிடம் வந்து மந்திர வித்தையையா உங்கள் கேலிக் கூத்தையா காட்டுகிறீர்கள்? பாருங்கள், நானும் அதை செய்து விட்டேன்'' என்றான் —- மனதை அறியக் கூடிய மந்திர வித்தையா காட்டுகிறீர்கள் (நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.) “மனோவசியக் காரியத்தை இங்கு வந்து செய்து காட்டுகிறீர்கள். நாங்களும் கூட அதே காரியத்தை செய்ய முடியும்.'' மோசே என்ன செய்தான்? அதற்கு மோசே ஒன்றும் பதிலளிக்கவில்லை. ''ஓ! திருவாளர் பார்வோன் அவர்களே, மன்னித்துக் கொள்ளுங்கள் ஐயா, உங்கள் அடிமையாயிருப்பேன்'' என்றா கூறினான்? இல்லை ஐயா. அவன் அங்கு அப்படியே நின்றான்! ஆமென்! அங்கே சரியாக நிலைத்து நின்றான். ''உன் சமாதானத்தைக் காத்துக் கொள், நான் உனக்கு ஒரு காரியத்தைக் காண்பிக்கிறேன்'' என்று தேவன் கூறியதில் தன் இருதயத்தில் சந்தேகமின்றி நின்றான். 106அவர் ஏதாகிலும் உன்னைச் செய்யச் சொல்லி, நீ அவ்விதமே சரியாக செய்த பின்பு, காரியங்கள் அங்கு தவறாகப் போகத்தக்கதாக காணப்பட்டால், பொறுமையுடையவனாய் அங்கேயே தரித்து நில். அப்பொழுது மோசே, ''அங்கே நான் என் அஸ்திபாரத்தைப் போட்டபொழுது அதின் மேலே பொறுமையானது வைக்கப்பட்டது. ஆகவே, நான் காத்திருந்து கர்த்தர் என்ன செய்யப் போகிறார் என்பதை பார்ப்பேன்'' என்றான். அங்கே அந்த பழைய சர்ப்பங்கள் ஒன்றிற்கு எதிராக ஒன்று, ''ஸ்.... ஸ்.... ஸ்'' என்று சப்தமிட்டு கொண்டு ஊர்ந்து கொண்டிருந்தன. அங்கு நடந்தது முதலாவது என்ன தெரியுமா? மோசேயின் சர்ப்பம் அங்கு ஊர்ந்து சென்று, ''கல்ப்.... கல்ப்.... கல்ப்....'' என்று மற்ற சர்ப்பங்களை விழுங்கி விட்டது. மோசே பொறுமை யுடையவனாயிருந்தான். ''கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ, புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து, எழும்புவார்கள்.'' ''அது சரியா?'' (சபையார். ''ஆமென்'' என்று கூறுகிறார்கள் - ஆசி) பாருங்கள்? ஆம், ஐயா. ''அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள்'' கர்த்தரிடத்தில் காத்திருந்து பொறுமையுள்ளவனாயிரு. 107ஆம் ஐயா. இஸ்ரவேலர் மீட்கப்படும் சமயம் வந்த போது, அங்கே வேறு பாடுகளின் காட்சிகள் (Contrasts) வந்தான. மோசே பொறுமையோடு காத்திருந்தான். அதன்பின் அவன் வனாந்திரத்திற்குள் வந்தான். கானானுக்குப் போகும் தூரம் மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரயாணமான நாற்பது மைல் தூரமாயிருந்தது. ஆனால், மோசே அங்கு அந்த வனாந்தரத்தில் நாற்பது வருடங்கள் பொறுமையோடு காத்திருந்தான். (சகோ. பிரன்ஹாம் சிரிக்கிறார் - ஆசி) ஆமென். அது சரி. அவன் நாற்பது வருடங்கள் காத்திருந்தான். ஓ! ஆம், ஐயா. 108நாம் ஒருவரோடொருவர், பொறுமையுள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். பாருங்கள்? சில சமயங்களில் நாம் மற்றவர்களிடம் மிகவும் பொறுமையற்றவர்களாகி விடுகிறோம். மோசேயைப் போல இருக்க வேண்டுமென்று நினைக்கிறோம். மோசே ஜனங்களோடு பொறுமையாயிருந்தான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். பொறுமையில்லாத காரணத்தால்தான் இஸ்ரவேலர் கானானுக்குள் பிரவேசிக்க முடியவில்லை, பாருங்கள். நீங்கள் ஏதாவதொன்றைச் செய்ய முயற்சிக்கையில்.... இந்தக் கூடாரத்திலுள்ள ஒவ்வொரு அங்கத்தினரும் இத்தகைய குணாதிசயங்களை உடையவர்களாக வேண்டுமென்பதற்காகவே, இச்செய்தியை கொடுக்க நான் முயற்சிக்கிறேன். அது மிகவும் கடினமானதொரு காரியம். இந்த முப்பத்து மூன்று வருடங்களாக நான் பொறுமையைக் காத்துக்கொள்ள முயற்சித்து, பொறுமையுள்ளவனாயிருக்கிறேன். பாருங்கள்? பெண்கள் இன்னும் தங்கள் மயிரைக் கத்தரித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். (அவர்களில் மாற்றம் எதுமில்லை); ஆனாலும், பொறுமையுடையவனாகக் காத்திருக்கிறேன். அப்படித்தான் இருக்க வேண்டும். அவ்விதம் நீ பொறுமையை பெற்றுக்கொள்ள வில்லையென்றால், அதை கட்டிடத்தின் மேல் வைத்து கட்ட முயற்சிக்காதே. பொறுமையுடையவனாயிரு. 109மோசேயும் கூட தவறு ஒன்று செய்யத்தக்கதாக, அந்த ஜனங்கள் முறுமுறுத்து கலகம் பண்ணி, அவ்வளவாக பொறுமை இழந்தவர்களாகக் காணப்பட்டார்கள். இருந்தாலும் நிரூபிக்கும் காரியம் வந்தபோது தேவன் ஜனங்களின் செயல்களைப் பார்த்து கோபமூண்டவராய், “மோசே, ”இவர்களையிட்டு பிரிந்து போ. நான் இவர்களை அழித்துப்போட நீ என்னை விட்டுவிடு, உன்னை ஒரு பெரிய ஜாதியாக்குவேன்'' என்றார். அப்பொழுது மோசே, அங்கு தேவனுக்கும், ஜனங்களுக்கும் இடையே விழுந்து, “கர்த்தாவே, அதைச் செய்யாதிரும்'' என்றான். அது என்ன ஐயா? அவனுக்கு விரோதமாக கலகம் செய்த ஜனங்களோடு, அவன் பொறுமையாக இருந்ததையே குறிக்கின்றது. அத்தகைய காரியத்தை நாம் செய்யக் கூடுமோ என்று நான் அதிசயிக்கிறேன். அவ்விதமாய் உன் கட்டிடத்தைக் கட்ட முடியவில்லையென்றால், நீ கட்ட முயற்சிக்காதே. ஏனெனில், அதில் மாறுதல் ஏதுமிருக்காது. அந்த விதமாகத்தான் முதலாம் நிலையானது (நுனி கோபுரத்தில் - தமிழாக்கியோன்.) ஒட்ட வைக்கப்பட்டிருக்கின்றது. அவ்விதமாகத் தான் மற்றவைகளும் ஒட்டவைக்கப்பட வேண்டும். ஜீவனுள்ள தேவன் வாழத்தக்க ஸ்தலமாக நீ அவ்விதமான வளர்ச்சிக்கு வரவில்லையென்றால், உன்னிடத்தில் பொறுமையில்லை என்று பொருளாகிறது. ஒருவரோடு ஒருவர், பொறுமையுள்ளவர்களாயிருங்கள். 110சரி. இந்த எபிரெய வாலிபர்கள் பொறுமையுடையவர்களா யிருந்தார்கள். நிச்சயமாக அவர்கள் அவ்விதம் செய்தார்கள். ''யாதொரு சொரூபத்தையாகிலும், யாதொரு விக்கிரகத்தையாகிலும், நீ உனக்கு உண்டாக்க வேண்டாம். நீ அவைகளை நமஸ்கரிக்கவும் சேவிக்கவும் வேண்டாம்.'' என்று கர்த்தர் அவர்களுக்குக் கட்டளையிட்டிருந்தார். அவர்கள் பொறுமை யுள்ளவர்களாயிருந்து, ''நாங்கள் ஆராதிக்கிற எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; விடுவிக்காமற் போனாலும், நாங்கள், நீர் நிறுத்தின பொற்சிலையை பணிந்து கொள்வதில்லை'' என்று கூறினார்கள். கடைசி நாளில் கர்த்தர் தங்களை உயிரோடு எழுப்புவார் என்ற ஞானமுடையவர்களாய் அவர்கள் பொறுமையோடிருந்தார்கள். இந்த ஜீவன் ஒரு பெரிய காரியமல்ல. பாருங்கள்? கடைசி நாளில் கர்த்தர், தேவன் அதை எழுப்புவார், ஆனால் ஒரு சிலைக்கு முன்பாக பணிவது என்பது நம்மால் முடியாத காரியம். ராயனுடையதை ராயனுக்கும், தேவனுடையதை தேவனுக்கும் நாங்கள் செலுத்துவோம். ஆனால், தேவனுடைய காரியங்களில் ராயன் குறுக்கிட்டால், நாங்கள் தேவனையே முதலாவதாக வைப்போம். “ஏனெனில் விக்கிரகத்தையும், சொரூபத்தையும் தேவன் நமஸ்கரிக்கவும், சேவிக்கவும் வேண்டாம் என்று கூறியிருக்கிறார். எங்கள் தேவன் எங்களைத் தப்புவிக்க வல்லவராயிருக்கிறார்; விடுவிக்காமற் போனாலும் நாங்கள் இச்சிலையை பணிந்துக்கொள்ள மாட்டோம்'' என்று கூறினார்கள். அதற்கு ராஜா, ''சரி. அங்கே அக்கினி சூளை தயாராயிருக்கிறது'' என்றான். ''நல்லது இன்றிரவு முழுவதும் மழை பெய்து சூளையை அணைந்து போகச் செய்யும் என்று நினைக்கிறீர்களோ?'' என்றான். ஆனால், அவர்கள் அவ்விதமான ஒன்றையும் கூறவில்லை. அவர்கள் பொறுமையாகவேயிருந்தனர். 111அடுத்தநாள் காலையில், அங்கே நேபுகாத் நேச்சார் நியாஸ்தலத்தில் அமர்ந்தவனாய், ''சரி வாலிபர்களே, நீங்கள் தயாராயிருக்கின்றீர்களா? நான் உங்களுடைய ராஜா என்பதை நினைவு கூருகிறீர்களா?'' என்றான். அதற்கு அவர்கள், “நிச்சயமாக ராஜாவே, நீர் என்றும் வாழ்க'' என்று கூறினார்கள். அப்பொழுது ராஜா, ''அப்படியானால் இந்த சிலையை பணிந்துக் கொள்ளுங்கள்'' என்றான். அதற்கு அவர்கள், ''ஓ! அது எங்களால் முடியாது'' என்றார்கள். அதற்கு ராஜா, ''அவ்விதமானால் நீங்கள் எரிக்கப்படப் போகிறீர்கள். வாலிபர்களே, நீங்கள் ஞானமும், சாதுரியமுமானவர்கள். இந்த ராஜ்யத்திற்கு நீங்கள் எங்களுக்கு பெரும் உதவியாயும், ஆசீர்வாதமாயுமிருந்திருக்கின்றீர்கள். நான் இதை ஒரு கட்டளையாகப் பிறப்பித்து அது நிச்சயமாக நிறைவேற்றப்பட வேண்டுமென்பதை உங்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லையா? நான் உங்களை அக்கினி சூளையில் போட விரும்பவில்லை. ஓ! வாலிபர்களே, உங்களுக்கு நேர்ந்தது என்ன?'' என்றான். அதற்கு அவர்கள், ''அதெல்லாம் சரிதான். ஆனால் எங்கள் தேவன் எங்களை விடுவிக்க வல்லவராயிருக்கிறார்'' என்றார்கள். அவர்கள் மதில் முகட்டுச்சாய் விளிம்பில் (ramp) நடந்தனர். ஒருவருக்கொருவர் முகத்தைப் பார்த்து, ''எல்லாம் சரியாய் உள்ளது. எல்லாம் சரி,'' என்றனர். அவர்கள் பொறுமையுள்ளவர்களாய் இருந்தனர். ஒரு அடி (step) எடுத்து வைத்தனர், தேவன் அங்கே இல்லை. இரண்டு அடிகள், அவர் அங்கே இல்லை. மூன்று அடிகள், நான்கு அடிகள், ஐந்து அடிகள், அவர்கள் தொடர்ந்து சென்று கொண்டேயிருந்தனர், அவர் இன்னுமாக அங்கே இல்லை. அவர்கள் அக்கினிச் சூளையில் விழுந்தனர். அவர்கள் பொறுமையுள்ளவர்களாய் இருந்தனர். ஆனால் அவர் அங்கே இருந்தார். பாருங்கள்? அவர்களுடைய கட்டுகள் எரிந்து போகும் அளவுக்கு அங்கே அக்கினியின் உக்கிரம் காணப்பட்டது. அவர்கள் அக்கினிச் சூளையின் அடிதளத்தில் விழுந்த போது, தேவன் அங்கிருந்தார். பாருங்கள்? அவர்களுக்கு பொறுமையுண்டாயிருந்தது. 112தானியேலும் அவ்விதமே பொறுமையுள்ளவனாயிருந்தான். பாருங்கள்? அவன் பாதியில் நிலை தவறுகிறவனாயிருக்கவில்லை. இல்லை, ஐயா! அவன் என்ன செய்தான்? ஜன்னல்களை திறந்து வைத்து ஜெபம் செய்தான். அது, தேவன் அவனிடத்தில் எதிர்பார்த்த ஒரு காரியமாயிருந்தது. தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்வார் என்பதை அறிந்தவனாய் அவன் பொறுமையுள்ளவனாயிருந்தான், அவர்கள் அவனை சிங்க கெபியில் போட்டு, ''சிங்கங்கள் உன்னைத் தின்னட்டும்'' என்றார்கள். அதற்கு அவன், ''அதைக் குறித்து பரவாயில்லை'' என்றான். அவன் ஏன் அவ்விதமிருந்தான்? அவனுக்கு பொறுமையுண்டாயிருந்தது. ''நல்லது. நான் இவ்வளவு காலமாக தேவனிடத்தில் காத்திருந்தேன். இன்னும் சில ஆயிரம் ஆண்டுகள் நான் காத்திருப்பேனானால், நான் மறுபடியும் கடைசி நாளில் உயிரோடு எழுந்து விடுவேன். ஆகவே நான் பொறுமையுடையவனாயிருக்கிறேன்'' என்பதே அவனுடைய உள் நோக்கமாயிருந்தது. பவுல் பொறுமையுள்ளவனாயிருந்தான். அவன் எதைச் செய்ய வேண்டியவனாயிருந்தான் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். 113பொறுமையைக் குறித்து பேசும் போது...!அந்த பெந்தெகொஸ்தே அனுபவத்தைப் பெற்ற ஜனங்களைப் பற்றி என்ன? ''உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் எருசலேம் நகரத்தில் இருங்கள்'' என்ற கட்டளையை அவர்கள் பெற்றிருந்தனர். ''எந்த மட்டும் ஐயா?'' எந்த மட்டும் என்ற கேள்விக்கு இடமேயில்லை. “பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும்'' என்ற பதிலை அவர்கள் உடையவர்களாயிருந்தனர். அவர்கள் அங்கு மேலே சென்று, ''சரி. சகோதரர்களே, இன்னும் பதினைந்து நிமிடங்களுக்குள், பரிசுத்த ஆவி நம்மேல் வரும். அப்பொழுது நம்முடைய ஊழியத்தை நாம் பெற்று கொள்வோம்'' என்றார்கள். பதினைந்து நிமிடங்கள் கழிந்தன. ஒருவரும் பெற்றுக் கொள்ளவில்லை. ஒரு நாள், இல்லை இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு நாட்கள் கழிந்துவிட்டது. அவர்களில் சிலர், ''ஓ, நாம் ஒருவேளை ஏற்கனவே பெற்றுக்கொண்டு விட்டோமோ?'' என்று கூறியிருக்கக் கூடும். ''இல்லை, இல்லை, இல்லை, இல்லை.'' அதுவே தான். இல்லை. அது சரி. பிசாசு அவர்களை நோக்கி, ''பையன்களே, நீங்கள் வெளியே வந்துவிடுவது நல்லது. நீங்கள் ஏற்கனவே பெற்று விட்டீர்கள், ஆகவே நீங்கள் சென்று ஊழியத்தை தொடங்கலாம்'' என்று கூறினான். “இல்லை, இல்லை. நாங்கள் இதை இன்னுமாய் பெற்று கொள்ளவில்லை, அவர், கடைசி நாட்களில் சம்பவிப்பது என்னவென்றால், ''பரியாச உதடுகளினாலும், (ஆங்கிலத்தில் 'Stammering lips' - தடுமாறி பேசும் உதடு என்று பொருள்பட மொழி பெயர்க்கப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) அந்நிய பாஷையினாலும் இந்த ஜனத்தோடே பேசுவார்.'' இதுவே நீங்கள் இளைத்தவனை இளைப்பாறப் பண்ணத்தக்க இளைப்பாறுதல், ''இதுவே ஆறுதல் என்ற காரியம் சம்பவிக்கவுள்ளது!'' பாருங்கள் ஏசாயா;28:19, இதுதான் அது, நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள். அது வரும்போது நாங்கள் அதை அறிந்து கொள்வோம் என்றும், “பிதாவின் வாக்குத்தத்தம் வரும்போது அதை நாங்கள் அறிந்து கொள்வோம்'' என்றும் அவர்கள் கூறியிருப்பார்கள். அவர்கள் ஒன்பது நாட்கள் காத்திருந்தார்கள். பத்தாம் நாளன்று அவர்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்றனர்; காத்திருப்பதற்கு அவர்களுக்கு பொறுமையுண்டாயிருந்தது. 114தேவன் உனக்கு ஒரு வாக்குத்தத்தைக் கொடுத்து, அதை நீ வேதத்தில் கண்டு, அது ''என்னுடையது'' என்று கூறி, அது நிறைவேறுமளவும் காத்திரு. அத்தகைய பொறுமையை நீ பெற்றுக்கொண்டால், அதை உன் விசுவாசத்தோடு கூட்டிக்கொள். இப்பொழுது எந்த அளவுக்கு உயரமாக நீங்கள் கட்டப்பட்டிருக்கிறீர்கள் என்பதை பாருங்கள்? சரி. கடிகாரத்தின் முள்ளும் நகர்ந்து கொண்டேயிருக்கின்றது அல்லவா? சரி. சரி. இதை உன் விசுவாசத்துடன் கூட்டிக்கொள். அதை அவரே வாக்குத்தத்தம் செய்தார் என்பதை ஞாபகம் கொண்டு, அவரையே உனக்கு முன்னால் வைத்து இவைகளை உன் விசுவாசத்தோடு கூட்டி வழங்கு. வாக்குத்தத்தம் செய்தது நானல்ல, நம்முடைய மேய்ப்பன் நெவில் அல்ல, ஒரு ஊழியக்காரனோ அல்லது ஒரு பாதிரியோ அல்லது ஒரு போப்போ அல்ல, பூமியிலுள்ள எந்த மனிதனும் அல்ல, தேவனே அதை வாக்குத்தத்தம் செய்து, தாம் செய்த ஒவ்வொரு வாக்குத்தத்தத்தையும் அவர் காத்துக்கொள்ள வல்லமையுடையவராயிருக்கிறார். 115சரி. தேவன் அதை வாக்குத்தத்தம் செய்திருக்கிறார் என்று அறிந்துள்ள வகையான விசுவாசத்தைப் நீ பெற்றிருப்பாயானால்... ''சகோ. பிரன்ஹாமே, நான் வியாதியுற்றிருக்கிறேன், எனக்கு சுகமானது அவசரத் தேவையாயிருக்கிறது'' என்று கூறினால், அதை நீ ஏற்றுக்கொள், அது உனக்கு வரமாக கொடுக்கப்பட்டிருக்கின்றது. ஆம் ஐயா, என்று நீ விசுவாசித்தால் ஆகும். ''நல்லது,'' ''நான் விசுவாசிக்கிறேன்'' என்று கூறுவாயானால், வியாதியைக் குறித்து மறந்துவிடு அவ்வளவே - அது முடிந்துவிட்டது. பாருங்கள்? நீ பொறுமையுடையனாயிரு உன்னிடத்தில் பொறுமையில்லாதிருக்குமானால், நீ கட்டிடத்தின் மேல் கட்டின அனைத்தையும் இடித்துப் போடுகிறவனாய் இருப்பாய். அந்த ஒரு காரியம் கட்டின் அனைத்தையும் இடித்துப்போடும். நீ அதை உடையவனாயிருக்க வேண்டும். உன்னுடைய விசுவாசத்தோடு சேர்க்கத்தக்கதாக வல்லமையை, நீ பெறாமல் அதை பெற்று கொண்டேன் என்பாயாகில் அல்லது விசுவாசமில்லாமல் வல்லமையை அதின் மேல் கட்ட முயற்சிப்பாயானால், அது உன்னுடைய விசுவாசத்தையே குலைத்துப்போடும். பாருங்கள்? ஆகவே நீ, ''நல்லது, இப்பொழுது ஒரு நிமிடம் பொருத்துக் கொள்ளுங்கள். இது ஒருவேளை, தவறாக இருக்கலாம். தேவன் தேவனாக இல்லை; ஒருவேளை தேவன் என்ற ஒருவர் இருக்கிறாரோ?'' என்பாயாகில், காரியத்தை இரண்டாக உடைத்து விடுவாய். பாருங்கள்? 116சுத்தமான கலப்பில்லாத விசுவாசத்தை நீ பெற்றிருப்பாயானால், அதனோடு சுத்தமானகலப்பில்லாத வல்லமையையும், சுத்தமான கலப்பில்லாத ஞானத்தையும், சுத்தமான கலப்பில்லாத தன்னடக்கத்தையும், சுத்தமான கலப்பில்லாத பொறுமையையும் அதின் மேல்கூட்டி வழங்கு, இப்பொழுது நீ நேர் கோட்டில், மேல் நோக்கி சீராகச் செல்கிறாய். சரி. ஐந்தாவதாக ''தேவ பக்தியை'' கூட்டி வழங்கு. ஓ, என்னே! தேவ பக்தி என்றால் என்ன பொருள்?ஏறத்தாழ நான்கு அல்லது ஐந்து அகராதிகளை ஆராய்ந்து விட்டேன்; அவைகளில் தேவபக்தி என்பதன் பொருள் என்ன வென்று கண்டுபிடிக்க முடியவில்லை. முடிவாக சகோ. ஜெப்ரீஸ் என்பவர் வீட்டில் இருந்த ஒரு அகராதியின் மூலம், தேவபக்தி என்பதற்கு, ''தேவனைப் போல் இருத்தல் என்று பெருளை கண்டு பிடித்தேன். ஓ என்னே! விசுவாசம், வல்லமை, ஞானம், தன்னடக்கம், பொறுமை, இவைகளை நீ பெற்ற பின்பு, தேவனைப் போல இருத்தலை பெற்று கொள்கிறாய். ''அதை என்னால் செய்ய முடியாது சகோ. பிரன்ஹாமே'' என்று நீ கூறலாம். ஓ! அதை நீ செய்ய முடியும். இன்னும் ஒரு நிமிடத்தில் சில வேத வாக்கியங்களை நான் படிக்க அனுமதியுங்கள். மத்தேயு;5:48ல் கூறப்பட்டதை சற்று ஆராய்வோம். மத்தேயு;5:48, நீங்கள் தேவனைப் போல் இருக்க வேண்டுமா அல்லது இல்லையா என்று பார்ப்போம். “பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணராயிருக்கிறது போல, நீங்களும் (p-e-r-f-e-c-t) பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள்.'' (பூரணம் என்றால் என்ன? பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரணராயிருக்கிறது போல என்று பொருள்படும்). ''தேவர்களாயிருக்கிறீர்கள் என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்க வில்லையா?'' என்று வேதம் கூறுகின்றதை நீங்கள் அறிவீர்கள். இயேசு அவ்விதம் கூறினார். ஏன்? தேவனிடத்திலுள்ள எல்லா குணாதிசயங்களும் உன்னில் இருக்கின்றன. மத்;5:48, மலைப் பிரசங்கத்தில், இயேசு, ''நீங்கள் இருக்கிறீர்கள்...'' இந்த பரிபூரணத்தை அடைவதற்கு இந்த எல்லா நிலைகளையும், நீ கடந்து வரவேண்டும். முதலாவதாக இந்தக் காரியங்கள் யாவும் கூட்டப்பட வேண்டும். அதன்பின், நீங்கள் இங்கு அடைந்தபின், இப்பொழுது அவர் உங்களைப் பரிபூரண, சற்குணமான தேவனுடைய குமாரரும், குமாரத்திகளுமாயிருக்க கூறுகிறார். இதன் தொடர்பாக எத்தனையோ காரியங்களை நான் உங்களுக்கு சொல்லக்கூடும். 117எபேசியர்: 4ம் அதிகாரத்திற்கு செல்வோமாக. இக்காரியங்கள் இவ்வதிகாரத்திலும் கூறப்பட்டிருக்கிறது. அதை எவ்விதம் நாம் செய்ய வேண்டுமென்பதையும் அது கூறுகின்றது. 12ம் வசனத்திலிருந்து ஆரம்பிப்போம். எபேசியர்;4:12ம் வசனத்திலிருந்து துவங்குவோம். எபேசியர்;4:11ம் வசனம் தொடங்கி நாம் பார்ப்போமாக. “மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும், அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரண புருஷராகும் வரைக்கும். பரிசுத்தவான்கள் சீர் பொருந்தும் பொருட்டு, (ஆங்கிலத்தில், ”Perfecting of the Saints“ என்றிருக்கிறது. ஆகவே, ''சீர் பொருந்தும் பொருட்டு'' என்பதற்கு பதிலாக, ''பரிசுத்த வான்கள் பூரணப்படும் பொருட்டு'' என்றிருக்க வேண்டும் - தமிழாக்கியோன்.) ''தேவனைப் பூரணத்தப்படுவா?'' நாம் அவ்விதமாகவா வாசிக்கிறோம்? (சபையார், “இல்லை” என்கின்றனர் - ஆசி) யாரைப் பூரணப்படுத்த? ''பரிசுத்தவான்களை.'' யார் பரிசுத்தவான்கள்? பரிசுத்தமாக்கப்பட்டவர்களே (Sanctified) பரிசுத்தவான்கள். ஆமென். விசுவாசமென்னும் அடிப்படை அஸ்திபாரத்திலிருந்து ஆரம்பித்தவர்கள்). சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், (இயேசு கிறிஸ்துவின் ஊழியம்) கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்தி விருத்தி அடைவதற்காகவும் (ஒவ்வொரு நிலையாக கூட்டி, கட்டி பக்தி விருத்தியடையவதற்காக) அவர் சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், இன்னொரு மனிதனின் உத்தியோகத்தை நீ வகிக்க முயற்சிக்காதே என்னும் பொருள் பற்றி நேற்றைய தினம் சிந்தித்ததை ஞாபகம் கொள்ளுங்கள். சிலரை சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார். 118''பூரணத்துவத்திற்கு'' தேவபக்தி அவசியமாயிருக்கிறது. நீ உன் விசுவாசத்துடன் தேவ பக்தியைக் கூட்டிக்கொள். பாருங்கள், நீங்கள் கீழே இங்கே வல்லமையிலிருந்து ஆரம்பித்து தேவபக்தி! ஓ, என்னே! நம் நேரம் கடந்து சென்றுக் கொண்டேயிருக்கின்றது. நாம் இப்பொழுது காண்போம். இந்த வரைபடத்தில் காண்பிக்கப்பட்டது போல் இங்கு நீ வல்லமை என்ற காரியத்தில் ஆரம்பித்து பின்பு தேவ ஞானத்திற்கும், தன்னடக்கத்திற்கும், பொறுமைக்கும், தேவ பக்திக்கும் தொடர்ந்து ஒன்றன்பின் ஒன்றாக கடந்து செல்கின்றாய். ஓ! ''தேவ பக்தியென்றால்'' என்னவென்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதற்கான ஒரு பாடலும் உங்களுக்குத் தெரியும்: இயேசுவைப் போல, இயேசுவைப் போல, இப்பூமியிலிருக்க நான் வாஞ்சிக்கிறேன்; இப்பூமியினின்று மகிமைக்கு என், ஜீவப் பயணமெல்லாம். நான் அவரைப் போலவே இருக்க அழைக்கப்படுகிறேன். அது தேவ பக்தியாகும். அவர் ஒரு கன்னத்தில் அடிபட்ட போது, மறு கன்னத்தையும் காண்பித்தார். அவர் கடினமாக நடத்தப்பட்ட போது, மறு உத்தரவு பேசவில்லை; திரும்பவும் கோபத்துடன் பதிலளிக்கவில்லை. பாருங்கள்? அதுவே தேவத் தன்மையாயிருக்கிறது. ''பிதாவுக்கு, பிரியமானவைகளை நான் எப்பொழுதும் செய்கிறபடியால்'' என்று ஒரே நோக்கத்தையே அவர் கொண்டிருந்தார். பாருங்கள்? ஆம், ஐயா. எப்பொழுதுமே அதுவே தேவபக்தியாகும். 119பாருங்கள்? இவ்விதமாக இந்த நிலைகளினூடே நீ கடந்து, கடந்து வரும்போது, ஒரு தேவ குமாரனுக்கொத்த பூரண வளர்ச்சியின் நிலையை அடைகின்றாய். ஆனால், நீ ஒவ்வொன்றையும் கூட்டி பெற்றுக் கொண்டே வர வேண்டும். ஒன்று பூரணப்படும் வரை மற்றொன்றை நீ ஆரம்பிக்க முடியாது. மயிலிறகுகளை சொருகிக் கொண்ட அந்த கருப்பு பறவையை ஞாபகம் கொள்ளுங்கள். பாருங்கள்? நீ நிச்சயமாக மறுபடியும் பிறவாமல் இவைகளை உன்னோடு கூட்ட முயற்சிக்காதே, ஏனெனில் அது கிரியை செய்யாது. உன்னால் அதைக் கிரியை செய்ய வைக்கவும் முடியாது. ஒருவேளை அது ஒரு நிலை வரை வந்து, பின்பு எங்காவது ஒரு இடத்தில் கட்டிடம் முழுமையையும் இடித்து விடும். ஆனால் உண்மையான மறுபிறப்பான புறாவாக நீ ஆகும் பொழுது, இவைகளை நீ உன்னோடு கூட்டுவதில்லை, ஆனால் அவைகளே உன்னோடு சுபாவமாகக் கூட்டப்பட்டு பரிபூரணத்திற்கு வழி நடத்தும். 120அது சரி. இப்போது பூரணத்திற்க்கு வருகிறது. சரி. ஆறாவதாக ''சகோதர சிநேகம்'' அல்லது ''சகோதர அன்பை'' கூட்டி வழங்குங்கள். ஆறாவது, ஏழாவதான இது, இது ஒரு அருமையான காரியம். சரி. சகோதர சிநேகத்தைக் கூட்டுவது. சகோதர சிநேகத்தை நாம் அடைவதென்பது, ஒரு சகோதரனின் காரியத்தில் உன்னையே அவனுடைய நிலையில் வைத்து பார்ப்பதாகும். இப்பொழுது நீங்கள் கூறுகின்றீர்கள்... ''ஆண்டவரே, என் சகோதரன் எனக்கு விரோதமாய் குற்றஞ் செய்து வந்தால், நான் எத்தனை தரம் மன்னிக்க வேண்டும்? ஏழுதரம் மட்டுமோ'' என்று கேட்டான். அதற்கு இயேசு: ''ஏழுதரம் மாத்திரம் அல்ல, ஏழெழுபது தரம் (Seventy times seven) என்று உனக்குச் சொல்லுகிறேன்'' என்றார். பாருங்கள்? இந்த சகோதர சிநேகத்தைப் பாருங்கள். ஒரு சகோதரன் முழுவதும் இருக்க வேண்டிய பிரகாரம் இல்லையென்றாலும், அவனிடத்தில் உன் பொறுமையை நீ இழந்து விடாமல், இரு. பாருங்கள்?இல்லை. பாருங்கள்? அவனிடம் சாந்தமுள்ளவனாக அவனை திருத்த அவனோடு கூட செல். 121அநேக நாட்களுக்கு முன்பு ஒருவர் என்னிடம், ''நீங்கள் இத்தகைய விசுவாசத்தை பிரசங்கித்து கிரியை செய்து கொண்டு, பின் எப்படி தேவ கூட்டு சபைகள், ஒருத்துவ சபைகள், மற்றுமுள்ள சபைகளுக்கு இன்னுமாக சென்று கொண்டிருக்கிறீர்கள்?'' என்று கேட்டார். அது சகோதர சிநேகம் ஐயா. பாருங்கள்? என்றாவது ஒரு நாள் அவர்களை கர்த்தர் திரும்பக் கொண்டு வருவார் என்ற நோக்கத்துடன், அவர்களோடு பொறுமையுடன், தன்னடக்கமாக, அவர்கள் தங்கள் இருதயத்தில் என்ன விசுவாசிக்கிறார்கள் என்பதை அறிந்துக் கொள்ளும் தேவஞானத்துடன், உன்னிலுள்ள வல்லமையானது தாழ்மையோடும், சாந்தத்தோடும் வெளியேறி அத்தகையவர்களை திருப்ப முயற்சிப்பதேயாகும். பாருங்கள்? ஏழாவதாக சகோதர சிநேகம். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு (சகோதரன் பிரன்ஹாம் கரும்பலகையை ஏழு முறைகள் தட்டுகிறார் - ஆசி). பாருங்கள். கட்டத்திற்கு இப்பொழுது நாம் வருகிறோம். கடைசியாக அன்பைக்கூட்டி வழங்குங்கள். அதுவே தேவ அன்பு என்னும் தலைக்கல்லாயிருக்கிறது. இந்நாட்களில் ஒன்றில் சபையில்... 122தயவு செய்து ஒலி நாடாக்களை கேட்கிறவர்களும், மற்றவர்களும் உணர்ந்து கொள்ளுங்கள், இப்பொழுது நான் கூறப்போவது ஒரு உபதேசமாகப் போதிக்கப் போவதில்லை. தேவ ஒத்தாசையைக் கொண்டு அது உண்மையில் என்னவென்பதை நான் உங்களுக்குக் காண்பிக்க விரும்புகிறேன். அது, தேவன் தம்முடைய முதல் வேதாகமத்தை ஆகாயத்தில், ''ராசிகள்'' (Zodiac) என்றவிதமாய் எழுதினார். அது கன்னி ராசியிலிருந்து ஆரம்பித்து சிம்ம ராசியில் முடிவடைகின்றது. நான் ஆறாவது, ஏழாவது முத்திரைகளை அணுகும்போது, அந்த முத்திரை திறக்கும் போது, அந்த இடத்தின் ''ராசி அடையாளம்'' நண்டு ராசி என்ற புற்றுநோய் என்பதைக் காண்பீர்கள். அந்த புற்றுநோய் யுகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. அடுத்த முத்திரை திறக்கும் போது, அது சிம்ம ராசியாக வெளிப்பட்டு, கிறிஸ்துவின் இரண்டாம் வருகையைக் குறிக்கின்றதாயிருக்கிறது. அவர் முதலாவதாக கன்னியின் வயிற்றில் தோன்றி, பின்பு சிங்கமாக வருகின்றார். நான் அதைக் கொண்டு வருவேன்... இப்பொழுது, இன்று காலையில் இதைக் கூற எனக்கு நேரம் உள்ளதா இல்லையா என்பதை நான் அறியேன். இந்த நுனிகோபுர (Pyramid) வரைபடத்தில் காணப்படும் படிப்படியான (steps) நிலைகள் தேவன் எழுதின இரண்டாம் வேதாகமமாகும். என்னால் இயன்ற வரை சிறந்த முறையில் உங்களுக்குக் காண்பிக்க நான் விரும்புகிறேன். ஏனோக்கு அதை எழுதி அவைகளை அந்த நுனிகோபுரத்தில் வைத்தான். 123மூன்றாவதாக தேவன் எப்பொழுதும் மூன்று என்ற எண்ணில் பரிபூரணராயிருக்கிறார். அவர் தம்மை தம்முடைய வார்த்தையாக்கினார். இங்கே, இப்பொழுது நினைவில் கொள்ளுங்கள், இந்த கூர்நுனி கோபுரத்தில்... உங்களில் அநேகர், ராணுவ வீரர், நீங்கள் எகிப்தில் இருந்தீர்கள் என்று நான் யூகிக்கிறேன் - கூர்நுனி கோபுரமானது அதன் தலைக்கல்லால் பொருத்தப்படவில்லை என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். ஒருபோதும் இருந்ததில்லை அந்த முக்கோணக்கல் மற்ற எல்லாம் இருந்தது, ஆனால் இன்றும்.... உங்களிடம் ஒரு டாலர் நோட்டு இருக்குமானால், அதை எடுத்துப் பாருங்கள், அதனுடைய வலதுகை பக்கத்தில் ஒரு கழுகும், அமெரிக்காவின் கொடியும் பொறுத்தப்பட்டு, ''அமெரிக்க ஐக்கிய நாடுகளின் முத்திரை'' என்ற வாசகமும் கூறப்பட்டிருக்கும். அடுத்தப்பக்கத்தில் கூர் நுனிகோபுரமும் (Pyramid), மகத்தான தலைக்கல்லும், ஒரு மனித கண்ணும் பொறுத்தப்பட்டு, ''மகத்தான முத்திரை'' என்ற வாசகமும் அதில் எழுதியிருக்கும். நல்லது, இந்த தேசம் ஒரு மகத்தான நாடாயிருக்குமானால், இந்த முத்திரை ஏன் இத்தேசத்தின் சொந்த முத்திரையாயிருக்கக் கூடாது? அவர்கள் எங்கு சென்றாலும் தேவன் அவைகளைக் குறித்து சாட்சி பகருகிறவராயிருக்கிறார். 124ஒரு சமயம் நான் ஒரு மருத்துவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் தெய்வீக சுகமளித்தலைக் குறித்து என்னை கிண்டல் செய்து கொண்டிருந்தார். நாங்கள் ஒரு வீதியில் நின்று கொண்டிருந்தோம். அவர் என்னை நோக்கி, ''பிரன்ஹாம் அவர்களே, நீங்கள் ஜனங்களை குழப்பமடையத்தான் செய்கிறீர்கள். தெய்வீக சுகமளித்தல் என்று ஒன்றில்லை, மருந்துகளின் மூலமே சுகம் கிடைக்கும்,'' என்று கூறினார். அச்சமயம் நான் தற்செயலாக அவருடைய மோட்டார் வாகனத்தைக் (Car) கவனித்தேன். அதில் ஒரு கொம்பின் மேல் சர்ப்பமானது சுற்றிக் கொண்டிருக்கிறதான அடையாளத்தை அவர் அவ்வாகனத்தில் மாட்டி வைத்திருந்தார். அப்பொழுது நான் அவரைப் பார்த்து, ''அந்த அடையாளத்தை நீங்கள் எடுத்து விடுகிறது நல்லது, ஏனெனில் நீங்கள் வைத்திருக்கிற அந்த அடையாளமே தேவன் சுகமளிக்கிறவர் என்பதை சாட்சி பகருகிறது'' என்று கூறினேன். ஒரு உண்மையான மருத்துவன் அத்தகைய காரியத்தை விசுவாசிக்கிறான். மற்றவர்களோ போலிகள். ஆம், ஐயா. கம்பத்தின் மேல் சர்ப்பம், மோசே ஒரு கம்பத்தில் சர்ப்பத்தை உயர்த்தி, ''கர்த்தர் உங்கள் எல்லா வியாதிகளையும் சுகமாக்குகிறவர்'' என்று கூறினான். ஜனங்கள் தெய்வீக சுகத்திற்காக அந்த சர்ப்பத்தை நோக்கிப் பார்த்தார்கள். காரியம் இவ்விதமாகக் கூறப்பட்டிருந்தாலும் ஜனங்கள் அதற்கு விரோதமாகவே சாட்சி பகருகிறார்கள். ஆகவே, அவர்களுடைய சொந்த அடையாளமே அவர்களுக்கு விரோதமாக சாட்சி பகருகின்றதாயிருக்கிறது! வ்யூ! 125இந்த தேசம், அவர்கள் சொந்த பணமே, அவர்கள் கரன்சி நோட்டுக்களே, “இந்த முழு உலகத்தின் முத்திரை தேவன் தான்'' என்று சாட்சி பகர்ந்துக் கொண்டிருக்கும் போது, அவர்களோ அந்த காரியங்களைக் குறித்து கேலியும், பரியாசமும் செய்கின்றனர். அங்கே அந்த டாலர் நோட்டின் மேல் கண் வரையப்பட்டிருப்பதை கவனித்தீர்களா? அது தான் அந்த மகத்தான முத்திரை! அங்கே அந்த தலைக்கல்லானது கூர்நுனி கோபுரத்தின் மேல் ஒரு போதும் வைக்கப்படவில்லை. அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. என்? இந்த தலைக்கல்லானது புறக்கணிக்கப்பட்டு விட்டது; அந்த தலை கிறிஸ்துவாயிருக்கிறார். ஆனால் அந்த தலைக் கல்லானது என்றாவது ஒரு நாள் வருகிறதாயிருக்கிறது. 126இப்பொழுது கவனியுங்கள். இந்த பரிபூரண மனிதனின் கட்டிடத்திற்கு விசுவாசம் என்பது அஸ்திபாரமாயுள்ளது. இதன் மேல் வல்லமையும், ஞானமும், தன்னடக்கமும், பொறுமையும், தேவபக்தியும், சகோதர சிநேகமும் கூட்டிக்கட்டப்படுகின்றது. அது என்ன செய்கின்றது?இவை அன்பு என்னும் தலைக் கல்லுக்காக காத்துக் கொண்டிருக்கின்றன. அந்த அன்பு தேவனாயிருக்கின்றது. அவரே ஒவ்வொருவரையும் ஆளுகை செய்து இவ்வொன்றிற்கும் பலமாயிருக்கிறார். அது சரி. ஆம், ஐயா. சரியாக இங்கே, சரியாக இங்கே, இவைகளுக்கு இடையே நான் இந்த அசைவுகளை வைத்துள்ளேன். அது என்ன? பரிசுத்த ஆவி! இந்த ஒவ்வொரு நிலைகளுக்கும் இடையில் பரிசுத்த ஆவியானவர் கிறிஸ்துவின் மூலமாக அசைவாடி இவைகள் யாவற்றிக்கும் மேலாகயிருந்து, ஒன்றோடொன்று இசைவாக இருக்கும்படி இணைத்துக் கட்டுகிறார். தலைக்கல்லானது ஒரு பரிபூரணமான சபையின் மேல் வந்து அமரத்தக்கதாக அதை கூட்டி கட்டுகிறார்!எது திரும்பவும் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது? ஏழு சபைகளினூடே, ஏழு தூதர்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட கிரியைகளே திரும்பவும் செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. 127இங்கே சபையானது முதலில் துவங்கியது. சபையானது எங்கு ஆரம்பிக்கப்பட்டது? பெந்தெகொஸ்தே சபையானது முதலில் எங்கு தொடங்கினது? பெந்தெகொஸ்தே சபையானது, எபேசுவில் பவுலினால் நிறுவனம் செய்யப்பட்டது. பவுல் அப்போஸ்தலன் எபேசு காலத்தின் நட்சத்திரமாயிருந்தான். இரண்டாம் சபையான சிமிர்னாவின் காலம் வல்லமையை குறிக்கிறதாயிருந்தது. இரினேயஸ் என்னும் மகத்தான மனிதன் பவுலின் சுவிசேஷத்தைக் கடைபிடித்தான். அடுத்து பெர்கமு சபையின் காலத்தில் மார்டின் என்னும் மகத்தான மனிதன் வார்த்தையில் நிலைத்து நின்றான். பவுல், இரினேயஸ், மார்டின். நான்காவதாக, தியத்தீரா சபையின் காலத்தில் கொலம்பாவும்... உங்களுக்கு நினைவிருக்கின்றதா?அங்கே அது கரும்பல கையில் வரையப்பட்டுள்ளது. கொலம்பா... வரையப்பட்டுள்ளது. கொலம்பா... அவனுக்குப் பிறகு சபையின் இருண்ட காலம் வந்தது. அடுத்தபடியாக சர்தை சபையின் காலம் வந்தது. 'சர்தை' என்பதற்கு, 'மரணம்' என்று பொருள். லூத்தர். அல்லேலூயா! (சகோ. பிரன்ஹாம் தன் கரங்களை ஐந்து முறை கொட்டுகிறார் - ஆசி) அதன் பின்? சர்தை சபை, லூத்தருக்குப் பின் வந்தது என்ன?சர்தை சபைக்கு பின்பு பிலடெல்பியா சபையின் காலம் “தேவ பக்தி,'' வெஸ்லி, பரிசுத்தம். ''விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்'' என்று லூத்தர் பிரசங்கித்தான், வெஸ்லி பரிசுத்தத்தையும் பிரசங்கித்தான். அதன் பின்பு லவோதிக்கேயா சபையின் காலத்தில் சகோதர சிநேகம் என்னும் செய்தி வந்தது. கடைசி நாளில், எலியாவின் இரண்டாவது தோற்றமானது காணப்பட்டு அவனுடைய செய்தியானது தேசத்தை உலுக்கும் என்று நாம் விசுவாசிக்கிறோம். 128இங்கே இந்த ஏழு சபைகளையும், ஏழு படிகளையும் நாம் காண்கிறோம். ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனையும், தேவன் கட்டுவது போல தம்முடைய சபையை தேவன் தமக்குள்ளாகக் கட்டுகிறார். தேவனுடைய மகிமையும், வல்லமையும் இவைகள் மூலமாக காணப்பட்டு, ஒவ்வொன்றையும் இசைவாக இணைத்து கட்டுகின்றது. லூத்தரன்கள் வெளி வந்தனர், லூத்தரன்களிலிருந்து வெஸ்லியன்களிலிருந்து வெளிவந்து பெந்தெகொஸ்தெயினர் தாங்கள் பேசுவது என்ன என்பதை அறியாதவர்களாயிருந்தனர். அவர்கள் ஆலயத்தின் இப்பாகத்தில் வாழ்ந்திருந்தனர். அதன் காரணமாகத்தான் அநேகர் ஒரு குறிப்பிட்ட நிலை வரை வந்து, பின்பு விழுந்து விடுகின்றனர். ஆனால் உண்மையான பாகமோ, முழு வளர்ச்சியாய் வளர்ந்து கட்டிடத்தை பூரணமாக்குகின்றது. ''திரும்ப கொண்டு வருவேன்'' என்று கர்த்தர் கூறுகிறார். ''மணவாட்டி மரம்'' என்ற செய்தி நினைவிருக்கின்றதா? மாணவாட்டி மரத்தைக் குறித்த பிரசங்கத்தை நீங்கள் நினைவு கூருகிறீர்களா? அப்பூச்சிகள் அம்மரத்தைத்தின்றன. ஆனால் தேவன் அதைத் தறித்தார். அவைகள் - ஸ்தாபனக் கிளைகள் வளர்ந்தன, அவர் அவைகளைத் தறித்தார். அவைகள் அடுத்த ஸ்தாபன சபையின் கிளைகளாக வளர்ந்தன. திரும்பவும் களையெடுத்தார். ஆனால் அந்த மரத்தின் மத்திய பாகமோ தொடர்ந்து வளர்ந்து கொண்டேயிருந்தது. பரிசுத்த ஆவியாகிய கிறிஸ்து வரும்போது, சாயங்காலத்திலே வெளிச்சமுண்டாகும். பாருங்கள்? இயேசு சபைக்கு தலையாக வந்து அமருவார். அப்பொழுது, அவர் தம்முடைய சரீரத்தை உயிர்த்தெழச் செய்தது போல இந்தச் சபையையும் உயிர்த்தெழச் செய்வார். சரீரமானது அங்கே அதற்குள்ளே தான் இருக்கின்றது. தம்முடைய சபையானது வளரத்தக்கதான வழியை அவர் கொண்டு வந்தது போல, ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் அவ்விதமே, கிறிஸ்துவின் சரீரமாகிய சபையில் வளர வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். ஒவ்வொரு சபையின் காலமும் கூட்டிக் கட்டப்பட்டு ஒரு பெரிய சபையாக மாறுகிறது. 129பாருங்கள்? ஒரு சபைக்குத் தேவைபட்டது அடுத்த சபைக்குத் தேவைப்படவில்லை; இதற்கு அது தேவையில்லை. பாருங்கள்? ஆனாலும் அவர் தமது சபையை அதே வழியில் கொண்டு வருகிறார். தம்முடைய ஜனங்களை பக்குவப்படுத்துவது போலவே தம்முடைய சபையையும் அவர் பக்குவப்படுத்துகிறார். பேதுரு, விசுவாசம், வல்லமை (வளர்ச்சியை கவனியுங்கள்) ஞானம், தன்னடக்கம், பொறுமை, தேவ பக்தி, சகோதர சிநேகம், பின்பு பரிசுத்த ஆவியாகிய தேவ அன்பு என்ற தன்மைகளைக் கூறுகிறார். கிறிஸ்து என்னும் பரிசுத்த ஆவியானவர் உண்மையான பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலம் உன்மேல் வருகிறார். அப்பொழுது இந்த சுபாவங்கள் உன்னில் முத்திரிக்கப்படுகின்றன. பின்பு தேவன் கட்டிடம் எனப்படும் வாசஸ்தலத்தில் ஜீவித்து, அதை ஜீவிக்கிற தேவனின் ஜீவனுள்ள வாசஸ்தலமாக செய்கிறார். 130ஒருவன் இத்தகைய சுபாவங்களை பெற்றுக் கொள்ளும் போது பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் வருகிறார். நீ எவ்வளவுதான் அன்னிய பாஷை பேசினாலும், தேவனுடைய வரத்தை பெற்று கொண்டதாக நடித்தாலும் அது ஒரு காரியமல்ல. அவைகளை நீ செய்யலாம்; ஆனால் இந்த சுபாவங்கள் உன்னோடு வராதவரை, நீ இன்னுமாக உண்மையான விசுவாசமென்னும் அஸ்திபாரத்தின் மேல் இல்லாதவனாயிருக்கின்றாய். ஆனால் இச்சுபாவங்கள் உன்னில் வளர்ந்து, அதனோடு மற்றவைகளை கூட்டும்போது, நீ ஒரு வாழ்கின்ற வாசஸ்தலமாகவும் ஒரு நடமாடும் சிலையாகவும் இருக்கின்றாய். புறஜாதியார் ஒரு சிலைக்கு முன்பாக கற்பனைக் கடவுள் முன்பாக, சாஷ்டாங்கமாக விழுந்து, தங்கள் கற்பனை தெய்வம் தங்களுக்கு மறு உத்திரவு அருளும் என்று விசுவாசிக்கின்றார்கள். அஞ்ஞானம். அது ரோமானியத்துவம். அவர்கள் எல்லா பரிசுத்தவான்களுக்கு முன்பாகவும், எல்லாவற்றிற்கு முன்பாகவும் வணங்குகிறார்கள். பரிசுத்த சிசிலியா தேவனுடைய வீடு என்று அழைத்து அதற்கு முன்பாக பணிந்து தங்கள் கற்பனைகளை உண்மையாகவே விசுவாசிக்கின்றார்கள். உண்மையான ஜீவனுள்ள தேவனுக்கு அது எவ்வளவாய் ஒத்த உதாரணமாயிருக்கின்றது! 131ஆனால் நாமோ, கற்பனையான வழியாக அல்ல, ஜீவிக்கிற தேவனிடத்தினின்று வரும் ஜீவிக்கின்ற வல்லமை, ஜீவிக்கிற ஞானம், ஜீவிக்கிற பொறுமை, ஜீவிக்கிற தேவபக்தி, ஜீவிக்கிற தேவனிடமிருந்து வருகின்ற ஜீவனுள்ள சக்தியுள்ள தேவனுக்கு முன்பாக சாஷ்டாங்கமாக விழுந்து வணங்குகிறோம். அது நம்மை ஜீவனுள்ள மனிதனாக, தேவனுடைய பரிபூரணத்தின் ஜீவ சாயலாக மாற்றுகின்றது. அவன் என்ன செய்கிறான்? இயேசு செய்த அதே கிரியைகளை செய்வது; அவர் நடந்தபடியே நடப்பது. அவர் செய்ததையே செய்வது. ஏனெனில் அது ஒரு கற்பனையான காரியமன்று; உண்மைத்துவமானது அதை நிரூபிக்கின்றதாயிருக்கின்றது! நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்று நீங்கள் காண்கிறீர்களா? இந்த கட்டிடத்தின் சுபாவங்கள் சபையின் தூதனோடும், சபையின் காலங்களோடும் எவ்விதம் ஒப்புவமையாயிருக்கின்றது என்று காண்கிறீர்களா? இப்பொழுது, சிறிது காலத்தில், இந்த வார்த்தைகள் ஒவ்வொன்றையும் எடுத்து, அவைகளை ஆராய்ந்து, அது இதை நிரூபிக்கின்றது என்று காண்பிப்போம். அவைகள் ஒன்றிற்கு ஒன்று இணைவாயிருக்கின்றது. நிச்சயமாக. பாருங்கள்? ஓ, என்னே! அது என்ன செய்கின்றது என்பதைக் காண்கிறது, அது எவ்வளவு அற்புதமாயிருக்கின்றது. 132இத்தகைய ஆலயத்தில் தான் தேவன் வாசம் செய்கிறார். கோபுரம் உடையதாய் அதில் ஆலயமணி (Bell) வைக்கப்பட்ட உயர்ந்த கட்டிடத்திலல்ல. பாருங்கள்? ஆனால், ''ஒரு சரீரத்தை எனக்கு ஆயத்தம் பண்ணினீர்'' - தேவன் வாசம் செய்யத்தக்கதான, நடக்கத்தக்கதான, பார்க்கத்தக்கதான, பேசத்தக்கதான, கிரியை செய்யத்தக்கதான ஒரு சரீரத்தையே தேவன் ஆயத்தம் செய்தார். ஆமென்! தேவனுடைய சுபாவத்தில் ஜீவிப்பது. தேவன் இரண்டு கால்களால் உன்னில் நடப்பது. மகிமை! ''நல்ல மனுஷனுடைய நடைகள் கர்த்தரால் உறுதிப்படும்.'' தேவன் உங்களிலிருந்து நடப்பது. ''எங்கள் இருதயங்களில் எழுதப்பட்டும், சகல மனுஷராலும் அறிந்து வாசிக்கப்பட்டும் இருக்கிற எங்கள் நிருபம் நீங்கள் தானே'' என்று பவுல் கூறுகிறார். கிறிஸ்துவிலிருக்கும் ஜீவன் உங்களில் இருக்குமானால் நீங்களும் கிறிஸ்துவின் ஜீவனை பிரதிபலிப்பீர்கள். 133பீச் மரத்தின் (Peach tree) சாரத்தை ஆப்பிள் மரத்தினுள் பாய்ச்சினால் (Transfusion), அந்த ஆப்பிள் மரம் பீச் பழங்களை தரும் என்ற உதாரணத்தை நான் உங்களுக்குக் கூறியிருக்கிறேன். நிச்சயமாக. நிச்சயமாக அது அவ்விதமே கொடுக்கும். கிளைகள் எப்படியிருந்தாலும், அது எத்தகைய மரமாயிருந்தாலும் ஒன்றுமில்லை - ஏனெனில் அதற்குள் ஆப்பிள் மரத்தின் சாரம் பாய்ச்சப்பட்டிருக்கின்றது. பாருங்கள்? ஆப்பிள் மரத்தின் முழு சாரத்தையும் உன்னால் எடுத்து விடக்கூடுமானால், அதை எடுத்து விட்டு அதில் பீச் மரத்தின் சாரத்தை பாய்ச்சுவாயானால் அங்கு நடக்கக்கூடிய காரியம் என்ன? ஆப்பிள் மரத்தின் கிளைகள் அதினுடைதாயிருந்தாலும் உள்ளிருக்கும் ஜீவன் பீச் மரத்தின் ஜீவனாயிருப்பதினால், அது பீச் பழங்களையே தரும். 134நம்மை எடுத்துக் கொள்வோமானால், நாம் ஒரு 'காட்டு கொம்மட்டிக்' காய்களாக இருக்கிறோம். நம்மைக் குறித்து ஒரு நன்மையான காரியமும் கிடையாது. ஏனெனில், நாம் அக்கிரமத்திலும், பாவத்திலும் மரித்தவர்களாயிருக்கிறோம். நாம் இவ்விதமான சூழ்நிலையில் காணப்பட்டாலும், நம்மை தாழ்த்தி, சாஷ்டாங்கமாய் நம்மை தேவனிடத்தில் ஒப்பு கொடுப்போமானால், அப்பொழுது தேவன், இயேசு கிறிஸ்துவின் நாமம் (ஏனெனில், வானத்தின் கீழே, பூமியின் மேலே நாம் இரட்சிக்கப்படும்படி கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமமேயன்றி வேறொரு நாமமும் கட்டளையிடப்படவில்லை) என்னும் சாரம் பாய்ச்சக் கூடிய குழாயின் மூலம் கிறிஸ்துவின் ஜீவனை நமக்குள் பாய்ச்சுவார். அதன் பின்புதான் நாம் கிறிஸ்து கொண்டிருந்த விசுவாசத்தை உடையவர்களாகக் காணப்படுவோம். கிறிஸ்துவின் விசுவாசமானது, பரிசேய, சதுசேயரின் கொள்கைகளான பாத்திரங்களைக் கழுவுவது, சரீர சுத்திகரிப்பு போன்ற காரியங்களை அடிப்படையாகக் கொண்டதாயிருக்கவில்லை, அது தேவ வார்த்தையின் அடிப்படையாக இருந்தது. ஆமென்! கிறிஸ்து தேவனுடைய வார்த்தையாகவேயிருந்து, அந்த வார்த்தை மாம்சமாகியது. நாமும் அவருடைய வல்லமை முழுவதாக பாய்ச்சப்பட்டு, நம்முடைய சொந்த எண்ணங்களுக்கு மரிக்கக் கூடுமானால், நம்முடைய விசுவாசமும், கலப்பில்லாத விசுவாசமாக மாறும். அல்லேலூயா! கிறிஸ்துவின் அத்தகைய ஜீவன் நம்மில் பாய்ச்சப்பட்ட பின்பு, ஒளிமயமான அவருடைய ஆசீர்வாதங்களை பரிசுத்த ஆவியானவர் இங்கே அனுப்பத்தக்கதான ஒரு வாசஸ்தலமாகவும், ஜீவிக்கிற தேவனுடைய மானிடர்களாகவும் நாம் கிறிஸ்துவின் வளர்ச்சியில் காணப்படுவோம். 135''தேவர்களாயிருக்கிறீர்கள்'' என்று நான் சொன்னேன் என்பதாய் உங்கள் வேதத்தில் எழுதியிருக்கவில்லையா? தேவ வசனத்தைப் பெற்றுக் கொண்டவர்களை தேவர்கள் என்று அவர் சொல்லியிருக்க, வேத வாக்கியமும் தவறாததாயிருக்க, பிதாவினால் பரிசுத்தமாக்கப்பட்டும், உலகத்தில் அனுப்பப்பட்டும் இருக்கிற நான் என்னைத் தேவனுடைய குமாரன் என்று சொன்னதினாலே தேவ தூஷணஞ் சொன்னாய் என்று நீங்கள் சொல்லலாமா? என்று இயேசு கூறினார். மோசே, எலியா என்ற தீர்க்கதரிசிகள் தேவன் அவர்களில் பாய்ச்சப்படத்தக்கதாக அவருடன் மிகவும் நெருங்கி வாழ்ந்திருந்து, பின்பு அவர்கள் ஜனங்களிடம் பேசினார்கள். அவர்களல்ல, தேவனே அவர்கள் மூலமாய் பேசினார். “எப்படி என்னத்தை மாறுத்தரமாகச் சொல்லுவோம் என்றும், எதைப் பேசுவோம் என்றும் கவலைப்படாதிருங்கள். நீங்கள் பேச வேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார்'' என்று இயேசு கூறினார். அவனுடைய வார்த்தைகள் அவனுடைய சொந்த வார்த்தைகளாயிருக்கவில்லை. ஏனெனில் அவன் ஜீவன் - அவன் மரித்துப்போனான். 136ஒருவன் மரித்தால், அவன் சரீரத்திலுள்ள இரத்தத்தை எடுத்துவிட்டு, அதை நறுமணமூட்டி, அந்த உடலைப் பாதுகாக்கின்றனர் (embalm). தொல்லை என்னவெனில், அவைகள் அநேகம் நறுமணமூட்டப் படுவதில்லை. ஒரு மனிதனுடைய சரீரத்திலிருந்து இரத்தத்தை எடுத்துவிட்டால் அவன் மரிக்கிறான். அவன் திரும்பவும் ஜீவிக்க வேண்டுமானால், வேறே இரத்தத்தை அவனுக்குள் செலுத்த வேண்டும். இரத்தமானது வெளியே எடுக்கப்படுகின்றது. அதுபோல நம்முடைய இரத்தத்திற்கு பதிலாக இயேசு கிறிஸ்துவின் இரத்தம் அங்குவைக்கப்படுமானால், அது இயேசு கிறிஸ்துவின் விசுவாசத்தையும், இயேசு கிறிஸ்துவின் வல்லமையையும், இயேசு கிறிஸ்துவின் ஞானத்தையும், இயேசு கிறிஸ்துவின் தன்னடக்கத்தையும், இயேசு கிறிஸ்துவின் பொறுமையையும், இயேசு கிறிஸ்துவின் தேவபக்தியையும், இயேசு கிறிஸ்துவின் சகோதர சிநேகத்தையும், இயேசு கிறிஸ்துவாகிய தேவனுடைய அன்பையும் கொண்டு வருகிறதாயிருக்கிறது. அவரே உன் தலையாயிருந்து, உன் மேல் ஆதிக்கம் செலுத்துகிறார்! உன்னுடைய பாதங்கள் விசுவாசமென்னும் அஸ்திபாரமாயிருக்கின்றது. (சகோ. பிரன்ஹாம், இரண்டு முறை பிரசங்க பீடத்தை தட்டுகிறார் - ஆசி.) ஆமென்! தலையினால் கட்டுப்படுத்தப்படுகிறது. (சகோ. பிரன்ஹாம் இரண்டு முறை கரங்களை தட்டுகிறார்.) அங்கே தான் நீங்கள். ஒரு மனிதன் இந்த சிறந்த பண்புகளை சுதந்தரிக்கும் பொழுது, அவன் ஒரு பரிபூரணமான தேவ மனிதனாகிறான். 137தேவன் தம்முடைய சபையை ஒரு பெண்ணாக உருவகிக்கிறார். தேவன் தம்முடைய சபையை ஒரு மணவாட்டியாக பிரகடனப்படுத்துகிறார். தனிப்பட்ட ஒவ்வொருவரையும், அவர் குமாரர்களாகவும், குமாரத்திகளாகவும் மணவாட்டிக்குள்ளாக கொண்டு வருகிறார். ஒவ்வொரு காலங்களிலும், அவ்விதமே அவருடைய சபையைக் கொண்டு வந்தது போல, இந்த கடைசி கால சபையையும், அவர் நிலைப்படுத்தி ஒரு பூரணமான சபையாகக் கொண்டு வருகிறார். (சகோ. பிரன்ஹாம் கரும்பலகையை ஏழு முறைகள் தட்டுகிறார் - ஆசி) என் கால்கள் அசைகின்றன. ஏன்? என் தலை கட்டளைப் பிறப்பித்தபடியால். என் கால்கள் கைகளைப் போன்று அசைய முடியாது. ஏனெனில் அது கால்களாயிருக்கின்றது. நாம் இப்பொழுது செய்கின்ற காரியங்களை லூத்தரோ, வெஸ்லியோ செய்ய முடியாது. ஏனெனில், அவர்கள் சரீரத்தின் வேறு பாகங்களாயிருந்தனர். பாருங்கள்? கால்கள் அசைவதற்கு காரணம் என்னவென்றால் அவ்விதம் செய்ய தலையானது கட்டளைக் கொடுத்தபடியால் தான். ''கால்களே நீங்கள் கைகளாகுங்கள்'' என்றும், ''காதே, நீ கண்ணாக இரு என்றும்,'' ஒருபோதும் தலையானது கட்டளைக் கொடுக்காது. பாருங்கள்? ஒவ்வொரு காலங்களிலும், தேவன் தம்முடைய சபையில் இக்காரியங்களை, அந்தந்த இடத்தில் வைத்து, தனிப்பட்ட ஒவ்வொருவரும் இச்சுபாவங்களை அடைந்திட வேண்டும் என்று உதாரணப்படுத்தினார். இந்த, 'மனிதன்' முழுமை பெறும்போது தேவனுடைய சபையானது எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்று விடும்! இந்த 'மனிதன்' தேவனுடைய சபையில் தேவ ஊழியக்காரனாக முழுமை பெறும் போது, அது எடுத்துக் கொள்ளுதலில் சென்றுவிடும். மகிமை! நான் எதை குறிப்பிடுகிறேன் என்பதைக் காண்கிறீர்களா? அங்கு தான் அந்த பூரணமானது காணப்படுகின்றது. 138பவுல் இங்கே அஸ்திபாரத்தைப் போட்டான். இரினேயஸ் இதை அதன் மேல் கட்டினான். அடுத்தவன் அதன் மேல் கட்டினான். அதற்கு அடுத்தவனும், அதன் மேல் கட்டினான். இவ்விதமாக ஒவ்வொருவராக கடைசிகாலம் தோன்று மட்டும் இதின் மேல் கூட்டி கட்டினர். அது என்ன? அது அந்த ஒரே தேவ ஆவிதான். என்னில் வாசமாயிருக்கிற அதே ஆவி, ''கைகளே, அந்த இனிப்பு ரொட்டியை எட்டி பிடித்து விடு'' என்று கூறுகின்றது. என்னில் வாசமாயிருக்கிற அதே ஆவி, ''கால்களே, ஒரு அடியை எடுத்துவை'' என்று கூறுகின்றது. நான் எதை குறிப்பிடுகிறேன் என்று காண்கிறீர்களா? உன்னுடைய முழுமை பெற்ற மனிதன் இக்காரியங்களால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறான்; ஆனால் முழுவதும் இக்குணாதிசயங்களை, சுதந்தரிக்கும் வரை ஆளுகை செய்யப்பட முடியாது. 139இப்பொழுது நான் கூறப்போகும் காரியத்தை நீங்கள் எப்பொழுதாவது கேட்டதுண்டா? இப்பொழுது நான் அதை சொல்ல என்னை அனுமதித்து, அதை உங்கள் காதுகளில் நுழையவிடுங்கள். பாருங்கள்? ''பலவீனமான ஒரு சிறு பாகமே சங்கிலியின் மகத்தான பலமாயிருக்கிறது.'' அது உண்மையா? ஆம், அது தன்னுடைய பலவீனமான பாகத்தைக் காட்டிலும் பலமுள்ளதல்ல. இவைகள் எவ்வளவாக பலமுள்ளதாகக் கட்டப்பட்டிருந்தாலும் அது ஒரு காரியமல்ல, ஏனெனில், அதின் ஒரு பாகம் பலவீனமாயிருக்குமானால், அங்கு தானே அதன் முழுகாரியங்களும் உடைந்து போய்விடும். (சகோ. பிரன்ஹாம் கரும்பலகையில் வரைபடத்தைச் சுட்டிக் காட்டுகிறார் - ஆசி) ஆகவே, “இதை, இதை, இதை நான் பெற்றிருக்கிறேன். ஆனால், ஒன்றை மட்டும் பெறவில்லை'' என்று நீ கூறுவாயானால் அங்கு தான் அது உடைகிறதாயிருக்கிறது. நீ இதை பெற்றிருந்து அதைப் பெறவில்லையெனில் அங்குதான் அது உடைகிறதாயிக்கிறது. நீ இதைப் பெற்றிருந்து அதைப் பெறவில்லையெனில். அது உடைந்துவிடும். நீ இதைப் பெற்றிருந்து அதைப் பெறவில்லையெனில் அது உடைந்து விடும். நீ இதைப் பெற்றிருந்து, அதைப் பெறவில்லையெனில், அது உடைந்து விடும் பாருங்கள்? இதையல்லாமல் அதை நீ பெற்றுகொள்ள முடியாதென்பதே காரியம். ஆகவே, உன்னை நீ முழுமையாக சமர்ப்பிக்கும் போது, பரிசுத்த ஆவி இந்த வல்லமைகள் மூலமாக அங்கு பொழியப்படுகின்றது. பின்பு தான் நீ ஒரு ஜீவிக்கிற வாசஸ்தலமாகிறாய். அப்பொழுது ஜனங்கள் உன்னைப் பார்த்து, ''வல்லமை, ஞானம், வார்த்தையை விசுவாசித்தல், தன்னடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம், பரிசுத்த ஆவியின் அன்பு ஆகிய குணாதிசயங்கள் நிரம்பப் பெற்ற மனிதன் நடந்து வருவதை பாருங்கள்'' என்று கூறுவார்கள். அது என்ன? அவிசுவாசிகள் அத்தகைய வளர்ச்சியைக் கண்டு, ''அதோ ஒரு கிறிஸ்தவன், தான் பேசுவது இன்னதென்று அறிந்திருக்கிற அதோ அங்கே ஒரு மனிதன் அல்லது ஒரு பெண்மணி. தாழ்மையுள்ள, சாந்தமுள்ள, மனரம்மியமான அத்தகைய தேவ மனிதனை நீங்கள் ஒருக்காலும் காண முடியாது'' என்று கூறுவார்கள். 140நீ முத்திரிக்கப்பட்டிருக்கிறாய். ஒரு முத்திரையானது இருபக்கமும் காணப்படுகின்றது. நீ வெளியே சென்றாலும் அல்லது உள்ளே வந்தாலும் யாவரும் அந்த முத்திரை மாறாததாயிருக்கிறதை காண்பார்கள். அங்கே தான் நீங்கள். பாருங்கள்? ஒரு ஆணோ அல்லது ஒரு பெண்ணோ இவைகளைப் பெற்றிருப்பார்களானால், தலைக் கல்லாகிய பரிசுத்த ஆவி தாழ இறங்கி வந்து, அவர்களை தேவ ராஜ்யத்தில் முத்திரிக்கின்றது. வார்த்தையானது இங்கிருந்து வந்து ஒவ்வொரு மனிதனின் மூலமாகவும் வெளிப்பட்டு, ஜீவனுள்ள தேவன் வாசம் செய்யும் வாசஸ்தலமாகிய மனிதனை முழுமைப் பெறச் செய்கின்றது. இந்த கிறிஸ்தவ சமுதாயத்துக்கு முன்பாக, ஓர் உதாரணமாக ஜீவித்து நடந்து கொள்வதே காரியம். கிறிஸ்து எனப்படுவது என்னவோ, அதுவே இந்த ஜனங்களும். ஏனெனில், அவருடைய ஜீவன் இங்கே காணப்பட்டு அவர்கள் கிறிஸ்துவுக்குள்ளிருக்கிறார்கள். அவர்களுடைய ஜீவன் மரித்து தேவன் மூலமாக கிறிஸ்துவுக்குள் மறைந்து பரிசுத்த ஆவியினால் முத்திரிக்கப்பட்டிருக்கின்றது. 1.கொரிந்தியர்;12ம் அதிகாரத்திலுள்ள படி அதுதான் உண்மை. பாருங்கள்? நீ உன்னை மரித்தவன் என்று நிதானி, பின்பு தான் நீ விசுவாசப் பிறப்பினால் பிறந்து, வல்லமை மற்றும் அநேக சுபாவங்கள்- நீ பரிபூரணப்பட்டு ஜீவிக்கிற தேவனுடைய சொரூபமாக மாறும் வரை, உன்னோடு கூட்டப்படுகின்றன. 141இது அற்புதமாக இல்லையா? (சபையார், ''ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) ஒவ்வொரு தனிப்பட்ட நபரையும் தம்முடைய சாயலுக்குக் கொண்டுவர அவர் இந்த ஏழு நிலைகளால் கட்டினது போல, ஏழு சபையின் காலங்களையும் அவ்வாறே அவர் கொண்டு தமது சாயலாயிருக்கிற, ஒரு முழுமையான சபையை தேவன் கட்டினார். உயிர்த்தெழுதலில் இந்த முழுமைப் பெற்ற சரீரமானது உயிர்த்தெழுந்து அவரோடு என்றென்றும் ஜீவிக்கத்தக்கதாக, ஒரு பூரணமான சபையை அவர் கட்டுகிறார். ஏனெனில், அது அவருடைய மணவாட்டியாயிருக்கிறது. பாருங்கள்?ஆகவே தான் ஒவ்வொரு சபையின் காலத்திலும் அது பணி தீர்க்கப்படுகின்றது. ஞாபகம் கொள்ளுங்கள், அதிகமான காரியங்கள் இதற்கு தேவைப்படுகின்றது. பவுல் இதைக் குறித்து எபிரெயர் 11ம் அதிகாரத்தில் கூறுகின்றார். நாம் முடிக்கும் முன்பு, நான் இதை உங்களுக்குப் படித்துக் காண்பிக்கட்டும். அதன்பின் நீங்கள்... இதை நான் படிக்கும் போதெல்லாம் ஒருவித விவரிக்க முடியாத பரிதாபம் எனக்குள் உண்டாகின்றது. இப்பொழுது நான் எபிரெயர் 11ம் அதிகாரம் 32ம் வசனத்திலிருந்து படிக்கப் போகிறேன். “பின்னும் நான் என்ன சொல்லுவேன்? கிதியோன், பாராக், சிம்சோன், யெப்தா, தாவீது, சாமுவேல் என்பவர்களையும், தீர்க்கதசிரிகளையுங் குறித்து நான் விவரஞ்சொல்ல வேண்டுமானால் காலம் போதாது, விசுவாசத்தினாலே அவர்கள் ராஜ்யங்களை ஜெயித்தார்கள், நீதியை நடப்பித்தார்கள், வாக்குத்தத்தங்களைப் பெற்றார்கள்; சிங்கங்களின் வாய்களை அடைத்தார்கள், அக்கினியின் உக்கிரத்தை அவித்தார்கள், பட்டயக் கருக்குக்குத் தப்பினார்கள், பலவீனத்தில் பலன் கொண்டார்கள், யுத்தத்தில் வல்லவர்களானார்கள், அந்நியருடைய சேனைகளை முறியடித்தார்கள். ஸ்திரீகள் சாகக் கொடுத்த தங்களுடையவர்களை உயிரோடெழுந்திருக்கப் பெற்றார்கள். வேறு சிலர் மேன்மையான, உயிர்த்தெழுதலை அடையும்படிக்கு விடுதலை பெறச் சம்மதியில்லாமல் வாதிக்கப்பட்டார்கள்; இங்கே! (சகோ. பிரன்ஹாம் கரும்பலகையின் வரை படத்தைச் சுட்டிக் காட்டுகிறார் - ஆசி) நல்லது. வேறு சிலர் நிந்தைகளையும், அடிகளையும், கட்டுகளையும், காவலையும் அனுபவித்தார்கள்; கல்லெறியுண்டார்கள், வாளால் அறுப்புண்டார்கள், பரீட்சைப் பார்க்கப்பட்டார்கள், பட்டயத்தினாலே வெட்டப்பட்டு மரித்தார்கள். செம்மறியாட்டுத் தோல்களையும், வெள்ளாட்டுத் தோல்களையும் போர்த்துக் கொண்டு திரிந்து, குறைவையும், உபத்திரவத்தையும், துன்பத்தையும், அநுபவித்தார்கள்; உலகம் அவர்களுக்குப் பாத்திரமாயிருக்கவில்லை...(ஆங்கில வேதாகமத்தில் இந்த இணை வாக்கியம் அடைப்புக்குள்ளான, “Within Brackets” வாக்கியமாக எழுதப்பட்டிருக்கிறது - தமிழாக்கியோன்.) அவர்கள் வனாந்தரங்களிலேயும், மலைகளிலேயும் குகைகளிலேயும் பூமியின் வெடிப்புகளிலேயும் சிதறுண்டு அலைந்தார்கள். இவர்களெல்லாரும் விசுவாசத்தினாலே நற்சாட்சி பெற்றும் இங்கே! (சகோ. பிரன்ஹாம் கரும்பலகையின் வரை படத்தைச் சுட்டிக் காட்டுகிறார் - ஆசி) விசுவாசத்தின் மூலமாக நற்சாட்சி பெற்றார்கள் (''விசுவாசத்தின் மூலமாக'' என்று ஆங்கில வேதாகமத்தில் எழுதப்பட்டிருக்கிறது - தமிழாக்கியோன்.) வாக்குத்தத்தம் பண்ணப்பட்டதை அடையாமற் போனார்கள். அவர்கள் நம்மையல்லாமல் பூரணராகாதபடிக்கு விசேஷித்த நன்மையான தொன்றை தேவன் நமக்கென்று முன்னதாக நியமித்திருந்தார். எபி:11:32-40. 142நீங்கள் அதைக் கண்டீர்களா? இங்கே மரித்துப்போன இந்த ஜனங்கள் நம்மை சார்ந்து, நமக்காக காத்துக் கொண்டிருக்கிறவர்களுமா யிருக்கிறார்கள். ஆகவே, உயிர்த்தெழுதல் உண்டாகும் பொருட்டு இந்த சபையானது பரிபூரணத்திற்கு வரவேண்டியதா யிருக்கின்றது. இந்த ஆத்துமாக்கள், கிறிஸ்துவின் வருகைக்காக சபையானது பரிபூரணப்பட பலிபீடத்தின் கீழ் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், கிறிஸ்து வரும்போது இந்த சபையானது ஒரு சிறுபான்மையோராக இருப்பர். இங்கே இந்த வரைபடத்தில் காட்டப்பட்டதைக் காட்டிலும் இந்த நுனியானது இன்னும் குறுகி காணப்படும். (சகோ. பிரன்ஹாம் கரும்பலகையின் வரைபடத்தைச் சுட்டிக் காட்டுகிறார் - ஆசி) விடுபட்டு போன அதே ஊழியத்தை சிறுபான்மையான சபை செய்யும் மட்டும், அது ஒரு ஊசி முனையைப் போன்ற உருவமைப்புக்கு கொண்டு வரப்படுகின்றது. ஏனெனில், இந்த தலைக்கல்லானது திரும்பி வரும்போது... அது ஒருமுறையான நுனி கோபுரத்தின் மேல் அமருவதற்காக அந்த நுனி கோபுரமானது ஒரு உறையைப் (Pocket) போன்றிருக்கின்றது. ஒரு மூடியானது குறுக்காக அமருவது போன்றல்ல; அது ஒரு சிறு அமைப்பாக இருக்கும். அந்த தலைக் கல்லானது அதின் மேல் சரியானபடி அமர வேண்டியிருக்கிறது. ஏனெனில், அது அங்கே அமர்ந்து தண்ணீரை சொரிகின்றதாயிருக்கிறது. அத்தகைய சம்பவம் நிகழும் போது சபையானது செதுக்கப்பட்டு கூர்தட்டப்பட வேண்டியதாயிருக்கும். நுனி கோபுரத்தின் மற்ற கற்கள் ஒரு சவரக் கத்தியைக் (Razor blade) கூட அதனிடையில் சொருகக் கூடாதபடிக்கு அவ்வளவு இறுக்கமாக அமைந்திருக்கின்றன. பல டன்கள் எடை கொண்ட அக்கற்களை, எவ்விதம் அவ்வளவு உயரம் கொண்டு சென்றார்களோ, அதைப் பற்றி ஏதும் தெரியாது. ஆனால், அது அவ்விதமாகக் கட்டப்பட்டிருக்கின்ற தென்பதே காரியம். அங்கு அந்த நுனி கோபுரத்தின் தலைக்கல் அந்த தலைக்கல்லானது வரும் போது, கிறிஸ்துவின் சரீரமாகிய சபை செதுக்கப்பட்டு பணிதீர்க்கப்பட வேண்டும். பாரம்பரியங்கள், உபதேசங்கள் போன்றவைகளின் மூலம் நாம் கடந்து வந்த காரியங்களெல்லாம் அங்கே செதுக்கப்பட்டு பணிதீர்க்கப்பட வேண்டும். அது மட்டுமன்று; கிறிஸ்து வரும்போது அவரும் சபையின் ஊழியமும் சரியாக பொருந்தத்தக்கதாக, கிறிஸ்துவைப் போலவே அது பரிபூரணமாகக் காட்சியளிக்க வேண்டும். பாருங்கள்? அப்பொழுதுதான் எடுத்துக் கொள்ளப்படுதலும், நித்திய வீட்டிற்குச் செல்லுதலும் சம்பவிக்கும். 143கவனியுங்கள், நாம் வாழும் இந்த லவோதிக்கேயா சபையின் காலம், சபையின் காலங்களிலேயே மிகவும் மோசமான காலமாயிருக்கின்றது. இந்த சபையின் காலத்தில் தான் தேவன் சபையின் வெளியே நின்று கொண்டு கதவைத் தட்டி தம்முடைய சொந்த கட்டிடத்திற்குள்ளே நுழைய முயற்சிக்கிறார். ஸ்தாபனங்களும், பாரம்பரியங்களும் அவரை அவருடைய சொந்த சபையினின்று வெளியேற்றிவிட்டன. ''இதோ வாசற்படியிலே நின்று தட்டுகிறேன்; ஒருவன் என் சத்தத்தைக் கேட்டு, கதவைத் திறந்தால், அவனிடத்தில் நான் பிரவேசித்து, அவனோடு போஜனம் பண்ணுவேன், அவனும் என்னோடே போஜனம் பண்ணுவான்'' என்று இயேசு கூறினார். பாருங்கள்? இந்த சபையின் காலத்தில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக தூக்கியெறியப்பட்டு, முடிவில் அவர்கள் அவரை முழுவதுமாக தூக்கியெறிந்து விடுவார்கள். அவர்கள் தேவனுடைய காரியங்களை விரும்புவதில்லை. இன்று நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பதை கவனியுங்கள். இந்த லவோதிக்கேயா சபையின் முடிவு காலம் மிகவும் சடங்காச்சாரம் நிறைந்ததாயிருந்து, அதுவும் கத்தோலிக்கமும் ஒன்றாக இணைந்து ஐக்கிய சபைகளின் சங்கம் என்ற ஒரு பெரிய சபையாக உருவெடுக்கும். கத்தோலிக்கத்திற்கும், இதற்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. 144ஆனால் ஒரு வித்தியாசம் மட்டும் உண்டு; அப்பம் பிட்கும் ஆராதனையின் ஒழுங்கு மட்டும் கத்தோலிக்கரையும், பிராடஸ்டண்டுகளையும் பிரிக்கின்றது. கத்தோலிக்க சபை, ''அது கர்த்தரின் சரீரம்'' என்று கூறுகிறது. பிராடஸ்டண்டு சபை, ''அது அவருடைய சரீரத்திற்கு ஒப்பாயிருக்கிறது'' என்று கூறுகிறது. கத்தோலிக்கர்கள் அதை ஒரு தொழுகையாக்கி அப்பம் பிட்டு, அப்பம் பிட்டு, அதன் மூலம் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதாக நம்புகிறார்கள், பிராடஸ்டண்டுகள் அதை விசுவாசத்தில் எடுத்து, அப்பம் பிட்கும் ஆராதனையில் தங்கள் பாவங்கள் மன்னிக்கப்பட்டதற்காக ஸ்தோத்திரம் செய்கின்றார்கள். பிராடஸ்டண்டுகள், ''நாங்கள் மனிக்கப்பட்டோம் என்று கூறுகிறார்கள். கத்தோலிக்கர்கள், ''நாங்கள் மன்னிக்கப்பட்டோம் என்று நம்புகிறோம்'' என்று கூறுகிறார்கள். தொழுகையும், அப்பம் பிட்குதலும் இங்கு இணைக்கப்படுகின்றது. அவர்கள் அதை தொழுகையென்று அழைக்கிறார்கள்; நாம் அதை அப்பம் பிட்குதல் என்று அழைக்கிறோம். ஒரு தொழுகையானது, அது அவ்விதம் தான் என்ற நம்பிக்கையாயிருக்கிறது. ஆனால், அப்பம் பிட்குதல் என்பது அது அவ்வாறு தான் என்று அறிந்து அதற்காக நன்றி சொல்வதாயிருக்கிறது. பாருங்கள்? இந்த ஒரு காரியத்தில் தான் அவர்கள் இணையாமலிருக்கின்றனர். ஆனாலும், அதையும் அவர்கள் செய்துவிடுவார்கள். 145ஓ, இது ஒரு கவர்ச்சியானதாகக் காணப்படுகின்றது. அது இணைந்து... முழுவதுமாக... ''இந்த மிருகமானது தன் வல்லமையை அந்த மகாவேசிக்கு கொடுத்திருந்தது'' என்று வேதம் கூறுகின்றது. பாருங்கள்? அவர்கள் அங்கு ஒன்றாக இணைவதை பாருங்கள். அவர்கள் என்ன செய்வார்கள் என்று வேதம் கூறுகிறதோ அதை அவர்கள் அப்படியே செய்கின்றனர்; அந்த வாரம் அதற்குரிய ஒரு ஊர்வலமும் நடைபெறவிருக்கின்றது. கத்தோலிக்கரோடும், பிராடஸ்டண்டுகளோடும் எனக்கு எந்தவித மானவிரோத மனப்பான்மையும் கிடையாது. மெத்தோடிஸ்டு, பாப்டிஸ்டு, பெந்தெகொஸ்தேயினராகிய உங்கள் சபைகள் அங்கே ஐக்கியசபைகள் சங்கத்திற்கு சென்ற போது, அந்த நியூயார்க் பட்டினத்தில் அவர்கள் ஐக்கிய சபைகளின் அடையாளமாக ஒரு நினைவாலயத்தைக் கட்டின போது, அது எல்லா பிராடஸ்டண்டுகளையும் ஒன்று சேர்க்கும் முயற்சி என்பது தெளிவாகிறதல்லவா? 22வது அல்லது 23வது போப் ஜான் (Pope John) என்பவரை இந்த கத்தோலிக்கர்கள் மிகவும் ஞானமுடன் கொண்டு வருகிறார்கள். இவர் தாழ்மையான சுபாவத்தோடு, பிராடஸ்டண்டின் விசுவாசத்தையும், கத்தோலிக்க விசுவாசத்தையும், ஒரே விசுவாசத்திற்குள் கொண்டுவர முயற்சிக்கிறார். வேதம் எதை சொல்கின்றதோ, அதை அவர்கள் சரியாக நிறைவேற்றுகின்றார்கள். அதுதான் காரியம். பிராடஸ்டண்டுகள் அந்த தூண்டில் முள்ளுக்கு இப்பொழுது இறையாகின்றார்கள். ஏன்? ஏன்? ஏனெனில் அவர்கள் விசுவாசம், தேவஞானம், பொறுமை, ஆகிய சுபாவங்களை பெற்றிருக்கவில்லை. வார்த்தையே சரியானது என்ற ஞானத்தையும் கர்த்தருக்குக் காத்திருத்தல் என்பதையும் அவர்கள் பெற்றிருக்கவில்லை. நான் எதைக் குறிப்பிடுகிறேன் என்பதை காண்கிறீர்களா? 146சில நாட்களுக்கு முன்பு அந்த மெத்தோடிஸ்டு சபையின் தலைமை குரு ஒரு வழக்கில் கூறினது போன்று காரியம் இருக்கின்றது. ஒரு பள்ளியிலோ அல்லது சபையிலோ எதிலென்று எனக்குத் தெரியவில்லை. ஒரு பிரஸ்பிடேரியன் ஜெப புத்தகத்திலுள்ள ஜெபத்தை அந்த பள்ளியில் சொல்வதற்கு ஒப்புக் கொள்ளாத ஒரு பெற்றோர் அதைக் குறித்து ஒரு வழக்கை தொடர்ந்தார்கள். அப்பொழுது இந்த வயதான ஞானமுள்ள தலைமை குரு எழுந்திருந்து, ''அது தவறுதான், அது சட்டத்திற்கு விரோதமானது தான்'' என்று கூறினார். அவர் அங்கு ஏற்பட்டிருந்த சூழ்நிலைக்கு ஆளாகி விட்டார். அவர் மேலும், “எங்களுடைய மெத்தோடிஸ்டு சபையிலுள்ள அநேக ஜனங்கள், ''ஹாலிவுட்'' (Hollywood) என்ற இடத்தின் அவதூறுகளைக் (சகல அருவருப்பான சினிமாக்கள் தயாரிப்பிடமும், நவநாகரீகத்தின் பிறப்பிடமும் இந்தஹாலிவுட் - தமிழாக்கியோன்) குறித்துப் பேசுகிறார்கள். இருந்தாலும் 95 சதவிகிதத்தினர், அந்த அசுத்தங்களை சென்று எப்படியாவது பார்த்து விடுகின்றனர்'' என்று கூறினாராம். இது என்ன காரியம்? அவர்கள் இதனின்றி விலகவிட்டனர். அவர்கள் முற்றிலுமாக விலகிவிட்டனர். பின்மாற்றமாகி விட்டனர். 147இந்த அறையில் நான் ஒரு நாள், ஃபால் பட்டினம் (Fall city) என்ற பட்டினத்தின் மிகப்பெரிய மெதோஸ்டிஸ்டு அலுவலர் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்தேன். அந்த சபை ஃபால்ஸ்பட்டினத்திலுள்ள மிகவும் முக்கியம் வாய்ந்த ஆவிக்குரிய மெத்தோடிஸ்ட் சபைகளில் ஒன்றாகும். நான் அவரிடம் இந்த பெந்தெகொஸ்தேயின் காலத்திற்கு முந்தின காலம்தான் மெத்தோடிஸ்டு காலம் என்பதை காண்பித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அவர், “மிஸ்ஸௌரியிலுள்ள செயிண்ட் லூயிஸ் என்னுமிடத்தில் மூன்று நான்கு மாதங்களுக்கு முன்பாக ஒரு மதிப்பீட்டை செய்து, அங்கு 70 சதவீத மெத்தோடிஸ்டுகள் புகைப்பிடிப்பவர்கள் என்றும் 68 சதவீதத்தினர் சாராயம் குடிப்பவர்களென்றும் மதிப்பிட்டிருக்கிறார்கள்'' என்று கூறினார். இன்று காலையில் ஒருவேளை, அந்த மனிதன் இங்கு அமர்ந்திருக்கலாம். நல்லது, அவர் இந்தக் கட்டிடத்தைக் கட்டயிருக்கிறவர். அவர் மெயின் தெரு மெத்தடிஸ்டில் இருக்கிறார். சகோதரர் லம் அவர்கள் போதகர் ஆவார். இதில் ஒரு விசித்திரமான காரியம் என்னவென்றால், அந்த மதிப்பீட்டில் ஆண்கள் எத்தனை பேர், பெண்கள் எத்தனை பேர் என்று பார்த்த போது, ஆண்களை விட பெண்களே அதிகம் பேர் புகைப் பிடிப்பவர்களாகவும், சாராயம் குடிப்பவர்களாகவும் காணப்பட்டார்களாம். 50 சதவீத ஆண்களுக்கு, 70 சதவீதம் பெண்கள் புகைப் பிடிப்பவர்களாகவும், சாராயம் குடிக்கிறவர்களாகவும் இருந்தனர். பெண்கள் எழுபது சதவீதம் அல்லது அதற்கு மேல். 148இப்பொழுது கவனியுங்கள். குட்டையான ஆடை உடுத்துதல், மயிரைக்கத்தரித்தல் போன்ற காரியங்களை செய்யும் பெண்களைக் குறித்த வேத உபதேசத்திற்கு செல்வோமானால் காரியம் இன்னும் எவ்விதமாக இருக்கும்? அது, அவ பக்தியாயிருக்கிறது. பெண்கள் பலவிதமான அரங்குகளுக்கு சென்று, சீட்டு விளையாடுதல் மற்றும் வீண் வார்த்தைகளைப் பேசிக்கொண்டு, தங்கள் நாவுகளை அடக்கிக் கொள்ளத் தெரியாதவர்களாக இருக்கின்றனர். இந்த ஆண்களைக் குறித்தென்ன? சீட்டு விளையாடுதல், கோல்ப் (Golf) என்ற விளையாட்டை ஆடிக் கொண்டும், பலவித அரங்குகளில் அரைகுறை ஆடைகளை உடுத்தியிருக்கும் பெண்களோடு, கொட்ட மடித்துக் கொண்டிருக்கின்றனர். இதில் அதிசயம் ஒன்றுமில்லை. சிறையில் சென்று பிரசங்கிக்கும் அந்த பிரசங்கியின் மேல் எத்தகைய அருவருப்பான பழியை சுமத்தினார்கள் பாருங்கள், ஆம் ஐயா. அந்த மனிதன் அத்தகைய குற்றத்திற்கு பாத்திரவான் என்று நான் நம்பவில்லை. அவர்கள் என்ன செய்தனர். அந்த மனிதனின் பெயர் என்னவென்று எனக்குத் தெரியவில்லை... (யாரோ ஒருவர் ''டான் கில்பர்ட்'' என்று கூறுகின்றார் - ஆசி) அந்த சிறை பிரசங்கியின் பெயர் டான் கில்பர்ட். சில மாதங்களுக்கு முன்பு ஒரு மனிதன் டான் கில்பர்ட்டை கொன்று விட்டான். இந்த கொலையை செய்தவனுடைய மனைவி ஒரு பிள்ளையை பெற்றெடுக்க விருக்கிறாள். டான் கில்பர்ட் இறந்தவிட்டபடியால், அந்த குழந்தையைக் குறித்து இரத்த பரிசோதனை செய்ய முடியாது. அந்த ஸ்திரீ, டான் கில்பர்ட் தன்னை கற்பழித்து விட்டதாகவும், தான் சுமப்பது அந்த பிரசங்கியினுடைய பிள்ளை தான் என்றும் கூறினாளாம். அத்தகைய காரியத்தை நான் நம்புவதைக் காட்டிலும், ஒரு காகமானது புறாவின் சிறகுகளை செருகிக் கொண்டதை நான் நம்புவேன். இல்லை, ஐயா, அது ஒரு பொய் என்று நான் நம்புகிறேன். டான் கில்பர்ட், ஒரு தேவ மனிதன் என்று நான் விசுவாசிக்கிறேன். அது பிசாசின் ஒரு திட்டம் என்று நான் திடமாய் நம்புகிறேன். 149ஜெபத்தை பள்ளியில் சொல்ல தடை செய்ய முயற்சித்த அந்த பெற்றோரின் வழக்கை போன்றது தான் இதுவும். அந்த மெத் தோடிஸ்டு தலைமை குரு இதை புரிந்து கொள்ளும் அளவிற்கு சாதுரியவானாயிருந்தார். அது நிறைவேறியிருக்குமானால், அது வேறொரு ஆவியினால் ஊக்குவிக்கப்பட்டதாயிருந்திருக்கும். அது சரி. தென்பாகத்தில் ஏற்பட்ட இனப் பிரச்சினையும், அத்தகையது தான். மனிதன் சுதந்தரமாக இருக்க வேண்டுமென்பதை நான் விசுவாசிக்கிறேன். இந்த தேசம் விடுதலையை ஆதரிக்கிறது என்று நான் விசுவாசிக்கிறேன். அங்கு நடைபெற்ற இனக்கலவரத்திற்கு கென்னடி அவர்கள், துருப்புகளை அனுப்பியதற்காக நான் அவரை குற்றப்படுத்தவில்லை. நான் ஒரு, ''புதுமை நடத்துனன்'' அல்ல, மேலும் நான் ஒரு ஜனநாயக கட்சியையோ அல்லது குடியரசு கட்சியையோ சார்ந்தவனல்ல; நான் ஒரு கிறிஸ்தவன். ஆகவே நான்... நான் அத்தகைய அரசியலமைப்புகளை நம்புகிறதுமில்லை. ஒரு அற்பமான காரியத்திற்காக, அந்த நீக்ரோ மக்கள் தங்கள் பிறப்புரிமையை விற்பதை நான் நம்புகிறதில்லை. ஆபிராகம் லிங்கன் என்பவருடைய இரத்தம் நீக்ரோ மக்களை விடுதலை செய்தது. ஏனெனில், அவர் ஒரு தேவ பக்தியுள்ள மனிதனாயிருந்தார். அந்த நீக்ரோ மக்கள் ஜனநாயகக் கட்சியை சார்ந்தவர்களாயிருந்தார்கள். அவர்கள் அக்கட்சிக்கு வாக்கு அளிக்கும் பட்சத்தில் அக்கட்சியிலே நிலைத்திருக்க வேண்டியது தானே! என்று நான் நினைக்கிறேன். ஆனால், ஒரு காரியத்தை உங்களுக்குச் சொல்லுகிறேன். அந்த வாலிபன், பள்ளியில் சேர வேண்டுமென்ற பிரச்சினைக்காக அங்கு செல்லவில்லை; அந்த வாலிபன் ஒரு அமெரிக்க குடிமகனாயிருந்தான். இந்த தேசம் யாவருக்கும் சுதந்தரமானது. ஒரு மனிதனின் நிறம் அவனை மாற்றுகிறதில்லை. பூமியிலுள்ள சகல ஜனங்களையும், ஒரே இரத்தத்தினால் தேவன் உண்டாக்கினார் என்று வேதம் கூறுகிறது. நாம் அனைவரும் ஒருவரே. 150ஆனால் அந்தப் பையன் ஒரு ராணுவ வீரன். அவன் நல்ல அனுபவம் உள்ளவன். பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்ற உரிமை அவனுக்கு இருந்தது. அதற்காக அவன் போராடலாம். அது சரி. ஆனால் அவன் சேரத்தக்க அநேகப் பள்ளிகள் அங்கு உண்டே. அதுதான் காரியம். அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்று நீங்கள் பார்ப்பீர்களென்றால், இன்றைய ஸ்தாபனங்கள் என்ற அமைப்பு தான் அவர்களைத் தூண்டிவிடுகின்றன தென்பதை புரிந்து கொள்ளலாம். ஏன்? ஒரு குறிப்பிட்ட பள்ளியில் சேரும் இந்த அற்ப விஷயத்தை அவர்கள் ஏன் பெரிதாக்கினார்கள்? சில ஜனநாயகக் கட்சிக்காரர்கள் குடியரசு கட்சியினை சேர்ந்தவர்களாகிய, அந்த நீக்ரோ மக்களின் வாக்குகளை (Votes) அவர்கள் பக்கம் இழுக்க செய்த சதியே அது. அங்கே அந்த நீக்ரோக்கள் தங்கள் பிறப்புரிமையை விற்று கொண்டிருக்கிறார்கள். அதுதான் உண்மை. பரிசுத்த ஆவியானவர் அங்கில்லை; ஞானமுடையவன் இதை அறிந்துக் கொள்ளட்டும். அது சரி. தற்காலத்திலுள்ள இந்த சபையும் தன்னை விற்று கொண்டிருக்கிறது. என்ன நடக்கப்போகிறது என்று உன்னால் காண முடிகிறதா? நான் கூறுகிறது ஒலிப்பதிவாகிறது என்பதையும் நான் பொருட்படுத்தவில்லை! இதோ அது ஹூ... ஹூம். ஆம். காரியம் என்ன? என்னுடைய தாயார், ''பிசாசின் பங்கை அதற்கு கொடுத்து விடு“ என்னும் பழமொழியை என்னிடம் கூறுவது வழக்கம். காஸ்ட்ரோ (Castro) என்னும் மனிதன் ஒரு புத்திசாலித்தனமான காரியத்தை செய்தான். ஆம் ஐயா, அங்கு இருந்த முதலாளிகள் கரும்பாலைகள் மற்றும் எல்லாக் காரியங்களையும் உடையவர்களா யிருந்தார்கள். அது அமெரிக்காவின் தங்க நாணயப் பத்திரத்திற்கு ஒப்பானதாக இருந்தது. காஸ்ட்ரோ என்ன செய்தான்? அவன் அந்த பத்திரங்களையெல்லாம் வாங்கிக் கொண்டான். அவன் எந்த வழியிலாகிலும் பணத்தையெல்லாம் பெற்றுக் கொண்டான். அதன்பின் அவன் என்ன செய்தான்? அவன் கள்ள நோட்டுக்களை அடித்து (Counterfeit) அந்தப் பத்திரங்களெல்லாவற்றையும் விலைக்கு வாங்கி விட்டான். அத்தகைய ஒரு காரியத்தைதான் இத்தேசம் செய்யக் கூடும். 151''ஜீவ எல்லைக்கோடு'' என்ற ஒலிப்பரப்பில் இக்காலை வெளியான செய்தியை நீங்கள் கேட்டீர்களா?தங்கத்தின் மேல் பத்திரங்களை இத்தேசம் விற்கின்றது. இப்பத்திரங்கள் ஏற்கனவே கொள்ளப்பட்டுவிட்டன. இப்பொழுது இருக்கும் அரசாங்கமானது இன்றிலிருந்து 40வருடங்களாக அவர்கள் சம்பாதிக்கும் படியான வரிப்பணத் தொகையையே செலவிட்டு கொண்டிருக்கிறது. அவள் முடிவடைந்துக் கொண்டிருக்கிறாள். வாஷிங்டன் டி.சி.(Washington D.C)யிலிருந்து வெளியான, 'ஜீவ எல்லைக்கோடு' என்ற ஒலிப்பரப்பின் மூலம் அது நாடு முழுவதும் ஒலிப்பரப்பப்பட்டது. அயல் நாட்டு காரியங்களை வாங்கத்தக்கதாக இந்த வரிப்பணத்தை அவர்கள் உபயோகிக்கின்றார்கள். நீங்கள் அதைக் காண்கிறீர்களா? அவர்கள் சரியாக அதைத்தான் செய்யப் போகிறார்கள். பாருங்கள்? அது என்ன? அந்த தேவம் தகர்ந்துபோவதைத் தவிர வேயென்றுமில்லை. இந்த தேசம் திவாலாகி உடைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை. ஆனால் நாணயத்தை (Currency) மாற்றுவது என்ற ஒரே ஒரு புத்திசாலித்தனமான காரியம் மட்டுமே அதினால் செய்யக்கூடும். ஆனால் அவர்கள் தற்போதுள்ள நிர்வாகத்தின் கீழ், அதை செய்யப் போவதில்லை. ரோமன் கத்தோலிக்க சபையானது உலகத்தின் தங்கத்தையெல்லாம் தனக்கு சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கிறது. அவர்கள் அதை என்ன செய்யப் போகிறார்கள்? அவர்கள் அதை விற்பனைச் செய்யப் போகின்றார்கள். அவர்கள் இழக்கும் முன்பாக, என்ன செய்வார்கள்? வேதத்தில் கூறப்பட்ட படி பூமியின் மேலுள்ள தனவான்கள்; ப்ரௌன், வில்லியம்சன் போன்ற இவர்களில் (பெரும்பாலோர் கத்தோலிக்கர்களாக இருக்கின்றனர்) பெரிய புகையிலைத் தொழிற்சாலை சொந்தக்காரர்கள் அதை அங்கிகரித்துக் கொண்டு ரோமாபுரியினின்று பணத்தை வர்த்தக ரீதியில் பெற்றுக் கொண்டு தங்கள் பிறப்புரிமையை விற்று விடுவார்கள். ஆம் ஐயா, ரோமாபுரி இத்தேசத்தின் முதுகெலும்பாகி விடுவாள். அத்தகைய சம்பவத்திற்கு போதுமான அரசுமுறை நிர்வாகம் இப்பொழுது, அவளைச் சுற்றிலும் ஏற்பட்டிருக்கிறது. கென்னடி எதற்காக விரும்பப்படுகிறார் என்பதை கவனியுங்கள். 152கென்னடி தேர்தெடுக்கப்பட்டது கள்ள வாக்குகளின் மூலமே (false votes) என்று அதிகாரபூர்வாக நிரூபிக்கப்பட்டிருந்தும், அதை குறித்து ஏதும் செய்ய அவர்கள் மறுத்து விட்டனர். அப்படியானால் வாக்களிப்பதினால் என்ன பயன்? அது செய்தித்தாள்கள் மூலமாகவும், பொது ஜனங்களுக்கு முன்பாக நிரூபிக்கப்பட்டும், அவர்கள் அதைக் குறித்து யாதொன்றையும் செய்ய மறுக்கின்றனர். அவன் ஒரு தவறான வழியில் வருவான் என்று வேதம் இக்காரியங்களைக் குறித்து கூறவில்லையா? அது நிச்சயமாக கள்ளத்தனமான காரியமே நான் குடியரசு கட்சிக்கு விரோதமாக பேசவில்லை; அது போல ஜனநாயகக் கட்சிக்கும் விரோதமாயுமில்லை; ஆனால் நான் வேதத்தின் உண்மைகளையே உங்களுக்கு கூறுகிறவனாயிருக்கிறேன். யார் பதவிக்கு வர வேண்டுமென்று, அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கும் போது வாக்களிப்பதினால் பயன் என்ன? 153அன்று இரண்டு பெண்கள் பேசும் நிகழ்ச்சியை அவர்கள் ஒளிப்பரப்பினதை எத்தனை பேர் நினைவு கூறுகிறீர்கள்? அதில் ஒரு பிராடஸ்டண்டு பெண்மணி, ''நான் கென்னடி அவர்களுக்குத் தான் வாக்களிக்கப் போகிறேன்'' என்றாள். அதற்கு நிருபர், ''ஏன்?'' என்று கேட்டார். அதற்கு அவள், ''நிக்சனைக் காட்டிலும் கென்னடி ஒரு சாமர்த்தியமான ஜனாதிபதியாக இருப்பார்'' என்று நான் நினைக்கிறேன் என்று பதிலளித்தாள். பின்பு நிருபர்கள் வேறொரு பெண்மணியை அழைத்து (இவர் கத்தோலிக்க சபையை சேர்ந்தவளாயிருந்தாள்) ''நீங்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவள், ''நான் ரோமன் கத்தோலிக்க சபையை சேர்ந்த உண்மையான கத்தோலிக்க விசுவாசி, நான் நிக்சன் அவர்களுக்கே ஓட்டளிக்கப் போகிறேன்'' என்றாள். அதற்கு நிருபாகள், ''ஏன்?'' என்று கேட்டனர். அதற்கு அவள், ''நிக்சன் அவர்கள் கம்யூனிசத்தைக் குறித்து அதிகமாக அறிருந்திருப்பதினால், அவர் கென்னடியை விட ஒரு நல்ல ஜனாதிபதியாக செயலாற்றுவார்'' என்று கூறினாள். அந்த பெண்மணி அங்கு பொய்யை பேசினாள். 154''எங்களுடைய விசுவாசத்தின் உண்மைகள்'' என்ற பிரசித்தி பெற்ற கத்தோலிக்க புத்தகம் ஒன்று என்னிடத்திலுண்டு. அதில், ''ஒரு பிராடஸ்டண்டிற்கு எதிராக ஒரு கத்தோலிக்கன் ஏதாகிலும் ஒரு பதவிக்கு போட்டியிட்டால், எந்த ஒரு கத்தோலிக்க பிரஜையாவது பிராடஸ்டண்டிற்கு வாக்களித்தால், அவனோ அல்லது அவளோ கத்தோலிக்க சபை ஐக்கியத்தினின்று புறம்பாக்கப்படுவான் என்றும், இரண்டு கத்தோலிக்கர்கள் ஒரே பதவிக்கு போட்டியிட்டால், தாய் சபைக்கு உத்தமாயிருக்கிற கத்தோலிக்கனையே அவர்கள் தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும்'' என்றும் எழுதியிருக்கிறது. இந்த வஞ்சகம் எவ்விதமாயுள்ளது என்று பாருங்கள்? அவர்கள் எதை செய்ய முயற்சிக்கின்றார்கள்? பணம் கொடுத்து விலைக்கு வாங்குதல். ஏன்? பணத்தினால் காரியத்தை முறியடிக்க அவர்கள் முயற்சிக்கின்றார்கள். அவர்கள் அதைத்தான் செய்கின்றார்கள், இத்தேசமானது உடைந்து கொண்டிருக்கின்றது. அது என்ன? அது தங்க மதிப்புப் பத்திரங்களாயிருக்கின்றது. ரோமன் கத்தோலிக்க சபை, குருக்களாட்சி உலகத்தின் தங்கத்தை வைத்துள்ளது. (யாரோ ஒருவர், ''1680 கொடி டாலர்'' என்று கூறுகிறார் - ஆசி) 1680 கோடி டாலர் மதிப்புள்ள உலகத்தின் தங்கத்தை தனக்கு சொந்தமாக வைத்துக் கொண்டிருக்கின்றது. அது தான் காரியம். 155நீங்கள் உங்கள் வீடுகளையும், மற்றவைகளை மட்டும் உடையவர்களாயிருக்கும் பொருட்டு இத்தேசத்தை தங்க நாணய மதிப்பீட்டினிடமாக தூக்கியெறிந்து விடுங்கள். ஆனால், நீங்களோ கத்தோலிக்க சபைக்கு சொந்தமானவர்களாயிருப்பீர்கள். இந்த தேசமானது கத்தோலிக்க சபைக்கு சொந்தமானதாயிருக்கின்றது. அவர்களுடைய நாணயத்தின் (Currency) மூலமாக முழுக் காரியமும், இவ்விதமாக சிறை பிடிக்கப்பட்டதாயிற்று. அதைக் குறித்து வேதம் கூறவில்லையா? இத்தகைய காட்சியை வேதம் நமக்குக் காட்ட வில்லையா? சகோதரனே. நான் இன்று உங்களுக்கு என்ன கூற முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். ''பிராடஸ்டண்டு என்ற இயக்கத்தை அது இணைத்து, ஒரு அழகான சபையாக அதை செய்துவிடும்'' என்று அவர்கள் கூறுகின்றார்கள். இது இயற்கையான கண்களுக்கு நல்லதாகக் காணப்படலாம். ஆனால், இவ்வுலகத்தின் ஞானம் தேவனுக்கு முன்பாக பயித்தியமாக இருக்கிறது. பயித்தியமாகத் தோன்றுகிற பிரசங்கத்தினாலே விசுவாசிகளை இரட்சித்து, உலகத்தை சார்ந்த காரியங்களினாலல்ல, தேவன் தமது சபையில் நியமித்துள்ள தெய்வீக ஊழியத்தின் மூலம் ஆவிக்குரிய குணாதிசங்களான இக்காரியங்களினால் தம்முடைய சபையை கட்ட தேவனுக்குப் பிரியமாயிற்று. 156''பண ஆசை, நல்ல நிலைமைகள், களியாட்டு, பெருந்திண்டி, குடித்தல் போன்ற இச்சையாலுண்டான கேட்டுக்கு நீங்கள் தப்பி ஜீவனுக்கும், தேவ பக்திக்கும் ஏற்றவைகளினால் நீங்கள் கட்டப் பட்டிருக்கின்றீர்கள்'' என்று சபைக்கு பேதுரு கூறுகின்றார். அதுதான் காரியம் அதை நீங்கள் படித்தீர்களா? நீங்கள் அதைப் பெற்றுக் கொண்டீர்களா? இரண்டு பேதுருவில் எழுதப்பட்டுள்ளதை நாம் படித்து போது, நீங்கள் அதைக் கேட்டீர்களா? அவன் இங்கே என்ன கூறுகின்றான் என்று கவனியுங்கள். அது எவ்வளவு அழகாய் எழுதப்பட்டிருக்கிறது. அவன் எவ்விதம் அதை நயந்து கூறுகிறான். சரி. அவன் பேசுவதை நாம் இப்பொழுது கவனிப்போம் சரி. நம்முடைய தேவனும், இரட்சகருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவினுடைய நீதியால் எங்களைப் போல அருமையான விசுவாசத்தைப் பெற்றவர்களுக்கு, இயேசு கிறிஸ்துவின் ஊழியக்காரனும், அப்போஸ்தலனுமாகிய சீமோன் பேதுரு எழுதுகிறதாவது! தேவனையும் நம்முடைய கர்த்தராகிய இயேசுவையும் அறிகிற அறிவினால் உங்களுக்குக் கிருபையும், சமாதானமும் பெருகக்கடவது. தம்முடைய மகிமையினாலும், காருணியத்தினாலும் நம்மை அழைத்தவரை அறிகிற அறிவினாலே ஜீவனுக்கும், தேவபக்திக்கும் வேண்டிய யாவற்றையும் அவருடைய திவ்விய வல்லமையானது நமக்குத் தந்தருளினதுமன்றி (யாரோ ஒருவர், ''பரிசுத்தவான்கள்'' என்று கூறுகின்றார் - ஆசி) இச்சையினால் உலகத்திலுண்டான கேட்டுக்குத் தப்பி, (கூர்ந்து கவனியுங்கள்) திவ்விய சுபாவத்துக்குப் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, (யார் உலகத்தை சுதந்தரிக்கப் போகின்றார்கள்?) மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களும் அவைகளினாலே நமக்கு அருளப்பட்டிருக்கிறது'' (2.பேதுரு;1:1-4) அது ''இச்சையின் மூலம் உலகத்திலுண்டான கேடு'' (இச்சையின் மூலம் என்று பொருள்பட ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறது - தமிழில் ''இச்சையினால்'' என்றிருக்கிறது - தமிழாக்கியோன்). 157பணத்திற்காகவும், பெரியப் பெரிய காரியங்களுக்காகவும், புகழுக்காகவும், இச்சித்தல். இக்காரியங்களெல்லாம் விசுவாசிகளுக்கு மரித்தவைகளாயிருக்கின்றன. (சகோ. பிரன்ஹாம் நான்கு முறை பிரசங்கபீடத்தைத் தட்டுகிறார் - ஆசி.) ஒரு கூடாரமோ, கட்டிடமோ, நாம் அதைக் குறித்துக் கவலை கொள்வதில்லை. நான் எதற்காகக் கவலைப்பட வேண்டும்? வாழ்வோ, மரணமோ எதுவாயிருந்தாலும், நான் ஒன்றைக் குறித்து விருப்பமாயுள்ளேன். அது தான் தேவனுடைய ராஜ்யம்! நான் என் வீட்டை பராமரிக்கிறோனோ, குடும்பத்தைப் பராமரிக்கிறோனோ அல்லது மற்ற எதையாகிலும் பராமரிக்கிறோனோ இல்லையோ, என் மகிமையின் நம்பிக்கையாகிய கிறிஸ்துவை நான் பராமரிக்கட்டும். ஓ கர்த்தாவே, என்னை இதற்குள் கூட்டி வளர்த்திடும். கிறிஸ்துவே என்னுடைய தலையாயிருக்கட்டும்! அவர்மேல் எனக்குள்ள விசுவாசத்தின் மூலம் அவர் என்னில் கிரியை செய்யட்டும். ஓ! கர்த்தாவே, வல்லமை, ஞானம், தன்னடக்கம், பொறுமை, தேவபக்தி, சகோதர சிநேகம் என்பவைகள் என்னில் கிரியை செய்யட்டும் என்பதே என் ஜெபமாயிருக்கிறது. வாழ்வோ, மரணமோ, மூழ்குதலோ, ஸ்தாபனமோ, ஸ்தாபனமில்லாமையோ, நண்பனோ, நண்பனில்லாமையோ எதைப் பற்றியும் நான் கவலைப்படவில்லை. கிறிஸ்துவின் வல்லமை, அவருடைய ஞானம், மற்றவற்றை நான் போதிக்கும்படியாக என்னிலிருந்து பாய்ந்து செல்ல அது என்னில் கிரியை செய்யட்டும். எல்லாம் பூரணமாக்கவும், இந்த சுபாவம் யாவையும் அதனுள் கொண்டுவரவும், தேவனுடைய குமாரனுடைய வருகைக்காக பூரணராகவும், தேவன் சபையில் அப்போஸ்தலர், தீர்க்கதரிசிகள், போதகர், மேய்ப்பர், சுவிசேஷகர்களை நியமித்திருக்கிறார். 158இந்த ஒவ்வொரு கல்லும் அந்த பிராதனக் கல்லின் பாகமே, இது அதனுடைய பாகம் இந்த ஒவ்வொரு வல்லமையும் அவருக்குச் சொந்தமானதாகும்; அவரிலிருந்து அவைகள் மூலமாய் நம்மிடமாய் ஊற்றப்படுகிறது. ஆமென்! பன்னிரெண்டு மணியாகின்றது. இவையாவும் எங்கு செல்கின்றன? ஆமென். நீங்கள் அவரை நேசிக்கின்றீர்களா? (சபையார், ''ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) இதை நீங்கள் விசுவாசிக்கின்றீர்களா? ''ஆமென்.'' பிள்ளைகளே செவி கொடுங்கள்... சகோதரி கிட் இன்று காலை என்னிடம், ''சகோ. பில் அவர்களே, நான் மறுபடியும் உங்களை சந்திப்பேனோ, இல்லையோ என்பதை நானறியேன்'' என்று கூறினார்கள். அது என்னை மிகவும் சங்கடப்படுத்தி விட்டது. பாருங்கள்? சகோதரி கிட், தான் வயதாகி விட்டார்கள் என்று நினைக்கிறார்கள். அது அவ்விதம் தான். சகோதரனும், சகோதரியும் நெடுநாள் ஜீவிக்க நான் தேவனிடம் ஜெபித்தேன். நாம் எவ்வளவு நாட்கள் இங்கு ஒருவரை ஒருவர் சந்திப்போம் என்று எனக்குத் தெரியாது. நான் உங்களுடன் எவ்வளவு காலம் இருப்பேன் என்றும் எனக்குத் தெரியாது. தேவன் ஒருவேளை என்னை இந்த உலகத்தினின்று எடுத்துக்கொள்ளக் கூடும். ஒரு வேளை அவர் என்னை, வேறொரு இடத்திற்கு ஊழியத்திற்கு அழைக்கக் கூடும். உங்களை ஒரு வேளை எங்காவது ஓரிடத்திற்கு அவர் அழைக்கக் கூடும். நமக்குத் தெரியாது. ஆனால், அமர்ந்திருந்து கவனிப்போம். இது நம்மைக் கடந்து போக நாம் விட வேண்டாம். இதுவே வேதாகமத்தில் இருக்கின்றது. நாம் எவ்விதமிருக்க வேண்டுமென்பதற்கு இங்கு வேதாகமதத்தில் அவர் மாதிரியை காண்பித்திருக்கிறார். நான் அதை உங்களுக்குக் காண்பிக்க நேரம் இருக்குமானால் இதை நீங்கள் ஒரே நாளில் செய்துவிட முடியாது என்பதை நீங்கள் அறிவீர்கள். நான் இந்த முழுக் காரியங்களையும் உங்களுக்கு இணைத்துக்காட்ட முடியும். கவனியுங்கள். அன்று நான் செய்தியைக் கொடுத்த பின்பு பரிசுத்த ஆவியானவர் அங்குவந்து அந்த சுவற்றில் வரைந்தது என்ன? எத்தனை பேர் அங்கிருந்தீர்கள்? (சபையார், ''ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) பாருங்கள்? நிச்சயமாக! நான் வரைந்த அதே காரியத்தையே அவரும் அங்கே வரைந்தார். அன்று அங்கு வந்தது கர்த்தருடைய தூதன். 159அது உண்மையென்று கவனியுங்கள். அது உங்களை விட்டு கடந்து போக விடாதீர்கள். பிள்ளைகளே அதிலே நிலைத்திருங்கள், அதிலே நிலைத்திருந்து உங்களுடைய விசுவாசத்தின் மேல் இச்சுபாவங்களைக் கூட்டி கட்ட ஞாபகம் கொள்ளுங்கள். இப்பொழுது இங்கே , நான் பிரசங்கிக்கையில் அதை எங்கேயோ தவறவிடவில்லையெனில், அந்த காகிதத்துண்டு இங்குள்ளது என்று நான் நினைக்கிறேன். இதோ அது இங்கே இருக்கின்றது. நன்றி சகோதரனே, உமக்கு மிக்க நன்றி. நீங்கள் இதைப் பார்க்க விரும்பினால்... நான் இங்கு சிறு காகிதத்தில் அதை வரைந்து வைத்திருக்கிறேன். அங்கு வரைந்து வைத்திருக்கிற மாதிரியைக் காட்டிலும் இது சற்று விளக்கமான நிலையிலுள்ளது. நான் அதை இங்கு பொருத்தி வைத்து செல்கிறேன். நீங்கள் அதைப் பார்த்து வரைந்துக் கொள்ளலாம். 160நீங்கள் அதை எடுத்துக் கொண்டு, ஒத்துப் பார்த்து, ஆராய்ச்சி செய்து அதின்படி நடக்க நான் விரும்புகிறேன். நீங்கள் அதைப் படித்து ஒத்துப்பார்ப்பது மட்டுமல்ல அதன்படி செய்யுங்கள். அவ்விதமாய் செய்யும் போது அதை உண்மை மனதுடன் உங்களுக்குள் ஏற்றுக் கொள்ளுங்கள். ''நல்லது, நான் அதைக் கேட்டுக் கொண்டிருந்த போது மகிழ்ச்சியாயிருந்தேன்'' என்று கூறாதீர்கள். நானும் கூட அதை செய்தேன். ஆனால் செவி கொடுத்தலுக்கும், ஏற்றுக் கொள்வதற்கும் வித்தியாசமுண்டு. பாருங்கள்? பாருங்கள்? அது வித்தியாசமானது. பாருங்கள்? தேவனுடைய வளர்ச்சிக்கு ஏழு தகுதிகள் அங்கே காணப்படுகின்றன. தேவன் தம்முடைய சபையை ஏழு சபை காலங்களாக, இந்த தகுதிகளைக் கொண்டு வந்திருக்கிறார். ஏழு தூதர்கள் இந்தக் கிரியைகளை அவருக்கென்று செய்ய வேண்டியதாயிருந்தது. அங்கே ஏழு, ஏழு, ஏழு, என்றிருக்கின்றன. பாருங்கள்? ஏழு என்பது தேவனுடைய பரிபூரணமான எண்ணும் மூன்று என்பது நிறைவையுண்டாக்கும் எண்ணுமாயிருக்கின்றது. ஆகவே, அங்கு மூன்றும் ஏழு மூன்றுகளும் என்ற விதமாயிருக்கின்றது. கணக்கின் படியும், ஆவிக்குரிய விதமாயும் தேவனுடைய வார்த்தையால் பரிசுத்த ஆவியின் சாட்சியோடு அவைகளெல்லாம் இணைந்தவாறு பரிபூரணமாயிருக்கிறது. 161நாம் இவைகளைக் கவனமாக ஆராய்வோம். கிறிஸ்துவின் முழு வளர்ச்சியடைய நம்முடைய விசுவாசத்தோடு இவைகளைக் கூட்டுவோம். தேவ அன்போடும், தேவ பயத்தோடும், ஒருவருக்கொருவர் நம் இருதயத்தில் பயபக்தியுடனும், ஒருவருக்காக ஒருவர் இருதயத்தில் ஆழமான மரியாதையுடனும், சகோதர - சகோதரி சிநேகத்துடனும் நாம் இணைந்திருப்போம். அசுத்தமான அன்புடன் அல்ல; சுத்தமான பரிசுத்த ஆவியில் ஜீவித்து, பாருங்கள்? ஒற்றுமையுடன், ஒரு நல்ல கிறிஸ்தவனாக, விசுவாசத்தில் நடந்து, உன் மூலம் தேவனின் வல்லமை பாய்ந்தோட விடுவாயாக. சரியானதா அல்லது தவறானதா என்ற ஒன்று வரும்போது, தேவனுடைய ஞானம் உள்ளிலிருந்து பாய்ந்தோட விடுவாயாக. பிசாசு வசனத்திலில்லாத எதையாகிலும் உன்னிடம் கொண்டு வரும்போது, நீ தேவ ஞானமுடையவனாக, அதை தவறு என்று நிதானித்து அதனின்று கடந்து சென்றுவிடு. அது சரி. 162நாம் இன்று நடப்பது போல அந்த அப்போஸ்தலர்கள் ஒரு போதும் நடந்ததில்லை என்று நான் யூகிக்கிறேன். அவர்கள் பிரசங்க பீடத்திற்கு செல்லும் வரையிலும், ஒரு வேளை அதிகமான வார்த்தைகளைப் பேசாதவர்களாக இருந்திருக்கலாம். அவர்கள் பிரசங்க பீடத்திற்குச் சென்று, அவர்கள் எதைச் செய்ய வேண்டுமோ அதை மட்டும் செய்து அங்கிருந்து கடந்து சென்றார்கள். ஆம் ஐயா. அவர்களிடம் சக்தி இருந்தது. அவர்களிடம் வல்லமையிருந்தது. தாங்கள் எங்கு நிற்கிறோம் என்று அவர்கள் அறிந்திருந்ததினால் மனிதரோடு அவர்கள் தர்க்கிக்கவில்லை. அவ்வளவே, அவர்கள் யாரை விசுவாசித்தார்கள் என்பதை அறிந்திருந்தார்கள். அவர்கள் ஆவியில் நடந்து தேவ சித்தத்தையே செய்தார்கள். ''ஒரு சிறு அசைவு தேவன் காட்ட வேண்டியதுதான், அவர்களை நிறுத்தக் கூடிய சக்தி இவ்வுலகில் ஒன்றுமில்லாதிருந்தது'' என்று நான் அன்று ஒரு நாள் இரவு உங்களுக்குக் கூறினது போன்று அவர்கள் காணப்பட்டார்கள். அவர்கள் அதைக் குறித்துக் கேள்வி கேட்டு ஆராய்ச்சி செய்து (நாம் செய்வது போல) நாம் இதை அல்லது அதைச் செய்யலாமா என்று பார்த்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் தொடர்ந்து சென்று எவ்விதமாயினும், கிரியை செய்தார்கள். அது தேவனுடைய அசைவு என்று அவர்கள் எவ்விதம் அறிந்தனர்? அவர்கள் வல்லமை மற்றும் இந்த எல்லா சுபாவங்களை உடையவர்களாயிருந்து, தேவ அசைவு ஏற்படும்போது அதை அவருடைய வார்த்தையில் ஒத்துப்பார்த்து, அது தேவனுடைய வார்த்தைதான் என்று அறிந்து கிரியை செய்யச் சென்றார்கள். அவர்கள் எதைக் குறித்தும் கவலை கொள்ளாமல், தேவன் பேசின போது கிரியை செய்ய முயன்றார்கள். 163நாம் பேசுகிறோம்... தேவன் நம்மிடம் பேசுவாரென்றால், ''நல்லது, நாம் இப்பொழுது இந்த ஜீவியத்தை ஆரம்பித்து, தொடர்ந்து வாழ முடியுமா என்று பார்க்கலாம்'' என்று கூறுவோம். ஆனால் முதலில் அங்கு சம்பவிப்பது என்னவென்றால், யாராவது ஒருவர் உன்னிடம் அங்கு வந்து காரியத்தைக் குழப்பிவிடுவார். அது நிச்சயமாக ஒரு பிசாசாயிருக்கிறது. இந்த காலை ஆராதனைக்கு நான் வரக்கூடாதபடிக்கு, சாத்தான் என்னை தடுக்க முயற்சி செய்தான் என்பதை நீங்கள் கண்டிருந்தால்... அத்தகைய காரியத்தை நீயும் கூட ஒரு சமயம் பெற வேண்டியிருக்கும். ஓ! கிருபையுண்டாயிருக்கட்டும். ''ஒரு கூட்டம் ஆயத்தம் செய்யப்படுகிறது'' என்றால் அதற்காக நான் ஒவ்வொரு முறையும் போராட வேண்டியவனாயிருக்கின்றேன். இரட்சிப்படையாமல் மரித்துக் கொண்டிருக்கின்றயாராகிலும், ஒரு வியாதியஸ்தருக்கு நான் ஜெபிக்க செல்லும் போது, நான் அக்காரியத்தினின்று விலகியிருக்கத்தக்கதாக, 10 நிமிடங்களில், 30 தடவைகள் தொலைபேசி அழைப்புகள் வரும். அதில் ஜனங்கள், ''ஓ! சகோ. பிரன்ஹாம், நீங்கள் இதை கட்டாயமாக செய்ய வேண்டும்'' என்று கூறுவார்கள். ஆனால் அதே நேரத்தில், ஒரு ஆத்துமா மரணத்துக் கேதுவாயிருக்கும். நிச்சயமாக. 164அன்றிரவு நான் ஒரு இடத்துக்கு அழைக்கப்பட்டேன். ஒரு வாலிபன். நீங்கள் சூப்பர் மார்க்கெட் என்றழைக்கும் இடத்தில் நான் அவனிடம் பேசினேன். அநேக வருடங்களுக்கு முன்பாக அந்த மனிதனிடம் நான் பேசியிருக்கிறேன். அவன் ஒரு குடிகாரனாக மாறியிருந்தான். அவன் ஒரு நல்ல மனிதன்தான், ஆனால் பாவியாயிருந்தான். அவனுடைய தாய்தான் என்னை அழைத்திருந்தார்கள். அவர்கள் பலதடவை மருத்துவருக்காக தொடர்பு கொண்டு பின்பு என்னிடம் தொடர்பு கொண்டார்கள். அவர்கள் பில்லியைக் கூப்பிட்டார்கள் என்று நான் நினைக்கிறேன். நான் அந்த அழைப்பைப் பெற்றபோது, உண்மையாகவே நான் கூறுகிறேன், இந்த வாலிபனிடத்திற்கு நான் வந்து சேர ஏற்பட்ட போராட்டம் போல், என் ஜீவியத்தில் எப்பொழுதும் ஏற்பட்டதில்லை. நான் அங்கு போய்ச் சேர்ந்த பொழுதோ, அந்த பரிதாபமான வாலிபன் என்னை நினைவுபடுத்திக் கொள்ளும் சூழ்நிலைக்கு அப்பாலிருந்தான். அங்கே அவன் சுயநினைவின்றி படுத்திருந்தான். 51 வயது நிரம்பியிருக்கும். அவனுடைய தகப்பனார் தன் மகனை தோளில்தட்டி, “என் தேனே, அமர்ந்திரு'' என்று கூறினார். அவன் எழுந்திருக்க முயற்சித்தான். அவனுடைய கைகள் இதைப் போன்றிருந்தன. அந்த வாலிபனின், முழு சரீரமும் அவனுடைய அவயங்கள் யாவும் புற்று நோயால் பீடிக்கப்பட்டிருந்தது. அவனுடைய இரத்தத்திலும் கூட புற்றுநோய் நிறைந்து காணப்பட்டது. அவன் எழுந்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தான். 165நான் அவனுடைய கையைப் பிடித்து, ''வூட்ரோ, வூட்ரோ நான் தான் பிரன்ஹாம்'' என்று கூறினேன். அப்பொழுது அவனுடைய தகப்பனார், ''வூட்ரோ, சகோ. பிரன்ஹாமை உனக்குத் தெரியாதா? இதோ அவர் வந்திருக்கிறார்'' என்றார். அதற்கு அவன், ''ஆ...ஆ...ஆ...'' என்று முனகினான். அப்பொழுது அவனுடைய தகப்பனார் என்னை பார்த்து, ''பில்லி, நீங்கள் சற்றுதாமதமாய் வந்து விட்டீர்கள்'' என்று கூறினார். அப்பொழுது நான், ''ஒரு போதும் நான் தாமதமாய் வரவில்லை ஐயா, இயேசு இங்கிருக்கிறார்; இதற்காக நான் போராட வேண்டியிருந்தது'' என்று கூறினேன். அங்கு அநேக பாவிகளான வாலிபர்களும், சொந்தக்காரர்களும் நின்று கொண்டிருந்தனர். அப்பொழுது நான், ''வாலிபர்களே கவனியுங்கள். உங்களை ஆயத்தம் செய்து கொள்ளுங்கள். ஏனெனில், இந்த நிலைக்கு நீங்களும் ஒருநாள் வர வேண்டியிருக்கும். பாருங்கள்? ஒருவேளை இப்படிப்பட்ட புற்று நோயின் மூலமாக, அல்லது மாறாக ஒருவேளை நீங்கள் சாலையிலே விபத்தினால் இரத்தம் சிந்தி மரிக்கத்தக்கதாக, இந்நிலைமைக்கு வர வேண்டியிருக்கும் நீங்கள் இந்நிலைக்கு வந்தாக வேண்டும்,'' என்று கூறினேன். நாங்கள் அவர்களிடத்தில் பேசினோம். நான் அங்கு சற்று நேரம் ஆவியானவர் எதைச் செய்ய சொல்வார் என்று கவனித்துக் காத்திருந்தேன். நடந்த முதல் சம்பவம், எனக்கு ஒரு அசைவு ஏற்பட்டு, ''உன் கைகளை அவன்மேல் வை'' என்ற சத்தம் கேட்டது. அப்பொழுது நான், அங்கு நடந்து சென்று, ''நீங்களெல்லாரும் தலை வணங்குங்கள்'' என்று கூறினேன். அவர்களெல்லாரும் அவ்விதமே செய்தார்கள். இரண்டு, மூன்று வாலிபர் அங்கிருந்தனர். நான் என் கைகளை அவன் மேல் வைத்து, ''தேவனாகிய கர்த்தாவே, தான் என்ன செய்யப் போகிறான் என்பதை அறியும் படிக்கு இந்த வாலிபனுக்கு சுய நினைவைத் தந்தருளும். ஏனெனில் இவன் இக்காரியத்தை சந்திக்க வேண்டியவனாயிருக்கிறான். பிசாசானவன் இவனைக் கட்டி வைத்திருக்கிறான். மரணம் நேரத்தக்கதாக இவன் குடித்திருக்கிறான். இதோ இந்நிலைமையில் நீர் இவன் மேல் கிருபையாயிருக்கும்படி இவனுக்காக வேண்டிக் கொள்கிறேன்'' என்று ஜெபித்தேன். நான் அவனுக்காக ஜெபித்த பின்பு, அடுத்த நாள் காலையில், அவன் உட்கார்ந்தவனாய் தன் தகப்பனோடு பேசிக் கொண்டிருந்தான். 166சில வருடங்களுக்கு முன்பு, ஒரு மருத்துவ விடுதிக்கு வரும்படி ரோட்ஜர்ஸ் என்பவரால் நான் அழைக்கப்பட்டிருந்தேன். அன்று நான் அந்த சிறிய ஜார்ஜி கார்ட்டர் சுகம் பெற்ற மிடில்டவுன் (Middle Town) என்ற இடத்தில் பிரசங்கித்துவிட்டு வந்திருந்தேன். உங்களுக்கு அது ஞாபகமிருக்கும் என்று நினைக்கிறேன். அங்கு சகோ. ஸ்மித் என்னும் மெத்தோடிஸ்டு பிரசங்கியார், ''இந்த கூடாரத்தில் யாராகிலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிருந்தால், உடனே வெளியேறி விடுங்கள்'' என்று கூறினார். டாட்டன்ஸ் போர்ட் (Tottensford) என்னும் இடத்தில் அந்தக் கூட்டம் அமைந்திருந்தது. நீங்கள் என்ன வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளுங்கள், அவர் என்னை மிகவும் கேவலமாக பழித்துப் பேசினார். நான் ஒரு வார்த்தையும் பேசவில்லை. நான் தொடர்ந்து கூட்டத்தை நடத்தினேன். நான் நிறைவேற்ற வேண்டிய கட்டளை ஒன்றிருந்தது. அங்கு வனாந்தரத்தில் ஒரு ஆடானது சிக்கிக் கொண்டிருப்பதை எனக்கு அவர் ஒரு தரிசனத்தில் காண்பித்திருந்தார். நீங்களெல்லாரும் அத்தரிசனத்தை நினைவு கூருவீர்கள் என்று நினைக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் உள்ளது என்றே நான் யூகிக்கிறேன். உங்களுக்கு ஞாபகம் உள்ளதா? (சபையார், ''ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) 167நிச்சயமாக. சரி. நான் அங்கு வேட்டையாட வனாந்தரத்திற்குச் சென்றேன். ஆகவே, டாட்டன்ஸ் போர்ட் என்னுமிடத்திற்கு நான் சென்று வனாந்தரத்தில் அந்த ஆட்டிற்காக தேடி அலைந்தேன். அங்கு என்னோடிருந்த சகோ. ரைட் அதை அறிந்திருக்கிறார். நான் அங்கு என்ன செய்வதென்பதை அறியாதிருந்தேன். அங்கு வெளியே சென்று ஒருபடி மாதிரி அமைத்து, அதின்மேல் ஏறி பிரசங்கிப்பதற்காக ஒரு சிறு சவுக்காரப் பெட்டியை (Soap Box) விலைக்கு வாங்கினேன். சகோ. ரைட் மலையின் மேல் சென்று ஏதோ வியாபாரம் செய்யப் போவதாகச் சொன்னார். நானும் அவருடன் கூட சென்றேன். அந்த மலையின் மேலே ஒரு பழைய பாப்டிஸ்டு ஆலயம் வெறுமனே பூட்டிக்கிடந்தது. அங்கே கர்த்தர் என்னிடம், ''இங்கே தரித்து நில்'' என்று கூறினார். அப்பொழுது நான் சகோ. ரைட் அவர்களை நோக்கி, ''சகோதரனே, நான் இங்கேயே நின்று விட என்னை விட்டுவிடுங்கள்'' என்றேன். அவரும் சிறிது தூரம் சென்று பார்த்து விட்டு திரும்பிவிட்டார். நான் அங்கு சென்றேன். ஆனால் அதன் கதவை என்னால் திறக்க முடியவில்லை. அப்பொழுது நான், ''கர்த்தாவே, இக்காரியத்தில் நீர் இருந்து நான் இந்த ஆலயத்திற்குள் செல்ல வேண்டுமென்றிருந்தால், இந்த ஆலயக்கதவை திறந்தருளும்'' என்று ஜெபித்து அங்கே நான் அமர்ந்திருந்து யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது அங்கு யாரோ ஒருவர் வரும் ஓசையைக் கேட்டேன். அவர் என்னிடமாக வந்து, ''நலமாயிருக்கிறீர்களா?'' ''இந்த ஆலயத்திற்குள் செல்ல விரும்புகிறீரா?'' என்று கேட்டார். அதற்கு நான், ''ஆம், ஐயா'' என்றேன். அப்பொழுது அவர், ''இந்த ஆலயத்தின் சாவி இதோ இருக்கிறது'' என்றார். நான் அங்கு கூட்டம் நடத்த ஆரம்பித்தேன். முதல் வாரம் ஏதும் சம்பவிக்கவில்லை. அந்த முதல் இரவில் சகோ. ரைட்டின் குடும்பத்தை நான் சபை மக்களாகக் (Congregation) கொண்டேன். ஆனால் அந்த வார கடைசியில் சபையின் வெளிமுற்றத்தில் நிற்கக் கூட இடமில்லாதபடி ஜனங்களால் நிறைந்தது. இருந்தாலும் நான் தேடிக் கொண்டிருந்த, அந்த ஆடு இன்னுமாக வரவில்லை. சகோ. ஹால் (Bro. Hall) என்பவர் அந்த சமயத்தில் தான் இரட்சிக்கப்பட்டார். இப்பொழுது அவர் அந்த சபைக்கு மேய்ப்பனாக இருக்கிறார். இன்னுமாக அந்த ஆடு எங்கிருக்கிறது என்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறிது நாள் கழித்து அங்கே மலையடிவாரத்தில் இருந்த கிறிஸ்துவின் சபை (Church of Christ)யைச் சேர்ந்த, 9 வருடங்கள், 8 மாத வயதான ஒரு சிறுமி வியாதிப்பட்டு எழுந்திருக்கவும் கூடாத நிலையில் அங்கு காணப்பட்டாள். அது தான் அந்த ஆடு. அங்கு அவள் சுகமடைந்தாள். நீங்கள் அந்த வர்த்தமானத்தை அறிந்திருக்கிறீர்கள். 168ஆம். ஐயா, அந்த மத்தியான வேளையில் பஸ்டி ரோட்ஜர்ஸ் நின்று கொண்டிருக்க, நான் அங்கு நடந்து சென்றேன். சகோ. ஸ்மித்தின் சபையார் அங்கு நின்று கொண்டு, நான் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பதை கேலி செய்து கொண்டும், சிரித்துக் கொண்டுமிருந்தனர். டாட்டன்ஸ் போர்டின் தண்ணீர் புரண்டு ஓடுகிறதான அந்த ஓடையில் நான் நடந்து சென்றேன். ஒரு சில மூப்பர்கள் என்னாடு நடந்து வந்தார்கள். அப்பொழுது நான், ''தேவனுடைய பரிசுத்த வசனத்திற்கு பிரதிநிதியாக இந்த மத்தியான வேளையில் நான் இங்கு நிற்கிறேன்'' என்றேன். நான் மேலும், ''நீங்கள் மனந்திரும்பி ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள் என்று பேதுரு கூறியிருக்கிறார்'' என்று கூறி புத்தகத்தை அங்கிருந்த மூப்பர்களில் ஒருவரிடம் கொடுத்து விட்டு, ஓடைக்குள் நின்று, “யாதொருவர் தங்கள் பாவங்களுக்காக மனந்திரும்புகிறீர்களோ, அவர்கள் இங்கு வரக்கடவர்கள்'' என்று கூறினேன். மேலும் நான், ”தேவ தூதர்கள் இங்குள்ள ஒவ்வொரு கிளைகளிலும் அமர்ந்திருப்பதைப் போன்று எனக்குத் தோற்றமளிக்கின்றது“ என்று கூறினேன். 169ஓ, என்னே! நான் ஒன்றிரண்டு பேருக்கு ஞானஸ்நானம் கொடுக்கின்ற சமயத்தில் சகோ. ஸ்மித்தின் முழு சபையும், அருமையான பட்டு வஸ்திரங்களை உடுத்தியிருந்த அந்த பெண்களும், தங்களால் இயன்றவரை கூச்சலிட்டு தண்ணீரண்டை ஓடி வந்தனர். சகோ. ஸ்மித்தின் முழு சபைக்கும் நான் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்தேன்! அதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அதன் புகைப்படத்தை நான் இங்கு வைத்திருக்கிறேன். அதுதான் காரியம். அது என்ன? அதுதான் உன் விசுவாசத்தோடு வல்லமையைக் கூட்டுவதென்பது. பாருங்கள்? அதை அவ்விதம் கிரியைச் செய்யவிட்டு விடுங்கள். அதை எவ்விதம் செய்ய வேண்டுமென்று தேவன் அறிந்திருக்கிறார். இவைகளை எப்படி நிறைவேற்ற வேண்டுமென்று தேவன் அறிந்திருக்கிறார். மற்றவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும். அது ஒரு பொருட்டல்ல. நீ நடந்து மேலும், மேலும் சென்று கொண்டேயிரு. அங்கு நின்று கொண்டிருந்த சகோ. பஸ்டி ரோட்ஜர்ஸ் நடை பெற்றதைக் கண்டபோது, ''காரியம் அவ்விதமானால் நான் அதை என் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன்'' என்று கூறி தன்னுடைய சிறந்த உடைகளோடு கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றார். 170மூன்று வருடங்களுக்கு முன்பாக நியூ அல்பானி (New Albany) என்னுமிடத்திலுள்ள ஒரு மருத்துவமனைக்கு என்னை அழைத்திருந்தார்கள். அங்கே இந்த சகோ. பஸ்டி ரோட்ஜர்ஸ் புற்று நோயினால் மரித்துக் கொண்டிருந்தார்; புற்று நோயானது அவரைத் தின்றுவிட்டிருந்தது. அடுத்த நாள் காலைவரை தான் அவர் உயிரோடு இருப்பார் என்று கூறிமருத்துவர்கள் கைவிட்டனர். சகோ. பஸ்டிரோட்ர்ஸ், ''சகோ. பிரன்ஹாம் மட்டும் இங்கு வந்தால்!'' என்றார். நான் அங்கே அந்த அறைக்குள் சென்றேன். நான்அங்கு நின்று கொண்டு ஜெபித்தவனாயிருந்தேன். அப்பொழுது அந்த சகோதரன் என்னை நோக்கி, ''பில்லி, அதோ அந்த மூலையில் ஒரு வானவில் தொங்கிக் கொண்டிருக்கிறது'' என்று கூறினார். நான் அதைப் பார்க்கத் திருப்பினேன். நான் அச்சகோதரனைப் பார்த்து, ''பஸ்டி, அது ஒரு உடன்படிக்கை. நீ மரிக்கப் போவதில்லை, அந்த உடன்படிக்கையின் இரத்தம் உன்னை இரட்சிக்கப் போகிறது'' என்று கூறி, என்கைகளை அவர் மீது வைத்து, ''தேவனாகிய கர்த்தாவே, நீர் அங்கு காண்பித்த தரிசனத்தின்படி, நீர் இங்கேயிருக்கிறீர் என்று உறுதிப்படுகின்றது. அவருடைய தழும்புகளால் குணமாகிறோம் என்பதே உம்முடைய உடன்படிக்கையாயிருக்கிறது'' என்று ஜெபித்தேன். நான் என் கரங்களை அவர் மீது வைத்தேன். அப்பொழுது அவர் சுகமடைந்து வீட்டிற்குச் சென்றார். 171இது நான்கு வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம். அவருடைய வயிற்றில் அந்த புற்றுநோய் பருத்த தன்மையாய் ஒரு பெரிய முடிச்சு போன்று காணப்பட்டது. கைத்தேர்ந்த மருத்துவர்கள், கோபால்ட் சிகிச்சையின் மூலமாக அந்த முடிச்சை நீட்டி விடலாம் என்று ஆலோசனைக் கூறியிருந்தார்கள். ஒரே சமயத்தில் அதிக ஆகாரம் அவருக்கு செலுத்தப்படட்டும் என்றார்கள். ஆனால் அவருக்கோ அதிக ஆகாரம் எடுத்துக் கொள்வது கடினமாயிருந்தது. ஏனெனில், அவர் மிகவும் மெதுவாக சாப்பிட வேண்டியிருந்தது. அவர் அங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. பின்பு அவர்கள் அறுவை சிகிச்சை செய்தார்கள். சம்பவித்தது என்னவென்றால் அவருடைய சரீரத்தின் இடது பாகத்தை அது வாதத்திற்குள்ளாக்கி விட்டது. அவரால் சிறிது மட்டுமே கூப்பிட முடிந்தது. அந்த நிலையிலும் தனது நடுங்கும் மற்றொரு கையினால் அவர், ''இயேசு, 1900க்கும் மேற்பட்டவர்களை இரட்சித்திருக்கிறார்'' என்று எழுதினார். அவரது இடது கரமோ பக்கவாதத்தினால் தாக்கப்பட்டிருந்தது. அதை அவர்கள் புரிந்துகொள்ள முடியவில்லை. அப்பொழுது அவருடைய மனைவி, ''சகோ. பிரன்ஹாமே, இதன் மூலம் இவர் எதை சொல்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினாள். அப்பொழுது நான், ''சகோதரி ரோட்ஜர்ஸ் அவர்களே, 1900க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டு இவரால் இரட்சிப்பிற்கு வழி நடத்தப்பட்டிருக்கிறார்கள், அதையே அவர் தன்னுடைய காணிக்கையாக செலுத்துகிறார். ஆகவே, அவர் மரிப்பதற்கு பயப்படவில்லை; இதுவே அதன் அர்த்தமாயிருக்கிறது'' என்று கூறினேன். பின்பு நான் கர்த்தரை நோக்கி, ''தேவனாகிய கர்த்தாவே, அவருடைய ஜீவனைக் காப்பாற்றும்!இயேசுவின் நாமத்தினால் இவருடைய ஜீவனைக் காப்பாற்றும்'' என்று ஜெபித்து என்னுடைய கரங்களை அவர் மீது வைத்தேன். உடனே அந்த வாதம் அவரை விட்டு நீங்கி எல்லா இழுப்புகளும் நின்றுவிட்டது. பின்பு அவர் எழுந்திருந்து படுக்கையில் உட்கார்ந்தார். இப்பொழுதும் அவர் அதைக் குறித்து சாட்சியுடையவராயிருக்கிறார். 172உன்னுடைய விசுவாசத்தோடு வல்லமையையும், வல்லமையோடு தேவ ஞானத்தையும், தேவ ஞானத்தோடு தன்னடக்கத்தையும், பொறுமையும், தேவ பக்தியையும், தேவ பக்தியோடு சகோதர சிநேகத்தையும், பரிசுத்த ஆவியின் அன்பையும் கூட்டிக்கொள்; அப்பொழுது அங்கு கிறிஸ்து வருவார். ஏனெனில் அவருக்குக் கீழாக... பரிசுத்த ஆவியானது இயேசு கிறிஸ்துவின் பரிசுத்த ஆவி சபைக்குள்ளாக இத்தகைய வல்லமைகளை பிரத்தியட்சமாக்குகிறவரா யிருக்கின்றார். ஓ, என்னே! நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முன்பு அவர் நேசித்ததால், நீ ஒன்றுமில்லாமலிருக்கும் போதே, சம்பாதித்தார்; (அவர் என்ன செய்தார்?) என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். இதை நான் எவ்விதம் அறிவேன்? அவர் என்னை முன்னமே முதலில் நேசித்தார். நேசிக்கிறேன், நேசிக்கிறேன், முன்பு அவர் நேசித்ததால், (அதுதான் காரணம்.) சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில். 173இந்த என்னுடைய சரீரமான ஆலயத்தில் தேவையான இந்த சுபாவங்கள் அவருடைய கிருபையாலும், உதவியாலும் பொழியத்தக்கதாக இடைவிடாமல் நான் அவரை தினமும் என் முழு இருதயத்தோடும் தேடுவேன் என்று இக்காலை என்னை சமர்ப்பித்து அவரிடம் உறுதியெடுத்துக் கொள்கிறேன். நான் அவரைப் போன்று நீதியாக மாறுவதற்காகவும், ஜீவிக்கிற கிறிஸ்துவின் வெளிப்படுத்தலாக மாறுவதற்காகவும், அவர் எனக்காக பாவமானார். அவர் என்னுடைய இடத்தை எடுத்துக் கொண்டார். கர்த்தாவே, நான் அவருடையதை சுதந்தரித்துக் கொள்ளட்டும். ஏனெனில், அதற்காவே அவர் எனக்காக மரித்தார். உங்களில் எத்தனை பேர் கர்த்தருடைய கிருபையால் அத்தகைய உறுதிமொழியெடுக்கிறீர்கள்! (சபையார், ''ஆமென்'' என்று கூறுகின்றனர் - ஆசி) தலைகள் குனிந்தும் கரங்கள் உயர்த்தப்பட்டும் இருப்பதாக. நேசிக்கிறேன்... (நான் சமர்ப்பிக்கிறேன் கர்த்தாவே, இந்த சபை தன்னை சமர்ப்பிக்கின்றது. அந்த பரிபூரண கிறிஸ்துவின் வளர்ச்சியுண்டாகட்டும்.) முன்பு அவர் நேசித்ததால், சம்பாதித்தார் என் இரட்சிப்பை, கல்வாரி மரத்தில்.